“நியாயத்தைத்தான் எப்பவுமே பேசுவா இந்தப் பட்டம்மா அ...ஆங்!” எதிரே நின்ற அந்தப் பெண் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தாள். “இன்னாத்துக்கு இப்ப நீ அழுவுற? பொம்பளை கண்ணைக் கசக்கிட்டு நிக்கறதாலதான், அல்லாருக்கும் ஏத்தம்! பிரியுதா?” அவள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணின் அம்மா அருகில் வந்தாள். “பட்டம்மா! ஜோதிக்குக் கல்யாணம் முடிஞ்சு முழுசா ஆறு மாசம் கூட ஆகலை! அதுக்குள்ள அதோட புருசன் அதைத் தள்ளி வச்சுட்டான்!” “எதுக்கு?” “அவனுக்கு வேற ஒரு பொம்பளை கூட தொடுப்பு இருக்குதாம்!” “நெசம்மாவா?” “ஆமா பட்டம்மா! இவளோட நகைகளைப் புடுங்கிட்டுப் போயி, அந்த முண்டைக்குப் போட்டிருக்கானாம்!” “கோவலன் கதையா?” “அவன் யாரையோ வச்சுக்கட்டும்.