மகாராணி அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தாள். அவள் கிடந்த இடத்தில் சென்று அவள் ஆடையையும் ஆராய்ந்தாள். இடைக்குக் கீழே இருந்த ஆடையின் ஒரு பகுதி கிழிந்திருந்தது. அதை யாரோ புரட்டி சாமர்த்திய மாகக் கிழிசல் தெரியாமலும் அந்தப் பெண்ணின் உள்ளழகு தெரியாமலும் மறைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட ராஜமாதா, அந்த மனிதன் தீப்சந்தாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்தாள். ராஜமாதா அந்தப் பெண்ணின் அருகில் உட்கார்ந்து தலையின் குழலைப் பிரித்து சோதித்தாள். அத்தனை அடர்த்தியான கரிய குழலைக் கண்டு ராஜமாதா சிறிது பொறாமைகூட கொண்டாள். ஆனால் அந்தக் குழலுக்கு இடையில் கசிந்திருந்த ரத்தக் கரையைக் கண்டதும் சினத்தின் பிம்பமாகத் திகழ்ந்தாள், “ தீப்சந்த்! இந்த அக்கிரமத்தைச் செய்தவர்கள் யார்? எங்கு இந்தச் சம்பவம் நடந்தது?” என்று வினவினாள். “அந்த இழிச்செயலில் வேறு யார் இறங்குவார்கள்? ராணாவின் வீரர்கள் தான்.” என்றான் தீப்சந்த் சினம் குரலில் துலங்க. “யார் சந்தாவதர்களா, சக்தாவதர்களா!” என்று ராம்பியாரி வினவினாள். “சந்தாவதர்கள் தான். ராணாவின் மெய்க்காவலர்கள்” என்றான் தீப்சந்த். - மகாராணி பிரமை பிடித்து நின்றாள். சந்தாவதர்களை விசாரிக்கும் திறன் தனக்கோ தன் மகனுக்கோ இல்லாததை உணர்ந்தாள். மகன் அரியணையைக் காத்து நிற்கும் சந்தாவதர்களில் யாரைத் தொட்டாலும் விபரீதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்ட மகாராணி பேசவும் முடியாமல் திகைத்தாள். தீப்சந்த் அவள் சிந்தனையைக் கண்டான்; முகத்தில் ஏற்பட்ட மருட்சியைக் கண்டான்; ராணாவின் முகத்தில் விரிந்த கிலியையும் கண்டான்; சோம்ஜியின் முகத்தில் விளைந்த பிணக்குகளையும் கண்டான். அந்த இடத்தில் இந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்காது என்ற முடிவுக்கும் வந்து, “மகாராணி! மொகலாயர்கள் தான் பெண்களைத் தூக்கிச் செல்லும் பழக்கமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது ராஜபுத்திரர் பண்பாடும் அந்த லட்சணத்துக்கு வந்திருக்கிறது. நீதிக்கும் வீரத்துக்கும் பெயர்போன மேவாரில் இரண்டுக்கும் இடமில்லை போலிருக்கிறது. சரி நான் வருகிறேன்” என்று கூறி விட்டுக் கீழே கிடந்த பெண்ணை எடுக்க முயன்றான். அப்பொழுது ஒலித்தது ராஜமாதாவின் குரல், “நில் தீப்சந்த்” என்று. பெண்ணை எடுக்கக் குனிந்த தீப்சந்த் எழுந்து நின்று ராஜமாதாவை ஏறிட்டு நோக்கினான். “மகாராணி! என்ன சொல்கிறீர்கள்? நியாயம் வழங்கப்போகிறீர்களா?” என்று வினவினான். மேவாரில் நியாயமில்லையென்று யார் சொன்னது?” என்று ராஜ தோரணையில் பேசிய ராஜமாதா, “இவளைப் பிடிக்க முயன்றவர்களை உன்னால் காட்ட முடியுமா?” என்று வினவினாள். “இருவரைக் காட்ட முடியும்” என்றான் தீப்சந்த். “மொத்தம் எத்தனை பேர்?” “நான்கு பேர்.” “மற்றவர்கள்?” “இருவரை நான் கொன்றுவிட்டேன். மற்ற இருவரைக் கொல்ல முடியவில்லை.” “ஏன்?” “ஓடி விட்டார்கள்.” இதைக் கேட்ட ராஜமாதா சினத்தின் வசப்பட்டு, “அவர்களை யார் உன்னைத் தப்பவிடச் சொன்னது?” என்று சீறினாள். “புரவியிலிருந்து மயக்கமாகிச் சரிந்துவிட்ட இந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டியதாயிருந்தது...” என்றான் தீப்சந்த். ராஜமாதாவின் முகத்தில் கவலை விரிந்தது. “தீப்சந்த் முட்டாள்! உன்னிடமிருந்து தப்பிய இருவரும் சந்தாவதர்களின் தலைவரிடம் விஷயத்தைச் சொல்லியிருப்பார்கள். சந்தாவதர்களின் தலைவர் சலூம்பிரா தமது வீரர்களுக்கு இழைக்கப்படும் தீங்கைப் பொறுக்காதவர். இந்தப் பெண்ணை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ ஓடிவிடு” என்று கூறினாள். தீப்சந்த் மகாராணியை வெறுப்புடன் நோக்கினான், “மகாராணி! உங்கள் யோசனையை மானமுள்ள எந்த ராஜபுத்திரனும் ஏற்கமாட்டான். அதுவும் தீப்சந்த் ஓடுவதா!” என்று கூறி நகைத்தான். மகாராணியின் முகத்தில் திகில் விரிந்தது. “இவளைத் தூக்கிச் செல்ல முயன்ற நிகழ்ச்சி நடந்த இடம் எது?” என்று வினவினாள். “மோகினி வனம்” என்றான் தீப்சந்த். “அங்கு இருப்பது சலூம்பிராவின் தம்பி அல்லவா!” என்று வினவினாள் ராம்பியாரி. “கவலைப்படாதீர்கள். நான் கொன்ற இருவரில் அவனும் ஒருவன்” என்றான் தீப்சந்த். “தீப்சந்த்! சொல்வதைக் கேள். உதயபூரை விட்டு ஓடிவிடு. சலூம்பிரா தனது தம்பியின் மரணத்துக்குப் பழிதீர்க்காமல் உறங்கமாட்டார்” என்றாள் ராஜமாதா... “நன்று சொன்னீர்கள் மகாராணி” என்று கூறிக் கொண்டே உருவிப் பிடித்த வாளுடன் சலூம்பிராஉள்ளே நுழைந்தார். அவருக்குப் பின்னால் நான்கு வீரர்களும் உருவிய வாட்களுடன் உள்ளே நுழைந்தார்கள்.
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
ஜாவுத் கோட்டை முற்றுகையையும் அதிலிருந்து தீப்சந்த் தப்பித்த விதத்தையும் வர்ணித்த விதத்தை தவிர நன்று என்று சொல்வதற்கு ஏதுமில்லை. சுவாரசியமில்லாத நம்பவியலாத திருப்பங்கள், அரதப்பழசான சலிப்பூட்டும் பெண் வர்ணனையும் இது என்ன சரோஜாதேவி நாவலா என்று யோசிக்க வைக்கும் காதற் காட்சிகள் என குறைகள் பல.வாசித்து முடிக்கும் போது ஏன் வாசித்தோம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
தமிழ் சரித்திர நாவல் மீது பற்று கொண்டோருக்கு "சாண்டில்யன்" என்ற பெயர் மிகவும் பரீட்சயப்பட்ட ஒன்றாகும்.
மூன்று பாகங்கள் கொண்ட சாண்டில்யணின் "கடல்புறா"வை தொடங்குமுன் ஒரு முன்னோட்டமாக அவரை அறியும் பொருட்டு நான் வாசிக்க தொடங்கியதே இந்த "மோகினி வனம்"
நாளும் பொழுதும் இன்ப களிப்பில் மூழ்கிய மன்னன் ஆளும் ஒரு நாடும் அதன் நிலைமை எவ்வாறெல்லாம் சீர்கெடும் என்பதையும், நாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பில் உடையவர்களோ மன்னனின் நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சிறு ஊர், நாடு என ராஜ்ஜியத்தையே சுற்றி வளைக்க தீட்டிய சதியும், அச்சதியை முறியடிக்க தீப்சந்த் என்னும் வீரனின் முனைப்பும் அவனின் நாட்டுப்பற்றும், அஞ்சா நெஞ்சமும், கூர்புத்தியும் என கதை ஓட்டம் விறுவிறுப்புடன் நகர..,
இன்னொரு புறம் அந்த வீரனின் காதல் வாழ்க்கையும், அவன் வீரத்திற்கு ஏற்றார் போல் அவனின் காதலியும் அவள் புரியும் சாகசங்களும், இவர்கள் இருவரின் காதல் விளையாட்டுகளையும், அன்பு பாராட்டுதல்களையும் நம் கண்முன்னே காட்சிப் படுத்துகிறார்..,
இதோ மற்றொரு ராஜபுத்திர சரித்திர நாவல் சாண்டில்யன் அவர்கள் எழுதிய முதல் ராஜபுத்திர சரித்திர நாவல் ஜீவ பூமி என்று நினைக்கிறேன் அதில் இருந்து கணக்கு வைத்தால் 11 ராஜபுத்திர நாவலையும் ராணியின் கனவு என்ற சிறுகதை தொகுப்பையும் எழுதி விட்டார் அவருக்கு ராஜபுத்திர கதைகளை எழுதி தான் பிடித்து இருக்கிறது போல தோன்றுகிறது. மோகினி வனம் இந்த கதை ராஜபுத்திர இறுதி காலத்தை அடிப்படையாகக் கொண்டது காமுக அரசனால் நாடு எப்படி அழிந்தது என்பதை எடுத்து உரைக்கும் கதை உள்நாட்டு சதி அதை காக்க நினைக்கும் வீரன் இதற்கிடையில் மராட்டிய படைகள் ராஜபுத்திர நோக்கி வருககின்றன என்பதை சுற்றி கதை அமைக்கிறது இடையில் ராக்கெட் என்று சாண்டில்யன் ஒரு ஆயுதத்தை கூறிபிடுகிறர் உண்மையில் அப்படி ஒன்று இருந்தா. ஆரம்பத்தில் தொய்வு இடையில் அசுர விறுவிறுப்பு இறுதியில் தொய்வு கதையை ஒன்றும் மட்டம் என்று குறிப்பிட முடியாது மிகுந்த அருமையான கதை என்றும் குறிபிட முடியாது ஒரு சாகச கதை படிக்க வேண்டும் என்றால் இதை படிக்கலாம் கதா நாயகி புஷ்பாவதி உண்மையில் கதாநாயகனை மட்டும் கவரவில்லை படிக்கும் வாசகர்களையும் கவர்ந்து விடுகிறாள்
Mewar, Rajputs & how Mathaji Sindhia from MH comes to rescue the cowardly king Rana Bhim Singh, son of Rampyari. Perhaps Deepchand is a fictional character. All said, this is not even close to other novels like கன்னி மாடம், விஜய மஹாதேவி or even ராஜ முத்திரை, forget alone கடல் புறா
This entire review has been hidden because of spoilers.