“அம்மா நான் சொல்றதைக் கொஞ்சம் புரிஞ்சுகோ!” “என்னடீ புரிஞ்சுகறது? உங்கப்பாவுக்கு ஒரு பக்கம் பிடிவாதம்னா, உனக்கு இன்னொரு பக்கம் பிடிவாதம்! நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கறது நான்!” “இதப்பாரு! வாழப்போறது நான்! அப்பாவா பார்த்து ஒரு முடிவெடுத்துட்டா எனக்கு மனசுக்குப் பிடிக்க வேண்டாமா?” “நான் சொல்றதைக் காது குடுத்துக் கேளு பாரதி! அப்பா ஜாதகப் பைத்தியம். எனக்கும் அதுல நம்பிக்கை இருக்கு! கைக்கு வந்த ஜாதகம் அபார ஜாதகம்! அத்தனை பொருத்தங்களும் அம்சமா இருக்கு. அமெரிக்கால மாசம் ஒண்ணரை லட்ச ரூபா சம்பாதிக்கறான் அந்தப் பையன்! அஞ்சு வருஷம் இருந்தாப் போதும்! நீயும் படிச்சவ! அங்கே போய் சும்மாவா இருப்பே! அஞ்சு வருஷம் கழிச்சுத் திரும்பினா, கோடீஸ்வரியா திரும்ப