What do you think?

சுஜாதாவின் நாடகங்கள்: முழுத்தொகுப்பு
சுஜாதாவின் நாடகங்களின் முழுத் தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த வீடு, அடிமைகள் உள்ளிட்ட 22 நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. வாசிக்கப்பட்டபோதும் நிகழ்த்தப்பட்டபோதும் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் ஆழ்ந்த மனக்கிளர்ச்சியை இந்த நாடகங்கள் ஏற்படுத்தின. உரையாடல்களின் கூர்மையும் கதாபாத்திரங்களிடையே நிகழும் தீவிர மாறுதல்களும் உறவுகளின் விசித்திரங்களும் இந்த நாடகங்களை நவீன வாழ்க்கை முறையின் துல்லியமான சித்திரங்களாக்குகின்றன.
- GenresFiction
832 pages, Hardcover
First published December 1, 2005
About the author
Sujatha
312 books1,397 followersSujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
April 9, 2022
800 பக்கங்களுக்கும் மேலுள்ள இந்த தொகுப்பில் சுஜாதாவின் ஏழு நீண்ட நாடகங்களும், பதினைந்து குறு நாடகங்களும் உள்ளன. இவற்றில் எது மேன்மையானது என்று நிச்சயம் செய்ய முடியாத அளவு அத்தனையும் அருமையானவை.
நீண்ட நாடகங்களில் என்னை மிகவும் கவர்ந்தவை இந்த நான்கும்: பாரதி இருந்த வீடு, கடவுள் வந்திருந்தார், அடிமைகள், (நான் முன்னமே படித்துள்ள) டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு .
குறு நாடகங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஆகாயம், சேகர், இரண்டும் sci-fi வகையைச் சேர்ந்தவை. வாசல் நாடகத்தைப் படிக்கும் சமயம் வயிறு குலுங்கச் சிரித்தேன். முதல் நாடகம் (ஒரு கொலை), வந்தவன், மாறுதல், பிரயாணம் - இவை அனைத்தும் இறுதியில் எதிர்பார்க்காத திருப்பத்துடன் சுவாரசியமாக அமைந்துள்ளன.
மொத்தத்தில், சந்தேகமே இல்லாமல் இது ஒரு 5-ஸ்டார் தொகுப்பு.

November 20, 2022
இந்தப் புத்தகத்தில் உள்ள பல நாடகங்கள் மிக அருமையானவை. என்னை மிகவும் கவர்ந்தவை என்றால், ஊஞ்சல், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, வந்தவன், அடிமைகள், கடவுள் வந்திருந்தார் வாசல், பாரதி இருந்த வீடு போன்றவை.
கடவுள் வந்திருந்தார் நாடகத்தை மறைந்த பாரதி மணி அவர்கள் நடிப்பில் பார்த்து ரசித்திருக்கிறேன். பூர்ணம் விஸ்வநாதன் நடித்து இந்த நாடகத்தைப் பார்த்ததில்லை.
பூர்ணம் நடிப்பில், ஊஞ்சல், அடிமைகள், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு போன்றவற்றை பார்த்து மிகவும் ரசித்துள்ளேன்.
சுஜாதா எழுத்தில் நாடகங்கள் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் மிக சுவாரசியமாக உள்ளன. கடவுள் வந்திருந்தார் நாடத்தைப் படிக்கும் போது பல முறை வாய்விட்டு சிரித்து, என் மனைவி "என்ன ஆச்சு உங்களுக்கு?" என்று கேட்ட காமெடியும் நடந்தது.
கதைகள் / கட்டுரைகள் மட்டுமல்ல நாடகங்கள் எழுதும் விஷயத்திலும் சுஜாதா பெரிய தில்லாலங்கடி தான்.