என் கதைகளில் எந்தத் தவறுமில்லை.தவறு என்று சொல்லப்படுகிற அனைத்தும் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால்,நம் காலத்தைத் தாங்கிக் கொள்ள உங்களால் முடியவில்லை என்றுதான் அர்த்தம். - சாதத் ஹசன் மண்ட்டோ
Saadat Hasan Manto (Urdu: سعادت حسن منٹو, Hindi: सआदत हसन मंटो), the most widely read and the most controversial short-story writer in Urdu, was born on 11 May 1912 at Sambrala in Punjab's Ludhiana District. In a writing career spanning over two decades he produced twenty-two collections of short stories, one novel, five collections of radio plays, three collections of essays, two collections of reminiscences and many scripts for films. He was tried for obscenity half a dozen times, thrice before and thrice after independence. Not always was he acquitted. Some of Manto's greatest work was produced in the last seven years of his life, a time of great financial and emotional hardship for him. He died a few months short of his forty-third birthday, in January 1955, in Lahore.
மண்ட்டோ வை முதல் முறையாக வாசித்தேன், கண்ணீரும், ரத்தமும், சதையுமான எழுத்துகள்.... அரை பக்கத்திற்கு ஒரு சிறுகதை எழுத முடியுமா அதுவும் அவ்வளவு ஆழமாக.... நீங்காத பிரம்புடன். 🙏🙏🙏🙏
அவமானம் நன்றாக எழுதப்பட்டுள்ள கதை. ஒரு விபச்சாரியின் அவமானம் எந்த அளவு அவளை பாதிக்கிறது என்பதை அருமையாக விவரிக்கப்பட்டுள்ளது. படித்து முடித்தபின் எதுவோ தவறியுள்ளது போன்ற உணர்வு. Something is missing. But its worth reading.
I came to know about the author after Kamal Hassan told about this book in Big Boss 4 . I got the book (Translated in Tamil ) and read the book within 45 minutes. This is my first book by Sadat Hassan Manto. It is an engaging story about a sex worker and her mind.
இவரின் அறிமுகம் எனக்கு திரு. உலகநாயகன் கமல்ஹாசன் மூலம். முதன் முதலில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராய் வந்தபோது, ஒரு சில வாரங்களுக்கு பின் என்று நினைக்கிறேன், புத்தக பரிந்துரைகளை ஆரம்பித்திருந்தார். அதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டேன். 4 பருவங்கள் வரை அந்நிகழ்ச்சியை பார்த்தேன். அதன்பின் தொடரவல்லை. இப்போதும் அவர் பரிந்துரைகள் செய்கிறார் என்று என் வட்டாரம் செய்தியை மட்டும் பரிமாறியதே தவிர, என்ன புத்தகங்கள் என்ற செய்திகள் எட்டவில்லை.
அவமானம் - அந்த பரிந்துரை பட்டியலில் முதலில் இடம்பெற்ற நூல். தலைப்பும், எழுத்தாளரின் பெயரை, அவர் உச்சரித்து பரிந்துரை செய்த விதமுமே, இதனை, அன்று முதல் படிக்க வேண்டும் என்று தூண்டிக்கொண்டிருந்த விடயங்கள். வாசிப்பை பழக்கமாக்கி கொண்ட பின்பு, மாதத்திற்கு ஒரு முறையாவது, இப்புத்தகம் நினைவில் எழாமல் இருந்ததில்லை. ஆனால், அதனை வாசிக்கும் நேரம் இம்மாதம்தான் வாய்த்திருந்திருக்கிறது.
இந்நூல் அவரின் முக்கிய சிறுகதைகளாய் கருதப்பெற்ற சில, தொகுக்கப்பெற்று, அவரின் நூற்றாண்டிற்கு 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம்பெற்ற கதைகளை வாசிக்கும்போது, என் உணர்வில் எழுந்தவைகளை, நினைவிலிருந்து மீட்டி, இங்கே நீட்டுகிறேன் :
காலித்- சில சமயங்களில். நமக்கு நெருக்கமானவர்களுக்கு நேரவிருக்கும் துன்பம் நமக்கு முன்கூட்டியே தெரியப்பெற்று, அதனாலேயே மனம் அலைக்கழிக்கப்படுவதாய் உணர்ந்திருப்போம், உணருவோம். அது சில சமயங்களில் நடந்துவிடவும் கூடும். அப்படி நடந்திட கூடாது என்று நம்மால் முடிந்தவரை நாம் நம்பும் ஒரு சக்தியிடம் முறையிடுவோம். சில சமயங்களில் அது நடப்பதற்கான சாத்திய கூறுகளினூடே பயணிக்கும் தூரத்தின் பாரம் தாங்காமல், நடந்துதான் ஆகவேண்டும் என்றால் சீக்கிரம் நடத்திவிடு என்று முறையீட்டையே மாற்றிவிடுவோம். அது அவ்வுணர்வுகண்ணியை துண்டித்து விட எண்ணுவதாலேயா? அது எப்படியும் நடக்கப்போகிறது என்ற எண்ணம் வலுப்பெறுவதாலேயா? நம் விடுதலைக்காகவா? அடுத்தவரின் விடுதலைக்காகவா? சொல்லத் தெரியவில்லை. இக்கதையும் அது போலத்தான். ஒரு கட்டம் வரை அடுத்தவர் நலனுக்காய் (இரத்த உறவே இருந்தாலும் கூட) எண்ணும் ஆன்மா, இறுதியில் தன்னலனில் நிலைத்துவிடுவது இயற்கையா? அல்லது, ஊழின் கருவியா?
அவமானம் - இந்த தொகுப்பின் தலைப்பாய் அமையப்பெற்றது. சுகந்தியின் வாழ்க்கையையும், அவளை சுற்றியுள்ள மனிதர்களையும், நாக்கில் தேன் தடவும் அம்மனிதர்களின் சில பேச்சுகளையும், கனவுகளாய் விரியும் காதல்களையும், காதலர்களையும், கணவர்களையும், அவளை அனுதினமும் அவமானப்படுத்தும் இரவுகளையும் உள்ளடக்கிய கதை. சமூகத்தால் தினமும் இழைக்கப்படும் கொடுமைக்கூட அவளுக்கு கொடுமையாகவோ, அவமானமாகவோ அவளுக்கு தோன்றாது. அவள் எது ‘தான்’ என்று நம்பிக்கை வைத்திருந்தாளோ, அதில் கல்லெறிந்து போகும்போதுதான், மனம் கொதித்து எழுகிறாள். அந்த கலக்கத்தில்தான் தெளிவும் அடைகிறாள். ஒரு விதத்தில், காலித் கதையில் வரும் மும்தாஜிற்கும், சுகந்திக்கும் ஒற்றுமையிருக்குமோ என்று தோன்றிற்று.
திற - மண்ட்டோ 50களில் வாழந்தவர். பெரும்பாலும் இத்தொகுப்பில், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போது நடந்த கலவரங்களும், அதில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் காட்டுவதாயிருக்கிறது. இக்கதையில் நடப்பது, இன்றளவும் அரங்கேறுகிறது என்று நினைக்கையில், அருவருப்பாக, அவமானமாக இருக்கிறது. இதை கருவாக வைத்து 90களில் ஒரு தமிழ்படமும் மற்றும் இக்கதையின் உச்சத்தில் விரியும் அக்காட்சி அப்படியே தமிழ் சினிமாவின், பிரம்மாண்டத்திற்கு பேர் போன இயக்குநரின் படத்தில் உண்டு. அக்காட்சி, கண்டிப்பாக திரைக்கதை எழுதிய பிரபலமான எழுத்தாளர் மற்றும் கலைஞானியின் கலந்துரையாடலில் தோன்றியிருக்கக்கூடும். இக்கதை, மொத்த தொகுப்பினில் என்னை பாதித்த ஒன்று என்றே சொல்லவேண்டும். இதில் இன்னும் ஓர் இழையை உரித்தெடுத்தோமானால், தந்தையின் (சிராஜூதின்) கதாப்பாத்திரத்தில் எழுத்தாளர் மாபெரும் ஒரு சிந்தனையை விட்டு சென்றிருக்கிறார். தந்தை கூறும் கடைசி வரி - மேலோட்டமாய் யோசித்தால், அவருக்கும்,சுகந்திக்கும், மும்தாஜிற்கும் ஒற்றுமையிருக்குமோ என்று தோன்றும். ஆனால், அவருக்கு, இவ்வுலக வாழ்வில் எது முக்கியமாகப்பட்டதோ அதை சுற்றியே அவர் யோசனையும், அதற்கு பாதிப்பில்லை என்ற தெரிந்ததும், அந்த உற்சாகத்தின் வெளிப்பாடாகவும் தான் அவ்வரிகள் என்று எனக்கு தோன்றியது. அபாரமான கதை.
சஹாய்- இதனை வாசிக்க தொடர்ந்தபோதும் ஒரு தமிழ்படம் நினைவில் எழுந்தது. அதுவும் கலைஞானியே. இந்தியின் King Khan, உடன் சேர்ந்து நடித்திருந்தார். மதவெறி சண்டைகளை முன்னிறுத்தி நகரந்த கதை களம். அந்த களத்தில் பல கதைகள் தமிழ் சினிமாவில் வந்திருக்கிறது என்றாலும், கலைஞானியின் அப்படமும், அதில் உள்ள திருப்பமுனை காட்சியும், இக்கதையில் ஒரு வரியை படித்தபோது, அப்படியே ஒத்துபோனது. என்னை கவர்ந்த வரிகள் : துப்பாக்கிகளால் மதத்தை ஒழித்து விடலாம் என்று நினைப்பவர்கள. முட்டாள்கள். மஸாப், தீன், இமான்,தர்மா, நம்பிக்கை - இவையெல்லாம் மனித உடலில் இல்லை. ஆன்மாவில் இருக்கிறது.
சில்லிட்டுப் போன சதைப் பிண்டம்- குல்வந்த் கெளர் - மனிதனின் தன்னலத்தை வெளிப்படுத்தும், இன்னும் சொல்லப்போனால், தன்னலத்தின் உச்சத்தில் மனதிரிபடையும் ஒரு நிலையையும், எதிராளியின் நிலையைப்பற்றி கருத்தில் கொள்ளாது, கழுத்தில் கூர் வைப்பது போலான செயல்களில் ஈடுபடும் மனிதனின் நிலையைப்பற்றியும் குறிப்பிடுவதாய் அமைத்த கதாப்பாத்திரம். அதற்கு அவர் கருவாய் எடுத்துக்கொண்ட விடயம், திற கதையின் பின்புலமே. இப்போது சிந்தித்துப் பார்த்தால், நான் முன்பு சொன்னதுபோல இன்னும் ஓர் இழையை உரித்தோமென்றால், குல்வந்த் கெளர் கதாப்பாத்திரத்தின் மூலம், அநீதி இழைக்கப்பட்ட ஓர் ஆன்மாவிற்காக இவள் மூலம் பதில் கொடுத்ததாயும் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இன்னுமோர் இழையின் அடியில், அவர் சொல்ல வருவது எல்லாமே ‘சில்லிட்டு போகும் சதை பிண்டமே!’
அறியாமையின் பயன்கள்- இதில் மனிதனின் குரூரத்தை வெறும் ஒரு பக்கத்தில் விவரிக்கிறார். வெட்கித் தலை கவிழ்தேன்.
அதிசய மனிதன் - அதிசயத்தின் வாயில் திறக்க, வாய் பிளந்து தினந்தோறும் வாழ்வில் காத்திருக்கும் அதிசய மனிதர்களை பற்றியது. இதுவும் ஒரு பக்க கதை.
மிருகத்தனம் - இது நான் மிகவும் ரசித்த ஒரு பக்க கதை. மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்ற ஜி.நாகராஜன் கூற்றுக்கு ஏற்ற கதை. மிருகத்தனம் என்பதை விட மிருகக்குணம் என்பது இன்னும் பொருந்தும் என்று தோன்றுகிறது. மிருகங்களிடையே, குறிப்பாக தாய் மிருகங்களிடம் உள்ள குணம். மனிதன் தன்னை காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்வான்னு தெரிஞ்சுக்கிட்டேன் என்ற சுஜாதாவின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. (எந்திரன் - சிட்டி சனாவிடம் கூறுவது). இக்கட்டான சூழ்நிலையில், மனிதன் தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை, இங்குள்ள ஒவ்வொரு கதையிலும் சொல்லிக்கொண்டே வருகிறார். அம்மாதிரியான சூழ்நிலையிலும், தன்னை நம்பியவருக்காக துடிப்பதே இங்கு மிருகத்தனம் (என் கூற்றில் மிருகக்குணம்).
ஜவ்வுமிட்டாய் - மிட்டாய் தலைப்பிலும் மிரட்சியை காட்டும் 12 வரிகள். அவ்வளவே. அதில் மொத்த காட்சிகளையும் விரித்தெடுக்க செய்துவிட்டார். இக்கதையின் ஒரு குறிப்பு, 10 வருட நண்பர் கண்ட நிலைமையை நினைத்துப் பார்க்க வைத்துவிட்டது. அவருக்கு இதில் தேவைப்பட்ட உப பொருள் கூட தேவைப்படவில்லை. அக்குழந்தை கடைசியில் சொன்ன வரிகள் இவரின் கடைசிக்கு பொருத்தம். கடந்த 30 நிமிடங்களாய், அவர் பெண்ணிற்கு ஏனோ குறுஞ்செய்தி செய்ய சொல்லி மனசு சொல்வதையும் மீறி, இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன், சட்டென்று அவர் வந்து இங்கு என் எழுத்தில் விழுந்துவிட்டார்.
விட்டுக்கொடுத்தல் - 4 வரிகள் கதை ,பெற்றவரின் கதறலுக்கு கணிந்து, அவர் மகளை கொலை செய்யாமல் விட்டுக்கொடுத்த விதம் அ***ம்.
மோசமான வியாபாரம் - வீணான ரோசம்
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்- சம்பவங்களினூடே அலைக்கழிக்கப்படும் ஒரு போலீஸின் நியாயமான கோரிக்கை.
மண்ட்டோ, எதிர்வினைகள்-பதில்கள், அங்கிள் சாம்-ற்கு - தன்னை பற்றி வரும் கேள்விகளுக்கும், முரண்பாடுகளுக்கும் பகடியாய் பதில் சொல்லியிருப்பது தெரிகிறது, முதல் 2 கதைகளில். மூன்றாம் கதையில், வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் குறித்தும், மற்றும் அக்கால அரசியலின் அடிப்படையிலும் பகடியாய் ஒரு கடிதம். இது முழுதாய் புரிந்துக் கொள்ள அக்கால அரசியல் நிலவரம், உலகளாவில் ஒரு மேலோட்டமாய் தெரிந்திருந்தால் நலம். எனக்குத் தெரியவில்லை, ஆகையால் புரியவில்லை.
அவமானம் என்றோ, பல நாட்களுக்கு முன்பே , இதன் தலைப்பும், அந்த அட்டை ஓவியமும் கவர்ந்ததினால், இப்புத்தகத்தை என் வாசிக்க வேண்டிய பெட்டகத்தில் வைத்திருந்தேன். பல நாட்கள் கழிந்து, அண்மையில், வாங்க முடிந்தது, வாசிக்க முடிந்தது. இது சிறிய புத்தகமே, சில சிறிய கதைகளை உள்ளடக்கியதாயினும், நான் இதை முழுவதும் படித்து முடிக்க, சற்று தாமதாக தான் ஆனது. முதல் காரணம், முதல் சிறு கதை, அதை படித்து முடித்த பின், நான் அடுத்த கதைக்கு நகர, சிறு தயக்கம் ஏற்பட்டது, ஸ்வாரஸ்யம் காரணம். ஆனால், அவமானம் என்ற கதையை படிக்க ஆரம்பித்த போது, என்னால் நிறுத்த முடிய வில்லை. அது என்னை இறுதி வரை அழைத்து சென்றது. ஒவ்வொரு வரியும் மிகுந்த ஆழமான கருத்துடையவையாக இருந்தது. இந்த கதையில் வரும் மாந்தர்கள், என்னை ஆட்கொண்ட விதம், அவ்வளவு தாக்கத்தை உருவாக்கியதை உணர்ந்தேன். அது என்னை மிகவும் சிந்திக்க செய்தது. இது மற்றுமொரு காரணம் , இந்த தாமதத்திற்கு. அதன் பிறகு வந்த ஒவ்வொரு சிறு கதைகளும், மிகுந்த ஆளமான சமூகத்தை (ஊசியை நேராக கழுத்தினுள் குத்தும் வலியை போல்) நம்மை நோக்கி அதன் கேள்விகளை முன் வைக்கிறது. எந்த எதிர்மரையும் இல்லாத வார்த்தைகள், நேரடியான, அழுத்தமான கதைகள். மிகவும் நேர்மையான படைப்பு.
உருது மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளரான மண்டோவின் சிறுகதைத் தொகுப்பு இப்புத்தகம். மண்டோவின் பெரும்பாலான எழுத்துக்கள் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையும் பின்தொடர்ந்த மதக்கலவரங்களும் பின்னணியாக கொண்டவை. சமுதாயம் "நாகரீகம்" என்ற செயற்கை எல்லைகளை வரைந்தபோது மண்டோ அதை தூக்கி எரிந்தார். கற்பனைகளுக்கு கடிவாளம் போட மறுத்தார்.
இதனால் அவர் படைப்புகள் மனதை உருக்குவதோடு வாசிப்பவரை உருகுலைக்கிறது. இவ்வகையில் "திற!" என்று ஒரு சிறுகதை குறிப்பிடத்தக்கது. கலவரத்தின் மையத்தில் பெற்ற மகளை தொலைத்து மன்றாடும் தந்தையின் பரிதவிப்பை தத்ரூபமாக எழுதியிருப்பார் மண்டோ. கதையின் முடிவு எல்லையற்ற துயரத்தை தந்தது.
பாக்கிஸ்தான் உருவாக்கப்பட்டபோது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மனிதம் சிதைந்தது. குடும்பங்கள் கலைந்தன. மனிதனை மனிதனாக பாராமல் ஏதோ ஒரு மதத்தை சார்ந்த சதை பிண்டமாக பார்க்கும் அவலம் ஏற்பட்டது. நட்பு, காதல் , பாசம், பரிவு போன்ற மனித உணர்வுகள் மறைந்து வெறுப்பு, குரோதம், ஆவேசம் போன்ற மிருக உணர்வுகள் ஆக்கிரமித்தன. "சஹாய்" என்ற படைப்பில் பாலிய நண்பனையே கொல்லத் துணியும் வெறுப்பும் "மிருகத்தனம்" என்ற கதையில் மிருகத்திடம் இருக்கும் இரக்கம் கூட மனிதனுக்கு இல்லாமற் போவதும் காணலாம்.
மண்டோவின் பெண்ணியம் தனித்துவமானது. நவீன பெண்ணியத்திற்கு அப்பாற்பட்டது. "அவமானம்" என்ற படைப்பில் வேறு தொழில் செய்யும் பெண்ணின் மன ஓலங்களை கூறியிருப்பார். சமூகம் அவளை சக மனிதியாகப் பாராமல் செய்யும் தொழிலை வைத்து முத்திரையிட்டு ஒதுக்கும். அர்த்தமுள்ள காதலையும் நடப்பையும் ஏங்கி தவிக்கும் அவளுக்கு மிஞ்சுவதேல்லாம் அவமானம் மட்டும் தான்.
மண்டோவின் எழுத்து படிப்பதற்கு எளிதல்ல. புரிதலும் சரி, ஏற்றுக்கொள்வதும் சரி - வாசிப்பவர் முனைப்பு மிகவும் அவசியமானதாகும்.
I always loving reading sadat haasan munto s books. It speaks mostly on indo-pak partition stories, the real incidents that took place. Society cant just feel ashamed of author penning this kind of narration. I feel that it is the exact reflection of our society how it worked. Also I love the way he brings US political games in limelight. It is too satirical and the incidents he brings up on surface cant be believed. But we need to admit it has happened in past. Brave n Courageous author to speak out his mind.
இந்தியாவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் சாதத் ஹசன் மண்ட்டோ. அவர் எழுதிய பல சிறுகதைத் தொகுப்புகளில் ஒருசிலவற்றை உள்ளடக்கிய சிறுகதை தொக��ப்பு இப்புத்தகம் இந்த உலகத்தில் எதை எல்லாம் அநீதி,பாவம், புனிதத்தன்மை மீறல் என்று சொல்லப்படுகிறது அவற்றை செய்வாரே கதையின் மாந்தர்களாக கொண்டு அதன் மூலம் சமூகத்தில் நிலவும் பிறவினை வாதத்தையும் வன்முறையையும் தனக்குரிய பாணியில் எழுதி இருப்பது சிறப்பு அதிலும் திற, அவமானம், சிலுத்துப் போன சதைப்பிண்டம் போன்ற சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்கள் உலகத்தால் வஞ்சிக்கப்பட்டு கொடுமைக்கு உள்ளாகும் கதாபாத்திரங்களை வைத்து நம்மை கேள்வி கேட்க வைத்தது மிகவும் சிறப்பு
இந்த புத்தகத்தை Instagram-ல் ஒரு பதிவில் பார்த்துத்தான் முதலில் தெரிந்து கொண்டேன். எல்லோரும் “இந்த நூல் மிகவும் பாதிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். மூன்று நாட்களுக்கு முன்பு யதார்த்தமாக இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.
முதலில் எனக்கு ‘மண்டடோ’ யார் என்பதும், அவர் எழுதும் பாணியும் தெரியவில்லை. கொஞ்சம் படித்தபின் தான் அவர் பற்றித் தெரியத் தொடங்கினேன். முதல் கதையைப் படிக்கும்போது ஒன்றுமே புரியவில்லை. இரண்டாம் கதை படிக்கவே சில நாட்கள் ஆகிவிட்டது — வேலைகளும் இருந்ததால். ஆனால் மூன்றாம் கதையிலிருந்து அவர் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்பதை உணரத் தொடங்கினேன்.
கதைகள் மனதில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஐந்து வரிகளில் எழுதப்பட்டாலும், ஐந்நூறு வரிகளின் தாக்கம் உண்டு. சில கதைகள் நெற்றியில் அடித்த மாதிரி — மிகவும் காயப்படுத்தும். சில கதைகள் இன்னும் புரியவில்லை. நான் ரிலாக்ஸாகப் படிக்கெடுத்த புத்தகமிது. அதனால் தவறான தேர்வு செய்துவிட்டேனோ என்று நினைக்கிறது, ஏனெனில் ஒவ்வொரு கதையையும் புரிந்து கொள்ள கஷ்டமிருக்கிறது; புரிந்த கதைகள் மனசை உடைக்கிறது.
இப்போதாவது புரிகிறது — இந்த கதைகள் எல்லாம் சாதாரணமாகப் புரிய சொல்லப் பட்டவை அல்ல; நாம் மனிதர்களாக உணரும் நிலைகளை நெருக்கமாகத் தொடும் வகையில் எழுதப்பட்டவை. நல்ல நூல் தான். எங்கோ நான் படித்த ஒரு சிறுகதையில் சிறப்பு அதன் தாக்கம்; அது நமது மனதில் காலம் முழுவதும் நிலைக்கும்” என்று இருந்தது. மண்ட்டோவின் கதைகளும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். புரியாதவற்றையும் மெதுவாகப் புரிந்து கொள்கிறேன்.பாதிப்பை ஏற்படுத்திய கதைகள்:'திற', விட்டுக்கொடுத்தல், சஹாய்
புத்தகம்: அவமானம்( மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு) ஆசிரியர்: தமிழில் ராமாநுஜம் பக்கங்கள்:96 பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் நூலங்காடி : மூர் மார்க்கெட் பழைய புத்தக கடை. விலை : 70 🖋️ "என்னுடைய கதைகள் அசிங்கமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் , நீங்கள் வாழும் சமூகம் அசிங்கமாக இருக்கிறது என்று பொருள் . அந்த உண்மையை நான் எனது கதைகள் மூலம் அம்பலப் படுத்த மட்டுமே செய்கிறேன் " என்று மண்ட்டோ வரிகளில் கதை தொடங்குகிறது. 🖋️சாதத் ஹசன் மண்டோ என்னும் வடமொழி எழுத்தாளரின் படைப்புகளின் தொகுப்பே இப்புத்தகம். 🖋️காலித் , அவமானம்,திற,சஹாய்,திற ஜவ்வு மிட்டாய்,அதிசய மனிதன்,சில்லிட்டு போன சதை பிண்டம், முன்னெச்சரிக்கை ஏற்பாடு , மோசமான வியாபாரம் என்ற தலைப்புகளில் சிறு கதைகள் அமைந்துள்ளது. 🖋️முஸ்லீம் மற்றும் இந்துக்கள் இடையே நடந்த லாகூர் மத கலவரங்கள்,விலை மாந்தர்கள் என்றே கதை களம் பிணைக்கப்பட்டு உள்ளது. 🖋️ " மோசமான வியாபாரி " என்ற 15 வரிகளை கொண்ட கதை படித்த பின் உங்கள் மத வெறிக்கு ஒரு அளவு இல்லையா என்று தோன்ற வைத்தது. 🖋️" திற" என்ற சிறுகதை கண்களில் நீர் கோர்க்க வைத்து . 🖋️ மண்ட்டோவை மீண்டும் மீண்டும் வாசிப்பது நம்மை நாமே வாசிப்பதாகும் . 🖋️நான் படிக்க எடுத்துக் கொண்ட நேரம் 1 மணி நேரம் 40 நிமிடங்கள். வாசிப்போம் ,வாசிப்பை சுவாசிப்போம்.. Do follow and support @puthagaparinthurai
The book is tamil translation of urdu short stories collection written by manto. The books talks more on stories around partition. The crudeness with which the author has presented the story makes it difficult to digest, but realizing that this could be actual, makes us feel bad. The short stories are full of emotion and requires some amount of big heart to digest some. Also some of the feelings that they book tries to portray are a bit difficult to get, but that is also the charm of the short read.
The first half of the book is so good that it subsides the last half which was not that pleasing a read. For more thoughts on the book in tamil please visit the link - https://youtu.be/y3RtJeQGnZg
மண்டோவின் படைப்புகளை படித்துவிட்டு நம்மால் எளிதாக கடந்து செல்ல முடியுமானால் கேள்விக்குறி தான்! மண்டோ உடைய எழுத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் கூறியதிலிருந்தே விளங்கி கொள்ளலாம் "என்னுடைய கதைகள் அசிங்கமானதாகவும் கேவளமானதாகவும் இருப்பதாக நீங்கள் நினைத்தால் நீங்கள் வாழும் இந்த சமூகம் தான் அப்படிப்பட்டது, என்னுடைய வேலை சமூகத்தை பிரதிபலிப்பது தான்" மேற்கூறியது போல் மண்டோ உடைய கதைகள் சமூக அவலங்களை பற்றி பேசும். ஆனால் அவர் அப்பழுக்கற்ற மனிதராகவே வாழ்ந்து மறைந்தார். மண்டோ - மகத்தான கலைஞன்.
நான் முழுதும் கண்ணாடியால் ஆன ஒரு வீடாகவும். மண்டோவின் கதைகள் இந்தச் சமூகம் என்னை நோக்கி எறியும் கற்களாகவும் உணர்ந்தேன். எனது கதைகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இந்த அழுகிப்போன சமூகத்தில் மாற வேண்டும் எனும் மண்டோவின் கருத்து மெய்யானது. திற எனும் கதை என் மனதை நொறுக்கியது என்றே சொல்ல வேண்டும். அவமானம், சாஹத் ஆகிய கதைகளும் ஆங்கிள் சாமுக்குக் கடிதமும் மிகவும் நேர்மையானவை.
ஒரு அவமானம் ஒரு வாழ்க்கையின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்து ம் அது நன்மைக்காகவும் விட்டு செல்லும் அல்லது தீமைக்காகவும் விட்டு செல்லும். அவமானங்களை வென்று சரித்திரத்தை படைக்க வேண்டும் என்பது ஆசிரியரின் கனவாக இருக்கலாம்.
Each and every story is written in such a way that it feels so real and hits you like anything. I won't be able to any of these forget these stories cause I've been haunted by them.
Not very impressed with the short stories,except the one about a sex worker. I'd say the stories are just so flat and doesn't live upto the "Title". Very average read.