பதட்டமாக நரேன் எதிரே வந்து நின்றாள் தீபா! மூச்சு வாங்கியது! “என்னாச்சு ஒனக்கு? எதுக்கு இப்படி ஓடி வர்ற? நீ வர்றதுக்குள்ள நான் போயிடுவேன்னு பயந்துட்டியா?” தீபா மெதுவாக அழத் தொடங்கினாள். “என்ன தீபா? எதுக்கு அழுகை?” “எங்கம்மா எனக்கு வரன் பாக்கத் தொடங்கிட்டாங்க! தீவிரமா இருக்காங்க! இனிமேலும் நாம பேசாம இருந்தா, நல்லதில்லை!” நரேன் பேசாமல் நின்றான். “இன்னிக்கு நம்ம காதலை நான் வீட்ல சொல்லத்தான் போறேன்!” அதற்கும் பதில் இல்லை! “என்ன நரேன்? எதுவும் பேசாம இருந்தா எப்படி?” “எங்கக்கா கல்யாணம் முடியாம, நான் எப்படி இந்தப் பேச்சை வீட்ல எடுக்க முடியும்?” “அதுக்காகக் காத்திருந்தா, என்னை நீங்க இழக்க வேண்டியதுதான். புரியுதா?” “சரி! நான் இந்த வாரக் கடைசில ஊ