பல மாதங்களுக்கு முன்பே மிகவும் ஆசைப்பட்டு வாங்கிய பொத்தகம் தான் இது! ஆனால், இதனை வாசிக்க நேரம் இப்போது தான் அமைந்தது. தலைவர் பிரபாகரன் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டிய ஆர்வம் தான் என்னை அது சம்பந்தப்பட்ட பொத்தகங்களை தேடச் செய்ததது. அப்படி தேடிய போது தான் இந்த பொத்தகம் சரியாக இருக்கும் என்று எனக்கு இந்த பொத்தகத்தை அன்பு அண்ணன் @cheranchenguttuvan_666 அறிமுகம் செய்து வைத்தார்.
எந்த ஒரு சார்ப்புத்தன்மையும் இல்லாமல் வரலாற்றை சொல்லும் பொத்தகமாகவே ஆசிரியர் நடுநிலைமையாக எழுதியுள்ளார். தலைவர் பிரபாகரனின் பிறப்பு, அதற்கு முந்தைய இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள், யார் இலங்கையின் பூர்வக்குடிகள் என்ற வரலாற்று தகவல்களுடன் இந்த பொத்தகம் தொடங்குகிறது. ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநியாயங்கள் என்ன, எதனால் ஆயுதம் ஏந்திய போராளியாக மாற வேண்டும் என்று தலைவர் அவர்கள் முடிவெடுக்கிறார் என்பதையெல்லாம் உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் அவர்கள்.
தலைவர் அவர்கள் ஏற்கனவே இருந்த பல இயக்கங்களுள் ஒன்றில் சேராமல், ஏன் தனியாக ஒரு இயக்கத்தை உருவாக்கினார், அந்த இயக்கத்திற்கு முதலில் இட்ட பெயர் என்ன என்பதையெல்லாம் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
இலங்கை அரசின் அராஜகம், நிலைப்பாடு, தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், சூழ்ச்சிகள் என வேதனையை கடத்துகிறது இந்த பொத்தகம். நாலு ஈழப் போர்களும் எங்கெங்கெ நடந்தன, எதனால் ஒவ்வொரு போரும் தொடங்கியது, இரு தரப்பினருக்கும் எத்தனை உயிரிழப்புகள், எந்தெந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படன என்பவை முதற்கொண்டு இந்த பொத்தகத்தில் தகவல்கள் உள்ளன. விடுதலைப் புலிகள்🐯 உருவாக்கப்பட்ட விதம், அதன் வளர்ச்சி, அதில் உள்ள கட்டுப்பாடுகள், இறுதி வரை 'தனி ஈழம்' என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறாத்தன்மை, உயிரை துச்சமென நினைத்த வீரர்கள் என இவற்றை வாசிக்கும் போதே புல்லரித்தன.
ஈழத்தமிழ் மக்களை துன்புறுத்திய செயல்கள், இலங்கை அரசின் அராஜகம், சில தமிழர்களின் துரோகங்கள், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் இருந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், விடுதலைப் புலிகள் மற்றும் தலைவருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என இறுதியில் மனதை கணக்க செய்தது இந்த பொத்தகம்.
விடுதலைப் புலிகளின் போராட்டம் எப்படி உலக அரசியலாக மாறியது, ஏன் தலைவரின் மரணம் இன்னும் மர்மமாக இருக்கிறது, எத்தனை முறை தலைவர் ஊடகங்களால் கொல்லப்பட்டார், ஈழத்தமிழர்களுக்கு எந்தெந்த வடிவில் துரோகங்கள் இழைக்கப்பட்டன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய பொத்தகம் இது.
அனைவருக்கும் இனிய உலக புத்தக நாள் வாழ்த்துகள்🎉🎊