இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் முதல் பாகம் இது.
சுதந்தரத்துக்குப் பிறகான முதல் முப்பதாண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளை அதன் சமூக, வரலாற்றுப் பின்புலத்துடன் விவரிக்கும் முக்கிய முயற்சியே இந்தப் புத்தகம்.
ராஜாஜியின் ஆட்சி, ஆந்திரப் பிரிவினை, குலக்கல்வி, காமராஜர் காலம், பக்தவத்சலத்தின் வருகை, இந்தி எதிர்ப்புப் போராட்டம், திமுகவின் வளர்ச்சி, காங்கிரஸின் வீழ்ச்சி, அண்ணாவின் ஆட்சி, திமுகவின் பிளவு, கச்சத்தீவு, எமர்ஜென்ஸி, சர்க்காரியா கமிஷன் என்று மிக விரிவான களப்பின்னணியுடன் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், ஒவ்வொன்றின் உள்ளரசியலையும் ஆதாரங்களுடன் பதிவுசெய்கிறது.
கீழவெண்மணிப் படுகொலைகள், முதுகுளத்தூர் கலவரம், மதுவிலக்கு ரத்து என்று சமூகத் தளத்தை உருமாற்றிய நிகழ்வுகளின் மெய்யான அரசியல் பின்னணியைப் படம்பிடிக்கும் இந்தப் புத்தகம், அன்றைய தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானித்த இன்றைய அரசியலின் அடித்தளமாக இருக்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனை நிகழ்வுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறது.
வெறுமனே காலவரிசையாக அல்லாமல் நிகழ்வுகளையும் அவற்றை இயக்கிய அரசியல் தலைவர்களையும் உயிர்ப்புடன் கண்முன் நிறுத்துகிறார் ஆர். முத்துக்குமார்.
தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியான?ஆடு.. புலி.. அரசியல் தொடரின் நூல் வடிவம்.
பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.
தமிழக அரசியல் என்றைக்குமே மந்தமாக இருந்ததில்லை, அது முதல் தேர்தலில் இருந்தே சுவாரசியமும் உற்சாகமும் கூடவே பல திருப்புமுனைகளும் கொண்டது. இந்திய அரசியலில் பெரிய அளவு செல்வாக்கை தமிழக அரசியல் தலைவர்கள் செலுத்தியுள்ளார்கள் என்பது இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் புலப்படுகிறது. படிக்கச் படிக்கச் ஆச்சர்யத்தை தூண்டிக் கொண்டே இருக்கிறது அண்ணன் அவர்களின் எழுத்து. அதையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமர்ந்து படித்தது கூடுதல் மகிழ்ச்சி.
முதல் தேர்தலில் இருந்தே தமிழக அரசியல் பெரியாரை சுற்றியே நடந்தேறியுள்ளது, ஓமரத்தூர் ராமசாமிக்குள் ஒரு பெரியார் ராமசாமி இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்த போதே இது தொடங்கி விட்டது. அதன் பின் பெரியாரின் கமராஜர் ஆதரவு, திமுக விமர்சனம், 1967 வெற்றிக்கு பின் அண்ணா பெரியாரை சந்தித்தது, கலைஞரை முதலைமைச்சராக்க தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது, திமுக பிளவை எதிர்த்தது என பெரியாரின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைக்கும் ஏதோ ஒரு வகையில்.
அதே போல் மாற்று மாற்று என கமல் ஹாசன், சீமான் போன்ற அரசியல் கோமாளிகள் தேர்தல் வந்தால் மட்டும் வெளிவருகிறார்கள், வரலாற்றிலும் அப்படி தான். இதை தாண்டி கம்யூனிஸ்டுகளின் இடத்தை திமுக பிடித்தது தேர்தல் அரசியலுக்கு பிறகு தான், கம்யூனிஸ்டுகளும் தங்களை உறுதிப்படுத்த கொள்ள தவறிவிட்டார்கள், தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுமைக்கும் இது தான் நிலை.
சமூக நீதி அரசியல் என்பதும், மக்கள் நல திட்டங்கள் என்பதும் தமிழக அரசியலின் ரத்தத்தில் ஊறியது என்று தான் சொல்ல வேண்டும், யார் ஆட்சியில் இருந்தாலும் அதை கடைபிடித்து தான் வந்துள்ளார்கள். தங்களுக்குள் பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் தமிழக நலன் சார்ந்த உரிமை சார்ந்த போராட்டங்களில் அவர்கள் ஓரணியில் நின்று தான் எதிர்கொண்டுள்ளார்கள்.(எம் ஜி ஆர் அதிமுகவை தொடங்குவதற்கு முன் வர இது தான் நிலவரம் ).
1972 இல் தனி கட்சியை தொடங்குகிறார் எம்ஜிஆர், அது வரை கொள்கையை பேசி கொண்டிருந்த தொண்டர்கள், இந்த நிகழ்வுக்கு பிறகு தனிமனித துதி பாட தொடங்கி விட்டார்கள். இதன் காரணமாக பல பிளவுகள் நிகழ்ந்தன ஒரு கட்டத்தில் பல முன்னணி தலைவர்கள் அதிமுகவிற்கு சென்று கொண்டிருந்தார்கள்.
அதிமுகவிற்கு என்று தீர்க்கமாக ஒரு கொள்கை இருந்ததே இல்லை,கட்சி ஆரம்பித்து சில மாதங்களுக்கு பிறகு தான் கொள்கையை அறிவித்தார் எம்ஜிஆர், அவர் சொன்னது “அண்ணாயிசம்”. அதற்கு அர்த்தம் இவருக்கே தெரியாது. மாநில சுயாட்சிக்கு அவர் குடுத்த விளக்கம் கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியதற்கு நிகரானது. “We want neither independence nor dependence but inter-dependence” என்று கட்சியை அன்றைக்கே இந்திரா காந்தி அம்மையாரிடம் அடகு வைத்தது தனி சிறப்பு. எமர்ஜென்சியை ஆதரித்த ஒரே கட்சி தமிழகத்தில் அதிமுக மட்டும் தான். எமெர்ஜென்சியை காரணம் காட்டி அதிமுக, அஇஅதிமுக ஆனது. இன்னொரு பக்கத்தில் திமுக ஆட்சி கலைக்க பட்டது,காரணம் எமெர்ஜென்சி எதிர்ப்பு.
சுதந்திரம் முதல் எமெர்ஜென்சி வரை தமிழக அரசியலில் நிகழ்ந்த மாற்றங்களை இந்நூல் காலவரிசை அடிப்படையில் விளக்குகிறது. இரண்டாம் பாகம் வாசிப்பில் உள்ளது படித்து விட்டு அறிமுகம் எழுதுகிறேன்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இக்காலகட்டத்தில் , இது போன்ற வரலாறுகளை புரிந்து வைத்துக்கொள்வது அவசியமானது. நமது வேர்களை அறிய வரலாறு படிப்போம்.
புத்தகம்: தமிழக அரசியல் வரலாறு -பாகம் 1 ஆசிரியர்: ஆர் முத்துக்குமார்
Reading on leaders like Kamarajar and Annadurai is inspiring. Karunanidhi's brave stance during Emergency and M.G.R's amateur announcements in the initial years of ADMK formation are highlights.
தமிழக அரசியல் வரலாறு:பாகம் 1 - அனைவரும் படித்து, புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. ராஜாஜி முதல் எம்.ஜி.ஆர் வரை. வந்து வந்து போகும் விடுதலை தாகம், இந்தி திணிப்பு, மிக கொடுமையான விஷயம் கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு காட்டிய அலட்சியம்.#மிசா: தமிழகம் மட்டும் தான் சுதந்திர காற்றை சுவாசித்தது- JP. மத்திய அரசின் அடக்குமுறை,சிலரின் சூழ்ச்சியால் வீழ்த்தபட்ட வரலாறு. அண்ணாவின் தலைமையில் தி.மு.க எனும் இளம் பிள்ளை கண்ட சாதனைகள். 70 களில் கலைஞர் காட்டிய தைரியம். எம்.ஜி.ஆரின் பிரிவு._/\_ மின்னல் வேக வரலாறு. ஆவலுடன் பாகம் 2 !
"அரசியல்ல இதெல்லாம் சாதாரனமப்பா" என்ற ஒரு வரி தான் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் மீண்டும் நினைவில் வந்து போனது. நீதிக்கட்சியில் தொடங்கிய தமிழக அரசியல் எதிர்பாரா திருப்பங்களையும், அதிரடி காட்சிகளையும் அவ்வப்போது அரங்கேற்றி கொண்டே வந்திருக்கிறது.
நீதிக்கட்சியில் இருந்து திராவிடர் கழகம் பிறந்ததும், திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் பிறந்ததும், திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பிறந்ததும் என ஒவ்வொன்றின் பின்னணியும் தெளிவாகவும் விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும், தமிழக அரசியலிலும் மாபெரும் அதிர்வினை ஏற்படுத்திய முதுகுளத்தூர் படுகொலை, கீழ்வெண்மணி படுகொலை குறித்தும் சுருக்கமாக பேசப்பட்டிருக்கின்றன.
இந்திரா பார்த்தசாரதியின் "குறுதிப்புனல்" நாவலை சமீபத்தில் வாசித்தேன். அதனால் அந்த சம்பவம் நிகழ்ந்த போது ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகம் எப்படி கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர தவறியது மற்றும் அந்த சம்பவம் அரசியலில் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பது குறித்தெல்லாம் அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன். இந்த புத்தகம் கீழ்வெண்மணி சம்பவம் குறித்த புத்தகம் அல்ல என்றாலும் இதில் சுருக்கமாக கீழ்வெண்மணி படுகொலையும் அண்ணா அதனை கையாண்ட விதமும் பேசப்பட்டிருக்கின்றன.
காமராஜர், எம்ஜியார், ராஜாஜி என்று புனித பிம்பம் கொடுக்கப்பட்டிருக்கும் அனைவரின் அரசியல் முடிவுகளும் கொள்கைப்பிடிப்புகளும் கூட்டணி கூத்துகளும் சிரிப்பை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தின் அரசியலை விறுவிறுப்பான நடையில் வாசித்து தெரிந்து கொள்ள மிகச் சரியான புத்தகம்.
நான் அதிக நேரம் விரும்பி செலவு செய்த சில புத்தங்களில் இதுவும் ஒன்று. சுதந்திரத்திற்கு பிறகான தமிழ்நாடு அரசியல் வரலாற்றை விரிவாக விவரிக்கும் நூல்.தற்போது வரையிலும் கூட தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி தோன்றவில்லை. இதற்கு காரணம் திராவிட கட்சிகளில் தோன்றிய தலைவர்கள் தான்.இராஜாஜி தொடங்கி எம்.ஜி.ஆர் ஆட்���ி வரை அவர்களது அரசியல் வரலாற்றை எளிமையான எழுத்து நடையில் விரிவாக விவரிக்கும் நூல் இது.
ஒவ்வொரு தேர்தலிலும், தமிழகத்தை பாதிக்கும் பல பிரச்சினைகள் இருத்த போதும் அன்றிலிருந்து இன்று வரை இந்தி திணிப்பு, இட ஒதுக்கீடு ,ஈழத்தமிழர் பிரச்சினை இதற்கு மட்டுமே கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம். பல தேர்தலில் இவற்றை சார்ந்தே முடிவுகளும் அமையப் பெற்றன.
கட்சிகள், மத்திய அரசியலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,காவிரி பிரச்சனை, கூட்டணிகள்,கச்சத்தீவு விவகாரம், விடுதலைப் புலிகள், சாதிக் கலவரங்கள், எமர்ஜென்சி என அத்தனை நிகழ்வுகளையும் கால வரிசையாக பதிவு செய்து உள்ளார்.
சில இடங்களில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார். சர்க்காரியா கமிஷன் பற்றிய பகுதியை மழுப்பலாக எழுதியுள்ளார். இதனை நீக்கி விட்டு பார்த்தோமானால் அரசிலை தெரிந்து கொள்ள நல்ல புத்தகம்.
இன்றைய இளைய தலைமுறைக்கு அரசியல் பற்றிய பின்புலத்தை அறிந்து கொள்ள நிச்சயம் இந்நூல் பயன் உள்ளதாக இருக்கும்.
Tamilaga Arasiyal Varalaru is a two-part series adapted from the author’s newspaper columns. Considering the medium, the author wisely employs simple language and brevity, focusing only on the key causes behind major political events—often presented in clear lists. The narrative captures inspiring moments, such as the formation of new parties by leaders after breaking away from their own. In the end, the book effectively portrays Tamil Nadu politics as a field where “all is fair in love and war.”
The strong education policies of Kamarajar paved the foundation for Tamil Nadu’s present industrial strength, setting the stage for the state’s long-term development. Following him, Anna emerged as a leader whose powerful oratory and mastery of simple, evocative language reshaped political communication—skills later borrowed and adapted by many others. The stability of the DMK after Anna, contrasted with the decline of the Congress, stands out as a defining theme. M.G.R. then entered as a rare actor-politician with genuine administrative knowledge, something his peers in Tamil cinema often sought but never truly matched. Finally, the entry and eventual downfall of Jayalalithaa illustrate a hard truth—that gaining power may be easier than retaining it, especially with weak networks and isolation. Through all these shifts, Tamil Nadu remained consistent in resisting Hindi imposition while demanding stronger federal governance, distinguishing itself as one of the few states to uphold such a stance so firmly.
As it is mentioned in the cover page of the book, this is a perfect one to know the political events happened in my state(Tamil Nadu) from Independence till Emergency. The author had done lots of research over the events by reading many newspapers and biographies of many leaders and clearly framed the events historically. I got to know many political issues and events happened in Tamil Nadu in the past and also the leaders connected with those. It also covers the role of Dravidian parties in Tamil Nadu politics. Really inspired about political skills of Perarignar Anna and Karunanidhi.
தமிழக அரசியல் வரலாறு மிக சிறப்பாக எழுதப்பட்ட நூல். அந்த கால அரசியல் சூழ்நிலைகளையும் மனிதர்களையும் கண்முன்னே காட்டிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள். இன்று காலெஞ்சென்றர்கள் மற்றும் மிக மூத்த அரசியல்வாதிகளின் ஆரம்ப அரசியல் அனுபவங்கள் வியக்க வைக்கின்றன. மிகுதியான ஆர்வத்துடன் இரண்டாம் பாகத்தை வாசிக்க ஆரம்பிக்கிறேன்.
I wish I can read the book on the political history of Tamilnadu from an author who is not a dravidian fanboy. It does cover the story from post independence to formation of DMK, Kamarajar era, formation of Andhra, Tamilnadu, Kerala, the anti Hindi protests, formation of ADMK to what happened during the emergency - All from a DMK lens. The other side of the story is totally absent.
Good book but it is not Neutral , so it rise questions like whthere everything written in this book is true or false.
I suggest , find some book written by someone who is not part of any party so we can understand history clearly. I regret that I should have read review before start this book , after some point you will understand about author intenstion.