பாபர் எழுதியபடியே ஒரு சொல் மாறாமல் அவரது புத்தகம் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் எழுத்தாளரின் கற்பனைக்கும், மிகைப்படுத்தலுக்கும் இடமளிக்காது, இந்திய முஸ்லிம்களை குதூகலப்படுத்தவும் முயற்சி செய்யாது கிடைத்ததை கிடைத்தபடி படைத்திருக்கின்றோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பாபர் இந்த நூலை எழுதிய காலகட்டம் கிபி.1498 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. அன்று அவர் பேசிய மொழி 'சுகதாய்' எனும் பழைய துருக் மொழியின் ஒரு கிளை மொழியாகும். அவரது காலத்திற்குப் பிறகு முகலாயர்கள் அந்த மொழியை கைவிட்டு ஹிந்துஸ்தானி மொழிகளை பேசப் பழகிக்கொண்டனர். சகதாய்,துருக்,பாரசீகம்,சிந்தி ஆகிய நான்கு மொழிகளின் கூட்டணியே பின்னாளில் உருது மொழி ஆனது.