Jump to ratings and reviews
Rate this book

புனலும் மணலும்

Rate this book
தமிழ்ப் புனைகதையின் களம் குடும்பப் பின்னணயிலிருந்து விலகி பரந்த பின்புலமாக உருப்பெற்று வந்த காலப் பகுதியில் எழுதப்பட்ட நாவல் ‘புனலும் மணலும்.’ சம்பிரதாயமான குடும்பப் பின்னணியும் அதன் சிக்கல்களும் இந்த நாவலிலும் உண்டு. ஆனால் அந்தச் சிக்கல்கள் மட்டுமே நாவலின் மையமல்ல … இந்நாவலின் மீது சொல்லப்பட்ட விமர்சனங்களைப் பின் தள்ளிவிட்டு ‘புனலும் மணலும்’ நாவல் இன்றும் சமகாலத்தன்மையுடன் நிலைத்திருக்கிறது. இன்று பரவலாக விவாதிக்கப்படும் பிரச்சனைகளுடன் படைப்பு காலத்தைக் கடந்து உறவுகொண்டிருக்கிறது. நாவல் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட முன்கால மனநிலை இன்று மாறியபோதும் நாவல் நிகழ்காலத்துக்குரியதாக விளங்குவது, சமகாலப் பிரச்சனைகளின் தொடர்பால் என்று கருதுகிறேன். மேலும் அழுத்தமாகச் சொல்வதென்றால் இன்றைய பிரச்சனைகள் பற்றிய அறிகுறிகளை நாவல் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அடையாளம் கண்டிருக்கிறது. படைப்பில் நிகழும் இந்த ‘தீர்க்கதரிசன’மே ‘புனலும் மணலும்’ நாவலை மறுவாசிப்பில் கூடுதல் கவனத்துக்குரியதாக்குகிறது.

A novel based on sand mining of rivers. Ecological consciousness pervades this work written much before the term became fashionable.

167 pages, Paperback

First published January 1, 1974

3 people are currently reading
43 people want to read

About the author

A. Madhavan

8 books5 followers
A. Madhavan (ஆ. மாதவன்) was a Tamil writer born and raised in Thiruvananthapuram, Kerala. He was one of the pioneers of realist writing in modern Tamil literature. He has written short stories, novels, essays, and translations and has edited magazines. Furthermore, he was acclaimed by readers and critics alike as the storyteller of the market street, for bringing everyday events of the bazaar he lived in to his literary work.

He was the recipient of the 2016 Sahitya Academy Award for his collection of articles titled Illakkiya Chuvadukal (Literary Traces).

Selected works
Punalum Manalum (On a River’s Bank)
Krishna Parunthu (Brahmini Kite)
Thoovaanam (Drizzle)
Kaalai (Bull)
Ettavathu Naal (Eighth Day)

Translations from Malayalam:
Malayatoor Ramakrishnan’s Yakshi (A Mythical Being)
P.K. Balakrishnan’s Ini Gnan Urangatte (And Now, Let Me sleep)
Karoor Nilakantapillai’s Sammaanam (Reward)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (21%)
4 stars
20 (47%)
3 stars
9 (21%)
2 stars
4 (9%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Sudeeran Nair.
93 reviews20 followers
January 25, 2024
புனலும் மணலும் - ஆ. மாதவன். - 1974

தமிழ் இலக்கிய உலகில் அறியப்படாத ஆளுமை. தனக்கென்ற ஒரு நடை (தமிழம், மலையாளமும் கை கோர்த்த அழகு நடை) இவர் அரசியல சார்பற்ற. எழுத்து தான் எழுத்தாளனை இலக்கிய உலகிலிருந்து வெளி உலகிற்கு காட்டாமலே புதைத்து விட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது. சாகித்ய அகாடெமி விருதிற்கு பிறகுதான் இப்படியொரு எழுத்தாளன் இருக்கிறார் என்பதே வெளியுலகின் பார்வையில் பட்டது.

மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார். எழுத்திற்கு கிடைக்காத மரியாதை கூட அதிகம் எழுதவதை தவிர்த்திற்கலாம்.

அ.மாதவனின் புனலும், மணலும் ... காலக்கட்டம் 1974. பிறப்பதற்கு நான்காண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டிருக்கிறது. களம் ஆறும், நீரும், மணலும் சார்ந்த எளிய மக்களுடான சாதாரண கதை என்றாலும் அவர் அதனூடே காதலையும், உறவுச் சிக்கல்களையும், நட்பின் மகோதன்னத்தையும், உறவின் பெருமையையும், ஆற்றாமையையும், கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும், கிராமப் புற எளிய வாழ்வையும், பாலத்தின் வழி நகருடன் இணையும் போதான நாகரீக மாற்றத்தையும், இயற்கையின் பெரும் கொடையைப் பற்றியும், பேரழிவு பற்றியும் கதையினுள் புகுத்தி நகர்த்தி செல்வது அருமை.

மாதவனின் கதை மாந்தர்கள் சுயநலமுள்ளவர்களாகவும் மற்றும் அற்றவர்களாகவும் மேலும் நியாயத்திற்கு உட்பட்டவர்களாகவும் உலா வரும் பெரும் மனம் கொண்ட சாமான்ய மனிதர்கள் .

கதைக்குள்ளே அங்குசாமியின் பேரழகியான தங்கம்மையிடம் தன்னை அழகிய காதலால் ஒப்பு கொடுக்கும் நேரம் அவலட்சணத்துடன் பிறக்கும் அவளது முதல் கணவனின் குழந்தையான பாங்கியை கடைசி வரை ஏற்காமலே போவதும், அங்குசாமி வளர்ப்பு பிள்ளையாக வரும் தாமோதரன் அந்த பெண்ணை எந்தவொரு உளைவுமில்லாது தங்கையாக ஏற்பதும் மனிதனின் யதார்த்த உறவு சிக்கலின் வெளிப்பாடே.

ஏதோவொரு பிடிப்பு தான் மனித வாழ்வை நகர்த்திக் கொண்டேயிருக்கிறது. அங்குசாமிக்கு தங்கம்மையும், பாங்கிக்கு தாமோதரனும் உடனான பிடிப்பே வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றி நடத்தி செல்கிறது. அந்த பிடிப்பு அறுகின்ற தருணமே கதையின் போக்கை மாற்றி விளிம்பு வரை நகர்த்தி முடிவையும் தருகிறது.

அங்குசாமி மற்றும் சமூகத்தால் ஏளனத்திற்கும் உள்ளாகும் பாங்கி அங்குசாமியை தகப்பனாகவே ஏற்றுக் கொள்வதும், எந்த உறவும் தொடர்பும் அற்ற தாமோதரனை தன் சொந்த அண்ணனாகவே ஏற்றுக் கொள்வதும் பாங்கியின் வெள்ளந்தி மனநிலையை காட்டுகிறது.

தாமோதரனுடைய அன்பும் பரிவும் முயற்சியும் பாங்கியை மாயாலோகத்திலிருந்து எகிறி குதித்து யாராவது ஒருவன் ஏற்று கொள்வான் என்ற நினைப்பை தந்து விடுகிறது.

சிறுங்கதை களத்தில் இயற்கையையும், வளமையையும் அதை அன்பாய் நேசிக்கும் போது தரும் பெருங் கொடையான மணலென்னும் பொன்னும் அந்த குடும்பத்தின் எளிய வாழ்விற்கு போதுமானதாய் அமைதலும், அறிவியலின் வளர்ச்சியும், கிராமப்புற மேம்பாடும் மனிதர்களை பெருக்க அதன் வழி இயற்கை நுகர்வும் பெருத்து ஆற்றின் போக்கையும் அதன் கொடையையும் அழித்து மனிதர்களை வாழ்வாதரத்தை தேடியான புலம்பெயர்தல் அபாயத்தையும் உணர்த்தி விடுகிறார்.


மலையாளம் கலந்த தமிழ் மொழிநடை வாசிக்க பேருவகையைத் தருகிறது. இன்றைய இளம் வாசிப்பாளர்களுக்கோ, தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கோ கொஞ்சம் அசுவராஸ்யத்தைத் தரலாம். அதை தவிர்க்க கதையின் கடைசியில் வழக்காடு மொழிக்கான தமிழ் விளக்கமும் தந்திருக்கிறார். முதலில் அதை படித்து பின் கதையை படிக்கலாம்.
Profile Image for Jayaprakash Satyamurthy.
Author 43 books518 followers
December 29, 2019
I read this in an English translation. A lyrical, empathetic tale of life on the edge - on the edge of the river, as those earning a living by dredging sand from it literally undermine their own living, and as a runaway builds a family around him, one that, it seems, cannot survive his smouldering hatred of his step daughter. A memorable, vivid novel.
Profile Image for இரா  ஏழுமலை .
140 reviews8 followers
September 17, 2024
ஆ மாதவன் இயற்கையை மனிதன் அழிக்கிறான் என்ற கருத்தை அவர் காலத்திலேயே தொடங்கி வைத்திருக்கிறார் அது இன்று மிகப்பெரியதாக வளர்ந்து இயற்கை மீதான அக்கறையை மனிதன் அடைந்திருக்கிறான் அதனால் தான் நாவல் இன்னும் வாசிக்க கூடியதாக இருக்கிறது. சாதாரண மக்கள் தங்கள் வாழ்வை நகர்த்திச் செல்வதற்கான உந்துதலை எங்கிருந்த பெறுகிறார்கள்? அவர்களுக்குள்ளே இருக்கும் உறவுச் சிக்கல்கள் பற்றியும் இந்த சிறிய நாவல் விவாதிக்கிறது. மலையாளம் கலந்த தமிழும் கடுமையான வட்டார வழக்கு சொற்களும் வாசிக்க சற்று தடையாகத்தான் இருக்கிறது.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.