இஸ்லாமிய போர்கள் என்ற இந்த பகுதியை எழுத வேண்டும் என்ற சிந்தனை முதலில் எனக்கு ஏன் வந்தது என்று கேட்டால், இஸ்லாமிய பொற்காலம் என்று அறிவியலில் விஞ்ஞானத்தில், கணிதத்தில், மருத்துவத்தில் என்று பல்வேறு துறைகளில் 8 ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை சுமார் 500 ஆண்டுகள், இந்த துறைகளில் இஸ்லாமிய அறிஞர்கள் கொடி கட்டி பறந்தவர்கள். ஆயினும் இன்றைக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பார்வை என்னவென்றால், இஸ்லாமியர்கள் என்றால் வன்முறையாளர்கள், கொடூரமானவர்கள், என்பதே அது. இப்படி ஒரு நிலை எப்படி ஏற்பட்டது, உண்மையில் இஸ்லாம் வாள்முனையில் தான் பரப்பப்பட்டதா, அப்படி பரப்பப்பட்டு இருந்தால், அதன் காரணம் என்ன.