அர்ஜூனனிடம் கிருஷ்ணன், 'என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம்.
அதற்கு அர்ஜூனன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்' என்றானாம்.
இதைக்கேட்ட கிருஷ்ணன், தனது நண்பனாகவும் விளங்கிய அர்ஜூனனை ஒரு பெரும் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, 'இங்கே என்ன காண்கிறாய்?' என்று கேட்டாராம்.
'அடடா! எல்லாமே நாவல் பழ மரங்கள்! எல்லா மரங்களிலும் கொத்துக் கொத்தாக எவ்வளவு நாவல் கனிகள்!' என்று வியந்தானாம் பார்த்தன்.
உடனே, 'அருகே சென்றுபார், அர்ஜூனா' என்றாராம் கண்ணன். கிட்டே சென்று பார்த்த பாண்டவனுக்கு ஒரே பிரமிப்பு. உண்மையில் அங்கே அவன் பார்த்தது நாவல் பழங்களையல்ல! கொத்துக் கொத்தாகப் பல்லாயிரம் கிருஷ்ணர்கள்!
An excellent story which analyses the existence of God in more detailed manner with thought provoking questions and answers. A good mixture of everyday life versus supernatural events. The writer is an expert on Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation. Excellent writing with amazing plot-twists. The way each knot is finally explained is awesome. I love the format of two parallel interweaved stories of the past and the present
This novel will be cherished by those who admire and follow Hindu dharma. Author deserves great salute for his explanations about various spiritual things connecting them to science. Really was much amazed, how much work he must have done for that analysis and framing.
His other famous books are Ruthra Veenai and Maha Periyavar. Those who can read Tamil should read those two famous books.
Krishna Thandhiram is a different book that ever i have read. Story is very interesting. Indira Soundarajan writing is too good. Krishna will be there everywhere at every time.. I have enjoyed 3 days with Krishna Thandhiram.
தனது சொந்த ஊரான இந்த கிராமத்துக்கு அமெரிக்காவில் மியூசிக் பயின்ற, அந்த ஊரில் மிகப்பெரிய புல்லாங்குழல் மேதையான செல்லப்பாவின் மகள் ஷ்யாமளா வருகிறாள். தன்னுடன் பணிபுரியும் ராகவையும் அழைத்து வந்திருந்தாள். அங்கேயே கொஞ்ச நாள் தங்கி தாங்கள் இசையமைக்கவிருக்கும் புதிய ஆல்பத்துக்கு இன்ஸபிரேஷன் தேடுவதற்காகத் தான் அவர்கள் வந்திருந்தார்கள். வந்த இடத்தில அந்த கிராமமே கொண்டாடும் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு சென்ற போது அங்கேயே வசிக்கும் மாயக்காரன் பைராகி அவர்களை தனது புல்லாங்குழல் இசையால் மயக்கி கொஞ்சம் மாயாஜாலங்களை காமிக்க என்று ஆரம்பிக்கிறது இந்த "கிருஷ்ண தந்திரம்".
போக போக ஷ்யாமளாவின் பிறப்பு குறித்த ரகசியங்கள், பைராகியின் உண்மையான பெயர் மற்றும் அவனது கடந்த கால வாழ்க்கை, செல்லப்பாவிற்கும் பைராகிக்கும் இருக்கும் ஊடல், இன்ஸ்பெக்டர் ருத்ரவின் என்ட்ரி என்று தொடரும் மர்மங்கள் என்று இது ஒரு சீரியஸ் பேஜ் டர்னர்!
ஒவ்வொரு அத்தியாயமும் க்ரிஷ்ணமங்கலத்தில் நடந்த அற்புதங்கள், அங்கே கண்ணன் நடத்திய லீலைகள் என்று ஆரம்பித்து பின் நிகழ் கால மிஸ்டரிக்கு வரும் விதம் அழகு! மன்னார், ருத்ரா, அன்புமணி, தமிழழகன், பட்டர், தாண்டவராயன், திரௌபதி அம்மன் கோவில் பூசாரி, ராகவ், தேவராஜ் மாஸ்டர், கோமளா மாமி போன்றவர்களின் கேரக்டரைசேஷன் "மர்மதேசம்" பார்க்கும் நோஸ்டால்ஜியாவை தந்தது!
மன்னார் - விட்டலாச்சாரியின் உரையாடல்கள் கொஞ்சம் ரம்பம் போட்டாலும் சில இடங்களில் சுவாரஸ்யமாகவே இருந்தது. சில இடங்களில் சில வார்த்தைகளை (குறிப்பாக மலங்க மலங்க) மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால் ஒரு விதமான சலிப்பு.
பொதுவாக மர்ம நாவல்களில் கிளிஷேயாக அன்எக்ஸ்பெக்டட் கேரக்டரை கடைசி நேரத்தில் வில்லனாக்காமல் விட்டு வைத்ததுக்கு நன்றி கூறலாம்! தி க்ளைமாக்க்ஸ் வாஸ் ஒகே! இன்னும் நன்றாக முடித்திருக்கலாமோன்னு ஒரு சிறு நெருடல். எப்படி முடிச்சிருக்கலாம்ன்னு கேட்டா சொல்ல தெரியல! ரைட்டிங் ஸ்டைல் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் மீதொலஜி + மிஸ்டரி கதை புனைவதில் இந்திரா சௌந்தரராஜன்க்கு இருக்கும் ஆளுமைக்கு இந்த கிருஷ்ண தந்திரம் ஒரு எடுத்துக்காட்டு!
The plot is look alike of rudhra veenai ... in this case it is flute not veena and krishna not shiva. But never the less it is still interesting plot with lot of philosophical teachings and thoughts. It is for flashback sequence and philosophical thoughts that the book gets better rating.
Present day story is nothing different lacks intensity or twist anywhere till the last chapter. In the last few pages of present day story author handles plot quite brilliantly, having belief of god and scientific belief in a balance.
கடவுள் இருக்கார் அவரே அனைத்தும் நடத்துகிறார் என்பது விவாதத்துக்கு உட்பட்டது என்றாலும் நம்பியவர்கள் உதவி செய்யும் அனைத்து மனிதர்களையும் கடவுளாகப் பாவிக்கின்றனர் மறுப்பவர்கள் உதவி செய்யும் மனிதர்களை நல்உள்ளம் கொண்ட சகமனிதனாகவே ஏற்றுக்கொள்கின்றனர்.
கண்ணமங்கலத்தில் கடவுள் கிருஷ்ணனின் புல்லாங்குழல் இருப்பதாக ஒரு வரலாறு இருக்கிறது.
இசை படிப்பை முடித்துவிட்டு நண்பன் ராகவ்வுடன் சொந்த ஊரான கண்ணமங்கலத்திற்கு வரும் ஷ்யாமளாவிற்கு வந்த நொடி முதல் புரியப்படாத மர்மங்கள் கொண்ட விஷயங்கள் ஊரில் நடக்கிறது என்று தெரிந்துகொள்கிறாள் அதற்குக் காரணம் ஊருக்குள் வந்த பைராகி என்று ஊர் மக்களால் குற்றம்சாட்டப்படுகிறது.
கிருஷ்ணன் தரிசனம் தருவார் என்ற ஐதீகத்தைப் பிடித்துக் கொண்டு அவரை வரவைக்கப் பைராகிச் செய்யும் செயல்கள் பலித்துத் தான் விரும்பியதை அடைந்துவிட்டே பூமியை விட்டு செல்கிறார்.
பைராகியால் கண்ணமங்கலத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.வந்தது கிருஷ்ணன் என்ற உண்மை பைராகியோடு மண்ணில் புதைந்து போகிறது.
ஒவ்வொரு மனிதனின் ஆசையும் மற்றொருவனுக்குக் கேலிகூத்தாகத் தெரிவதும் இயல்பே...
இன்று நான் முடித்த புத்தகத்தின் பெயர் "கிருஷ்ண தந்திரம்". இந்த புத்தகத்தை எழுதியவர் இந்திரா சௌந்தர்ராஜன். இந்த புத்தகமே நான் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியதில் படிக்கும் முதல் புத்தகம். இந்த புத்தகம் திருமகள் நிலையம் என்னும் பப்ளிகேஷன்ஸ் இடத்தில் கிடைக்கும்.
408 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு ஜனவரி 2010இல் அச்சிடப்பட்டது. நான் வாங்கிய புத்தகம் ஐந்தாம் பதிப்பு - ஜூலை 2018. 2018இல் வாங்கியிருந்தால் நான் ஐந்து வருடம் கழித்து இப்போதுதான் படிக்கும் முடிவு எடுத்தேன் என்பதில் வருந்துகிறேன்.
புத்தகத்தின் விமர்சனம் என்னவென்று என் கருத்தை கூறுவதற்கு முன், மீதம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் கீழே. புத்தகத்தின் விலை (வாங்கிய வருடம்) ரூ 280 இந்த புத்தகத்திற்கு தமிழன் எக்ஸ்பிரஸ் ஆசிரியரான R. சிவகுமார் மதிப்புரை வழங்கியுள்ளார்.
விமர்சனம்: என் தந்தை இந்திரா சௌந்தர்ராஜன் எழுத்தின் விசிறி என்றே சொல்லலாம். தினமும் நான் office முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து புத்தகம் எடுக்கும் நேரத்தில், என் தந்தை வந்து "முடிந்ததா" என்று கேட்பார். காரணம் அவர் எடுத்துகொண்டு படித்து முடிக்க. இந்த வருடம் துவங்கியதும் நந்திப்புரம், சொர்ண ரகசியம் போன்ற புத்தகங்கள் முடித்து விட்டார். இப்பொழுது இந்த புத்தகத்தை படிக்க வெயிட் பண்ணுகிறார். சித்தர்கள், இறை நம்பிக்கை, திரில்லர், மர்மம் போன்ற வகையான புத்தகம் என்று அடிக்கடி என் தந்தை கூறும் சமயம் ராஜேஷ் குமார் எழுதிய crime நாவல்கள் போல இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் புத்தகம் வேற லெவல். எதிர்பார்ப்புக்கு நன்றாகவே உள்ளது. ஒரே கிராமம், இரண்டு கோயில், ஒரு பூசாரி குடும்பம், ஒரு ஐயர் குடும்பம். முக்கால்வாசி இவை இடையே கதை பயணம் செய்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் முடியும் நேரத்தில் "என்னடா ஆகும் அடுத்து" என்று தூண்டி இழுத்து செல்லும் கதை களம். Climax படித்து முடிக்கவே இரவு தூக்கத்தை தியாகம் செய்து வெயிட் செய்தேன். இரவு நேரங்களில் படிப்பதால் மர்மங்களுக்கு ஏற்ற நேரம் போல இருக்கிறது. தனிமையில், படுக்கையில், வெறும் AC fan சப்தத்தில் படிக்கும் சுகமே தனி. முடித்த பின் இப்பொழுது plan செய்த புத்தகங்களை தொடரவா அல்லது இந்திரா சௌந்தர்ராஜன் புத்தகங்களுக்கு மாரவா என்னும் குழப்பம். அலமாரியில் இருந்து சொர்ண ரகசியம், நந்திபுரம், ரங்க ராஜ்ஜியம், இறையுதிர் காடு புத்தகங்களை எடுத்துவிட்டேன். பார்போம் நடக்கும் எதிர்காலத்தை.
புத்தகத்தை படிக்க ஆரம்பித்த நாள் 23 - மார்ச் - 2023 புத்தகத்தை படித்து முடித்த நாள் 30 - மார்ச் - 2023
மதிப்புரை சுருக்கம் 'அர்ஜீன்னிடம் கிருஷ்ணன், என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜீன்ன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்'' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ணன், தனது நண்பனாகவும் விளங்கிய அர்ஜீனனை ஒரு பெரும் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, 'இங்கே என்ன காண்கிறாய்?' என்று கேட்டாராம்.' அடடா! எல்லாமே நாவல் பழ மரங்கள்! எல்லா மரங்களிலும் கொத்துக் கொத்தாக எவ்வளவு நாவல் கனிகள்!'' என்று வியந்தானாம் பார்த்தன். உடனே, 'அருகே சென்றுபார் அர்ஜீனா' என்றாராம் கண்ணன். கிட்டே சென்று பார்த்த பாண்டவனுக்கு ஒரே பிரமிப்பு. உண்மையில் அங்கே அவன் பார்த்தது நாவல் பழங்களையல்லா! கொத்துக் கொத்தாகப் பல்லாயிரம் கிருஷ்ணர்கள்!
No words to say..It's very hard to write a book like this in the combination of mystery+music+enjoyment ..Hare Krishna... Krishna.. Krishna..Hare...Hare