“விகடன்” வார இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்புகள் “அணிலாடும் முன்றில்” மட்டும் “வேடிக்கை பார்ப்பவன்” என்றால்,இது “கல்கி” வார இதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு என நூலின் ஆசிரியர் உரை வாசித்த பொழுதே தெரிந்தது.இன்னொரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் இத்தொகுப்பிற்காக பல வருடங்களுக்குப் பிறகு,தன் கிராமத்து கூரை வீட்டின் சமையலறைச் சுவரில் வரைந்த ஓவியங்களுக்கு அடுத்து,இத்தொகுப்பிற்காகவே கோட்டோவியங்கள் வரைந்ததாகவும் நூல் அறிமுகத்தில் நான் கண்டது🤩உடனே பர பரவென பக்கங்களைத் திருப்பி நா.மு.வின் எழுத்தோவியங்களில் மாதமொருமுறை லயித்துக் கொண்டிருப்பதைப் போல நிஜ ஓவியங்களில் நினைவை மறக்க முயன்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது😓