சுதந்திரப் போராட்டத்தின்போது 1934 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தமிழ்நாட்டில் 23.2.1934 முதல் ஒரு மாத காலம் ரெயிலிலும் காரிலும் வண்டியிலும் பயணம் செய்தார்.
அப்போது காந்தியுடன் சென்றவர்களில், திருச்சியில் பிரபல டாக்டராக இருந்தவரும், பிற்காலத்தில் காங்கிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றவருமான டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் முக்கியமானவர். காந்தியடிகளின் சொற்பொழிவுகளை இவர் தமிழில் மொழிபெயர்த்தார்.
இப்பயண அனுபவங்களை அவர் சிறு நூலாக எழுதினார். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் அந்நூல் புதிய வடிவமைப்பில் இப்போது வெளிவந்துள்ளது. மகாத்மா காந்தியுடன் நாமும் சுற்றுப்பயணம் செய்த உணர்வை இந்நூல் ஏற்படுத்துகிறது.