மார்க் ஷீட்டைத் தூக்கி அப்பா அவன் முகத்தில் வீசினார். “என்னடா மார்க் இது?” வினய் பேசாமல் நின்றான். “எழுபது பர்சன்ட் கூட வாங்கலை நீ! இதை வச்சிட்டு எந்த காலேஜ் படியை நான் ஏறி இறங்குவேன்?” அவன் பேசவில்லை. “இன்ஜினியரிங், டாக்டர். ஐ.ஐ.டினு எத்தனை ஆசைகளை உங்கப்பா மனசுல வச்சிருந்தார். எல்லாத்தையும் உடைச்சு நொறுக்கிட்டியே வினய்! இப்ப நாங்க என்ன பண்ணுவோம்?” அம்மா தன் பங்குக்குத் தொடங்கினாள். “நிக்கறான் பாரு தடியன். பதினேழு வயசுல பெரிய ஆம்பிளையாட்டம் பர்சனாலிட்டி மட்டும் இருக்கு. மண்டைல எதுவும் இல்லை! சொல்லுடா என்ன செய்ய போறே இந்த மார்க்கை வச்சுகிட்டு?” “பி.ஏ. பி.எஸ்ஸினு முயற்சி பண்ண வேண்டியதுதான்!” “அதுக்கும் கூட பெரிய வரிசை நிக்குதுடி! இவன் மா&#