தமிழரின் ஆதி மதம் எது இந்த கேள்வியே உங்களுக்கு சற்று வியப்பு தரலாம், நீயே ஒரு நாத்திகன் தமிழரின் ஆதி மதம் எதுவாக இருந்தால் உனக்கென்ன என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். நாத்திகன் என்பதை விட பகுத்தறிவுவாதி என்பதால் எல்லாவற்றையும் பகுத்தறிய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் தற்போது சமூக ஊடகங்களில் நான் ஒரு போக்கை கவனிக்கிறேன், ஒருபுறம் நான் அம்பேத்கரிஸ்ட் பெரியாரை ஏற்றுக் கொள்ள மாட்டேன், என்று சிலர் சொல்கிறார்கள் வேறு சிலர் நாங்கள் பெரியாரிஸ்ட் அம்பேத்கரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சொல்கிறார்கள். இவர்கள் இருவருமே மடையர்கள் என்பதுதான் எனது கருத்து, பெரியார் இங்கே தமிழில் பேசியவற்றை, அம்பேத்கர் அங்கே மராட்டியில் பேசினார், அங்கே அம்பேத