நண்பர்களே அசுரர் தேவர் வரலாறு என்ற தலைப்பை பார்த்தவுடன், உங்களுக்கு நிச்சயமாக ஒரு கேள்வி எழுந்திருக்கும், நாம் இதுவரை அசுரர் தேவர் என்பனவற்றை புராண கதைகள் என்றுதான் அறிந்து வந்தோம், இப்போது நீங்கள் அதை வரலாறு என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால், இந்த புராணக் கதைகளை எல்லாம் உண்மை என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா, அதுவும் நீங்கள் ஒரு கருப்பு சட்டை போட்ட திராவிட இயக்க சிந்தனையாளர், ஒரு திராவிட இயக்க சிந்தனையாளராகிய நீங்கள் புராண கதைகளை உண்மை என்று வரலாற்று பூர்வமாக நிறுவுவதற்கு முற்படுவது சரியான செயலாக இருக்குமா? என்பதுதான் அந்த கேள்வி என்று எனக்கு புரிகிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய ஆய்வுகள் பெரும்பாலும் மதம் சார்ந்ததாகவும் அந்த மத