"பாபர்" என்ற இந்தப் பெரும்புள்ளியின் பெயரைக் கேட்டவுடன் புருவத்தை உயர்த்துகிறவர்கள் இந்திய முஸ்லிம்கள் மாத்திரமல்ல இந்தியாவில் வாழும் மற்றுள்ள அனைவரும் தான். பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் மற்றும் இந்தியாவின் கிழக்குத்திசையில் வங்காளதேசம் வரையிலும் மிகப்பெரிய நிலப்பரப்பினை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்ய நினைத்த பாபரை, நாம் மட்டுமல்ல, முந்தைய சர்க்ஸந்தரியா எனப்படும் உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான்,கிர்கிஸ்தான்,கஸகஸ்தான்,துருக்மேனிஸ்தான்,அஸர்பைஜான் போன்ற மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தங்களது கதாநாயகனாக, சொந்த மண்ணின் மைந்தனாக கொண்டாடுகின்றனர். ஆசியா முழுக்கவும் பரவலாக அறியப்பட்ட ஒரு மகா சாம்ராஜ்யத்தின் மன்னர