Jump to ratings and reviews
Rate this book

நெஞ்சறுப்பு

Rate this book
‘கவிதை, சிறுகதை, நாவல் எல்லாம் அன்பைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. நாமும் வகுப்பில் இலக்கியத்தை நடத்துகிறோம், அன்பைப் பற்றித்தான் தினம்தினம் பேசுகிறோம். கிளாஸ் முடிந்ததுமே அன்பை மறந்துவிடுகிறோம். அன்பைப் பற்றி எழுதியவனுக்கு அன்பு இருந்ததா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஏனென்றால் எழுதுகிறவன் ஒரு முறைதான் எழுதுகிறான். படிக்கிறவனும் ஒரு முறைதான் படிக்கிறான். ஆனால், பாடம் நடத்துகிறவன்தான் தினம்தினம் அன்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான். இருபது, முப்பது வருடங்களுக்கு அன்பைப் பற்றிச் சொல்கிறவனுக்கே அன்பில்லை. இதுதான் இலக்கியத்தின் தோல்வி என்று நான் நினைக்கிறேன். அன்பற்றவர்கள் வகுப்பறைகளிலும், கருணையற்றவர்கள் கோயில்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அன்பைப் பற்றி, கருணையைப் பற்றி. உலகில் அதிகமாகப் பொய் பேசப்படும் இடங்கள் வகுப்பறையும் கோயிலும்தான்...’

199 pages, Paperback

Published January 1, 2024

1 person is currently reading
15 people want to read

About the author

Imaiyam

21 books93 followers
இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (4%)
4 stars
9 (37%)
3 stars
11 (45%)
2 stars
1 (4%)
1 star
2 (8%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Moulidharan.
96 reviews19 followers
January 30, 2024
நெஞ்சறுப்பு

ஆசிரியர் : இமையம்
நாவல்
க்ரியா பதிப்பகம்
200 பக்கங்கள்

ஒரு மொழியில் இலக்கியம் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப அதன் எழுத்து ஆளுமைகள் அதனை செழுமை படுத்தும் அதே நேரம் அதனை அந்த அந்த காலத்திற்கு ஏற்ற புதுமையை அதனுள் புகுத்தி சோதித்து பார்த்து அதில் வெற்றியும் கண்டடைந்துள்ளனர். பாரதி தொடங்கி, புதுமைப்பித்தன் வழி வந்து இன்றுவரை அது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதன் நீட்சியாகத்தான் நான் இமையம் அவர்களின் இந்த நெஞ்சறுப்பு நாவல் வழி அவர் எடுத்துள்ள முன்னெடுப்பாக பார்க்கிறேன். சமகாலத்தில் நம் சமூகத்தில் அறிவார்ந்த குடும்பங்களில் நிகழும் ஒரு சாதாரண கதையைத்தான் இமையம் தன் எழுத்தின் மூலம் இலக்கியமாக மாற்றியுள்ளார்.

நகரத்தில் கல்லூரியில் பேராசியர்களாக வேலை பார்க்கும் கணவன் ஸ்ரீரங்க பெருமாள் மனைவி காமாட்சி அவர்களுடைய இரு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். ஒரு நாள் வீட்டில் ஒரு பிரளையம் வெடிக்கிறது. பெருமாளுக்கு அவருடைய மாணவி சசிகலா அனுப்பிய குறுஞ்செய்திகளை காமாட்சி அவருடைய கைபேசியில் கண்டுபிடித்துவிட கலகம் தொடங்குகிறது. பெருமாளும் சசிகலாவும் நண்பர்களாகத்தான் பழகினார்கள் என்றாலும் காமாட்சி அதனை எடுத்துக்கொண்ட விதம் வேறு. கணவன் மனைவிக்குள்ளும், காமாட்சிக்கும் சசிகலாவுக்கும் மோதல் வழுக்கிறது. குடும்பங்களுக்கு செய்தி கசிகிறது. குற்ற உணர்வால் செய்வதரியாமல் நிதமும் செத்துப்பிளைக்கிறார் பெருமாள். இறுதியில் இந்த கலகம் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு புரட்டிப்போட்டது? உண்மையில் நெஞ்சறுப்பு நிகழ்ந்தது யாருக்கு? என்பது தான் இக்கதையின் முடிவு.

இந்த கதையை வாசிக்கும்போழுது எனக்கு உடனே நினைவுக்கு வந்தது ஜெயகாந்தன் அவர்களுடைய அந்தரங்கம் புனிதமானது என்ற சிறுகதை தான். அந்த கதை இதே மய்யத்தை அந்த வீட்டின் மகனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், இங்கு கணவனின் பார்வையில் கூறப்படுள்ளது. இந்த நாவலின் சிறப்பே அதுதான். ஒரு அறிவார்ந்த, நடுத்தர குடும்பத்தின் தலைவர்களின் மாதிரி வடிவமாக தான் இந்த கதையில் வரும் பெருமாள். அவருடைய எண்ண ஓட்டங்களும், மன வேட்கைகளும், இழப்பின் பரிதவிப்பும், இயலாமையின் வெளிப்பாடும், விருப்பத்தோடு வாழ்வது போன்ற பாசாங்கும், ஒற்றை துணையாக மனசாட்சி மட்டுமே என நினைவிலும் வாழ கடினமான ஒரு வாழ்க்கையை நம் கண்முன் படம் பிடித்து காட்டுகிறார் இமையம்.

இந்த கதையில் நாம் யாரை தவரென்று சொல்வது? நட்பின் பால் பழகிய பெருமாளையா, தன் கணவன் தனக்கு மட்டும்தான் என்ற உரிமையின் பால் கோபம் கொண்ட காமாட்சியையா? தன் மனதிற்கு பிடித்த மனிதர், திருமணம் என்ற ஒன்றை அறியாத மனது, எதார்த்தமாக பழக நினைக்கும் சசிகலாவின் மனதையா? காகிதத்தில் எழுதிய சட்டத்தின் வழியும், சமூகம் என்ற செயற்கை கோட்பாட்டின் வழியும் இந்த கேள்விகளுக்கு எளிதில் விடையளிக்க முடியும். ஆனால், உண்மையின் வழி, உணர்வின் வழி, உள்ளத்தின் வழி இந்த கேள்விகளே அர்த்தமற்றவையாக தோன்றும். இந்த உலகில் ஆண் -பெண் உறவிற்கு மனிதன் வைத்த பெயர்கள் தான் எத்தனை? வரைமுறைகள் தான் எத்தனை? இத்தனை வைத்தும் இன்னும் அவன் அதில் தெளிவுரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். கோவலன்-மாதவி உறவு தொடங்கி இன்று இந்த கதையில் வரும் பெருமாள் - சசிகலா உறவு வரை அந்த தர்க்கம் தொடர்ந்துக்கொண்டே வருகிறது. ஆண் -பெண் உறவுகளில் உருவம், உடல்,கூடல், ஊடல், பெயர்கள், வசவுகள், வதந்திகள் தாண்டி இங்கு வேறு ஏதோ ஒன்று உள்ளது என்பதை மனிதன் ஏன் உணர மறுக்கிறான்? என்பதற்கு விடையில்லை. மனிதன் எல்லா உறவுகளுக்கும் பெயர் வைத்து பழகியவன். அவனுக்கு தெரியவில்லை தேநீக்களுக்கும் பூக்களுக்குள் இடையே உள்ள உறவு வெறும் தேனுக்காக மட்டுமே இல்லை என்று. மனிதன் உணர்வு சங்கிலியால் உறவுகளுக்குள் பிணைக்கப்பட்டவன், இங்கு எந்த உறவுகளுக்கும் நிரந்தரமான பெயர் ஒன்றுமில்லை.தினமும் மாறும் நிழல் போல பெயர்கள் பல வந்தாலும் உறவுகளும், உணர்வுகளும் மட்டுமே நிஜம்.

--இர. மௌலிதரன்
29-1-2024
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
January 17, 2024
ஶ்ரீரங்க பெருமாளிடம் அவர் மனைவி காமாட்சி யாரு சசிகலா அவளுக்கும் உங்களுக்கும் என்ன உறவு ? அவ ஏன் உங்க செல் போனுக்கு மெசேஜ் அனுப்புரா நீங்க எனக்கு தூரோகம் செஞ்சிட்டிங்களா?.., கேள்வி அம்புகளை காமட்சி ஏவ பெருமாள் காமட்சிகிட்ட மாட்டிகிட்டாரு. அவ ஆம்பள மயக்கி, இந்த கெழட்டு குரங்கு தான் அவளுக்கு கெடச்சானா புடிச்சவ ஒரு வயசு பயனா பாத்து புடிக்க கூடாதா.. என புலம்பல்கள் வீட்டில் பூகம்பத்தை உருவாக்குகிறது. பெருமாளுக்கும் சசிகலாவுக்கும் எப்படி பழக்கம் ஏற்ப்பட்டது இறுதியில் அந்த உறவு என்ன ஆனது என்பதை விளக்கும் நாவல்.

காமாட்சி குடும்ப உறுப்பினர்களை ரிக்கார்டு டான்ஸ் குருப் என பெருமாள் கிண்டல் செய்யும்மிடம் நம்மை சிரிக்க வைக்கிறது. செல்போன் தான் உறவுகளை வளர்த்தெடுக்கிறது என்பது நாவலின் கருவாக இருந்தாலும் சில இடங்களில் எங் கதெ நாவலை நினைவுப்படுத்துகிறது நெஞ்சறுப்பு. -கலைச்செல்வன் செல்வராஜ்.
Profile Image for Hamidh Khan.
11 reviews1 follower
January 20, 2024
From the very first page, this book grips you with its contemporary exploration of love and its perilous, unimaginable consequences in the age of technology. Departing from the author's usual themes, the unique premise effortlessly pulls you into its world, creating an enthralling and thought-provoking experience
Profile Image for Sriram Mangaleswaran.
176 reviews3 followers
January 17, 2025
This novel delves into the tumultuous affair of a middle-aged professor, ensnared by a manipulative woman who finds amusement in tormenting him through relentless, cruel messages. It explores how relationships evolve over time, highlighting the shifting perceptions and emotions individuals hold toward one another.

Though the narrative depicts a toxic dynamic, it reflects uncomfortable truths about human relationships. A particularly striking line from the book is, "There are always lies in classrooms and temples," suggesting that deception often infiltrates even the most revered or structured spaces.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.