விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களாலும், அவரது நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். ஜெயமோகனின் குறிப்பிடத்தக்க படைப்பான "விஷ்ணுபுரம்" நாவலின் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. 2010-ல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் பொது ஒருங்கிணைப்பாளர் கே.வி.அரங்கசாமி. விஷ்ணுபுரம் விருது விழா ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார். கோவை நகரை மையமாக்கி செயல்படுகிறது. அமெரிக்காவில் இவ்வமைப்பின் இணையமைப்பு உள்ளது. அதை வி.சௌந்தர்ராஜன் ஒருங்கிணைக்கிறார்.