2017 இல் தொடங்கிய தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், 8 பகுதிகளை கடந்து, இப்போது ஒன்பதாவது பகுதிக்கு வந்திருப்பது என்பது, ஒரு மிக நீண்ட பயணம் என்று தான் சொல்ல வேண்டும். ஆயினும் அந்த பயணத்தில் 2017 முதல் 2021 டிசம்பர் வரை ஒரு பெரிய இடைவெளி உண்டு. பின்னர் 2022 ஜனவரி மாதம் இரண்டாம் பகுதி வெளிவந்தது, அதன் பிறகு அந்த ஒரே ஆண்டில் 6 பகுதிகள் கொண்டு வந்தது ஒரு மிகப்பெரிய வேலை தான், ஆனால் இந்த காலகட்டத்திற்குள் 16 பகுதிகள் கொண்டு வர வேண்டும் என்பது, என்னுடைய நோக்கமாக இருந்தது அதில் பாதி தான் முடிந்திருக்கிறது. இந்த ஒன்பதாம் பகுதியில் நாம் பார்க்கப்போவது தலைப்பில் உள்ளது போல பெருவெள்ளக்கதைகள் அது என்ன பெருவெள்ளக் கதைகள் என்று நீங்கள் சிந்திக்கலாம், உலகில் மிகப் பிரபலமான Ĩ