Jump to ratings and reviews
Rate this book

வெண்முரசு #1

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

Rate this book
மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம் மகாபாரதத்தில் உள்ளது. இந்தியப் பண்பாடு உருவாகிவந்த முழுச்சித்திரமும் அதில் உண்டு. பாரதவர்ஷம் என்று சொல்லப்படும் நிலத்தின் அனைத்துப்பகுதிகளையும் மகாபாரதம் சித்தரிக்கிறது. அனைத்து மக்களையும் விவரிக்கிறது.

அத்துடன் என்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் அடிப்படையான அறக்கேள்விகள் அனைத்தையும் அது ஆராய்கிறது. அழியாத ஞானத்தை அவற்றுக்கான விடைகளாக அளிக்கிறது. அந்த ஞானத்தை நோக்கிச்சென்ற மாமனிதர்களின் உணர்ச்சிகளையும் தேடல்களையும் மோதல்களையும் வீழ்ச்சிகளையும் மீட்புகளையும் சித்தரிக்கிறது. ஆகவே ஒரு ஞானநூலாகவும் பேரிலக்கியமாகவும் ஒரேசமயம் திகழ்கிறது. சென்றகால வரலாறாகவும் இன்றைய வாழ்க்கையாகவும் உள்ளது.

- ஜெயமோகன்

503 pages, Hardcover

First published January 1, 2014

87 people are currently reading
394 people want to read

About the author

Jeyamohan

209 books845 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
177 (65%)
4 stars
74 (27%)
3 stars
13 (4%)
2 stars
1 (<1%)
1 star
4 (1%)
Displaying 1 - 29 of 29 reviews
Profile Image for Deepti Srivatsan.
Author 1 book47 followers
April 12, 2021
It's hard to review this book without gushing over the author himself. Truly, Mr.Jeyamohan is one of the greatest writers not just of our times but of all time! To undertake a magnum opus like Venmurasu is no easy task, and he has done this seemingly effortlessly.

I have just finished 'Mudharkanal' - book 1. I am reasonably well versed in Mahabharata and this helped a lot in understanding the context. That being said, Venmurasu needs serious commitment from readers and is not for the casual reader.

The language is beautiful and lyrical. The storytelling and imagination is out of the world. A sample:
முன்பொருகாலத்தில் கனகை என்னும் பொன்னிற நாகம் ஒரு தாழைப்புதருக்குள் நூறுமுட்டைகளை இட்டது. முட்டைகளை இட்டுவிட்டு மும்முறை மண்ணைக் கொத்தி பூமாதேவியை காவலுக்கு நிறுத்திவிட்டு திரும்பிப்பாராமல் செல்லும் வழக்கம் கொண்டவை நாகங்கள். சூரிய ஒளியில் அந்த முட்டைகள் விரிந்து சின்னஞ்சிறு புழுக்களைப்போன்ற நாகக்குழந்தைகள் வெளிவந்தன. நாகங்களின் வழக்கப்படி அவை வாசனையை உணர்ந்து, நெளிந்து அருகே இருந்த தாழைமலர்களில் ஏறி அதன் சிறகுகளின் நறுமணம் மிக்க வெம்மைக்குள் அமர்ந்துகொண்டன. அதன்பின் அந்த மலரையே அவை அன்னை என உணர்ந்தன. அன்னை தன் வாசனையால் வண்டுகளை அருகே அழைத்து அக்குழந்தைகளுக்கு உணவூட்டினாள். இரவில் தன் இறகுகளைக்கொண்டு மூடி அவற்றை பாதுகாத்தாள். அவை தங்கள் வழிகளையும் தர்மத்தையும் கண்டுகொள்ளும்வரை அவற்றை அவளே பேணினாள். I was so mesmerized by many such stanzas I kept reading them again and again, savouring each word.

There are several observations that I made. For instance, in none of the other retellings of Mahabharata have I seen this much importance given to snakes and the snake world.
Most of the transportation seems to happen via water - including the abduction of the Kasi princesses by Bhishma. Typical Mahabharata retellings, we only see them travelling on ground, by chariots.
Some characters are slightly different in terms of their relation to the central characters - for instance I have always understood Shikandi to be Drupada's son/daughter. Here it seems he/she is his adopted cousin.
There are references to sage Agastya and Pandiya naadu. I was wondering if the author brought it up on his own because this is a Tamil novel. I was a little skeptical even. But I googled and found out there are indeed references to Pandiya kings in the Mahabharata (especially of their support to the Pandavas during the Kurukshetra war). This was totally new to me. Goes to show how much of all these have been glossed over in majority of the retellings. This also blurs the lines between mythology and history.

I cannot wait to start reading book#2.

Profile Image for Shyam Shankar.
7 reviews7 followers
February 15, 2016
Appreciations are in order for Jeyamohan on venturing into recreating one of the magnum opus of Indian ethical history, The Mahabaratha. First of all, people should be aware that this series of novel is his recreation and hence, even though it is loosely based upon Vyasa's epic, the author here exhibits a varied dimension of the whole story involving his imaginations and perception. So kindly refrain from comparing this work with the real epic.

That being said, the kind of light the author sheds on each of the primary characters of this first part of his epic is to be highly regarded. Each characters are sketched with mannerisms and dialogues which we will definitely believe would suit them and makes one think that these must have been the real words uttered by them in such situations.

The author also had tried to excavate the geographical attributes of ancient India which might seem tough to comprehend with. But, to our surprise, the culture of different tribes and their social customs have been registered and portrayed in an agreeable manner.

To all those who have read the real epic, please don't hesitate on trying this one too.
Profile Image for Anitha Ponraj.
277 reviews44 followers
Read
April 17, 2023
புத்தகம் : வெண்முரசு - முதற்கனல்
ஆசிரியர் : ஜெயமோகன்
வாசித்தது: venmurasu.in
அச்சுப் பதிப்பு பக்கங்கள் : 496

எப்படித் தொடங்குவது? என்ன எழுதுவது என்று அறியாத ஒரு மனநிலை வெண்முரசு என்ற இந்த நெடுங்காவியத்தின் முதல் புத்தகமான முதற்கனல் வாசித்து முடித்த பின்.

கதைகள் வாசித்திருக்கிறேன். கவிதைகள் வாசித்திருக்கிறேன். ஆனால் இத்தனை கவிதை நடையில் கற்பனை சொட்டச் சொட்ட உவமைகள் நிறைய கொண்டு எழுதப்பட்ட கதையை வாசிப்பது இதுவே முதல் முறை.

சில நேரங்களில் இத்தனை வர்ணனை தேவை தானா? இத்தனை விவரங்கள் தேவை தானா என்ற எண்ணம் எழும்போது, அதை எழுதிய ஆசிரியரின் முயற்சி மனதில் தோன்றி சிலிர்க்க வைப்பதோடு, மகாபாரதக் கதையின் மீதுள்ள ஆர்வமும் கலந்து கொண்டு பக்கங்களை வேகமாக கடக்கச் செய்கிறது.

ஒரு புத்தகத்திலே இத்தனை கதைகள், கதைக்குள் கதை என முடிவிலியாக நீண்டு கொண்டு இருக்க, இன்னும் 25 புத்தகங்கள் இந்த தொடரில் உள்ளது என்று என்னும் போது மனம் திகைத்து மீள்கிறது. 26 புத்தகங்கள், 26,000 பக்கங்கள் எழுதிய ஆசிரியரின் முயற்சி, எழுத்து வல்லமை, கற்பனைத் திறனை பாராட்டவும், நெகிழ்ந்து தலை வணங்கவும் வைக்கிறது.

நாகர் குலத்தலைவியான மானசாதேவியிடம் தொடங்கும் கதையில் கால் இல்லாத நாகங்களின் கால்தடங்கள் புத்தகம் நெடுக!! கதை முடிவதும் அவரிடமே!

நாம் அறிந்த மகாபாரதக் கதையின் பின்னால் தொடங்கி, முன்னோக்கி நகர்கிறது கதைக்களம்.

முதற்கனல் அம்பையிலிருந்து தொடங்குகிறது.

அவளின் சினத்தில் வளர்கிறது காவியம்.

திரௌபதியின் சிரிப்புதான் பாரதப்போரின் காரணம் என்று எங்கள் ஊரில் கதைகளில் சொல்லக் கேட்டதுண்டு. நானோ,இல்லை அது அவளின் கண்ணீரால் நிகழ்ந்த போர் என்று எண்ணுவதுண்டு. ஆனால் உண்மையில் அதன் மூலம் அம்பையின் சினம்!! நிராகரிப்பு தந்த ஏமாற்றம், பழிவாங்கும் உணர்வாக மாறிய பீஷ்மர் மீதுள்ள காதல்தான் என்று இப்போது தோன்றுகிறது.

இதுவரை மகாபாரதக் கதையில் பெயர் மட்டுமே கேள்விப்பட்ட சிறுசிறு கதாப்பாத்திரங்களின் முழுக்கதையும்,கேள்விப்படாத பல கிளைக்கதைகளையும் வாசிக்க கிடைக்கும் என்று நான் இதற்கு முன் நினைத்ததில்லை. அதை சாத்தியப்படுத்திய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

ஆசிரியரின் வார்த்தைகளே கண்முன் உயிரோவியமாக விரிந்திருக்கிறது என்று எண்ணும் போது, அதை நான் மேலும் வண்ணமூட்டுகிறேன் என ஓவியர் ஷண்முகவேலின் ஓவியங்கள் கதைக்கும் நம் கற்பனைக்கும் வண்ணமூட்டுகின்றன்.

முதற்கனலின் வெம்மை நீங்கி மழைப்பாடலில் நனையப் போகிறேன்.

#venmurasu #jeyamohan #mudrakanal#mahabharatham #legendaryfiction#longestseries
53 reviews43 followers
February 22, 2022
இந்நூலைப் படித்து முடித்து விட்டு வியப்புடன் அமர்ந்திருக்கிறேன். எத்துணை கதை மாந்தர்கள் (சத்தியவதி, சந்தனு, வீசுமர்/வீட்டுமர்/Bhishmar, அம்பை, விசித்திர வீரியன், அம்பிகை, வியாசன், சிகண்டி); எத்துணை இடங்கள் (பாலை, ஆறு, மலை, பாதாளம், சிபி நாடு (Pakistan), திருவிட நாடு (திராவிடம்); எத்துணை உரையாடல்கள்; இயற்கைக் காட்சி விவரிப்புகள், தத்துவ விளக்கங்கள். படித்து முடிக்கவே எனக்கு இரண்டு மாதங்கள் ஆகியிருக்கின்றன (பெரும்பாலும் இரவில் படித்தது). இதனை எழுத இவருக்கு எவ்வளவு நேரமானதோ !

இயற்கை, தத்துவ விளக்கங்களை விட கதை மாந்தர்களுக்கு இடையான உரையாடல்களே என்னை அதிகம் ஈர்த்தன. வீட்டுமர்-அம்பை, வீட்டுமர்-சத்தியவதி, வீட்டுமர் - சிகண்டி என்று பல உரையாடல்களும் வீட்டுமர் குறித்தே இருந்தாலும், என் (romantic) மனதுக்குப் பிடித்தமாக இருந்தது விசித்திரவீரியன் - அம்பிகை உரையாடல்களே.

சிறுவர்களுக்கான மகாபாரதம் இரண்டு மூன்று தொகுப்புகள் படித்து இருக்கிறேன். இராமாயணத்தை விட மகாபாரதத்தையே அதிகம் விரும்பி இருக்கிறேன். நூறு முறை கேட்ட, பார்த்த, படித்த கதையாக இருந்தாலும், சலிப்பு தட்டாமல் 600+ பக்கங்களையும் படிக்க முடிந்தது. எடுத்தால் வைக்கவே மனமில்லை.

நிறைய அழகிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார். நானே ஒரு https://gist.github.com/psankar/ecc63... திரட்டு தயாரித��தேன். ஆனால் நூலின் முடிவில் அவரே பொருள்கொடுத்திருக்கிறார்.

இந்நூலை இடதுசாரிகள் கொண்டாடாதது ஏன் என்று புரிகிறது. ஆனால் வலதுசாரிகளும் ஏன் கொண்டாடவில்லை என்று ஓரளவு புரிந்தது. சாதி / வர்ண எதிர்ப்பு கருத்துகள் வருகின்றன. கிண்டலாக, நகைச்சுவையாக, கோபமாக என்று பல உணர்வுகளுடன். கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக பாராட்டி நாலுவரி எழுதி இருப்பார் என்று பட்டது. தமிழ்வளர்ச்சித் துறை பார்த்து ஏதும் செய்யலாம்.

என் அறிவை அதிகரிக்க நான் FOSS மென்பொருட்கள் ஆக்குவேன். அதில் நான் என் வேலையை விட அதிக ஆர்வமாக உழைப்பேன். இந்நூலை ஆசிரியர் இலவசமாக இணையத்தில் வெளியிட்டாலும், அசுரத்தனமாக உழைத்து இருக்கிறார். ஒரு தனிமனிதனால் எப்படி இவ்வளவு எழுதிக் குவிக்க முடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. தெரிந்த கதைதான் என்றாலும் ஆர்வம் குன்றாமல் எழுத வேண்டுமே.

விலை கொடுத்து வாங்கியதற்கு மிக நிறைவான நூல். அடுத்த பாகத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.

நூல் அறிமுகம் செய்து வைத்த நண்பர் நந்தாவுக்கு நன்றி.
13 reviews4 followers
book-queue
October 28, 2020
மறுவாசிப்பு செய்ய வேண்டும், பல்வேறு தத்துவங்கள், யோகங்கள், படிமங்கள் என என் வாசிப்பிற்கு சவால் விடுகிறது. தொடர்ச்சி விட்டு விடக்கூடாது என்பதற்காக அடுத்து மழைப்பாடல் வாசிக்க போகிறேன். Dated 14/10/2020.
251 reviews38 followers
May 26, 2025
புத்தகம்: முதற்கனல்
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 491

💥 நமக்கு ஏற்கனவே தெரிந்த கதை தானே , என்ற நினைப்புடன் தான் இந்த புத்தகத்தை எடுத்தேன். ஆனால் தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

💥 மகாபாரதம் என்றாலே குருசேத்திரப் போர், கண்ணனின் உதவிகள், கர்ணனின் கொடை என இருக்கும். கதையில் பெரிதும் பேசப்படாத இருவரை பற்றி இந்த புத்தகத்தில் விரிவாக சொல்ல பட்டிருக்கிறது.

💥 ஒன்று - விசித்ரவீரியன். இவரை பற்றி கதையில் ஒன்று இரண்டு வரிகள் தான் தெரியும். இந்த கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நோயில் இருந்து அவனை காப்பாற்ற சத்யவதி எடுத்த முயற்சிகள். அவனுக்கும் அம்பிகைக்கும் இடையே இருந்த உரையாடல்கள் மிக அற்புதம்.

💥 இரண்டு- சிகண்டி. கடைசி போரில் அவன் பீஷ்மரை கொன்றான் என்றும், அதற்காகவே அவன் அவதரித்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதற்காக அவன் எடுத்துக் கொண்ட பயிற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

💥 வெண்முரசு பயணத்தில் இன்னும் 25 புத்தகங்கள் உள்ளன.
தொடர்ந்து பயணிப்போம்.

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,

பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Sandeep Rajamani.
9 reviews2 followers
August 11, 2025
கதை தொடக்கத்தின் தன்மை
முதற்கனல் என்பது வெண்முரசு தொடரின் மூல ஒளிக்கீற்றை பிரதிபலிக்கும் ஒரு நாவல். இது மகாபாரதக் கதையின் வழக்கமான தொடக்கங்களைப் போல அல்ல. கிருஷ்ணனோ, பாண்டவர்களோ, கௌரவர்களோ இல்லாமல், மௌனம், இருள், மற்றும் உணர்வுகளின் ஆழம் மூலம் கதை ஆரம்பிக்கிறது.
ஹஸ்தினாபுரம் நகரம் ஒரு துக்கம் நிறைந்த, தர்மம் இன்னும் பிறக்காத நிலையாக வர்ணிக்கப்படுகிறது. இது ஒரு பாரம்பரியத்தின் முன்-தொடக்கம், ஒரு நாகரிகத்தின் உள்ளார்ந்த குழப்பம்.

தத்துவ அடுக்குகள்
ஜெயமோகன் இங்கு புராண ரியலிசம் என்ற புது இலக்கிய அணுகுமுறையை பயன்படுத்துகிறார். இதில்:
- தர்மம் என்பது ஒரு சட்டம் அல்ல, நிகழ்வுகளால் உருவாகும் உணர்வு.
- நினைவுகள் புராணமாக மாறுகின்றன.
- காலம் நேரியல் அல்ல; சூதர்கள் (பாடகர் கதையாசிரியர்கள்) மூலம் பல அடுக்குகளில் கதை விரிகிறது.

கதாபாத்திரங்கள்
பீஷ்மர் (Bheeshmar)
- சாந்தனுவின் மகன், தன் தந்தையின் ஆசைக்காக திருமணத்தைத் துறந்த வீரன்.
- முதற்கனல்’ல், பீஷ்மர் ஒரு தத்துவவாதி, தர்மத்தின் காவலர், மற்றும் பழைய உலகத்தின் பிரதிநிதி.
- அவரது மௌனம், உணர்வுப் போராட்டம், மற்றும் அரசியல் சிக்கல்கள் நாவலின் முக்கிய தளமாக அமைகின்றன.

அம்பை (Ambai)
- காசி நாட்டின் இளவரசி, பீஷ்மரால் கடத்தப்பட்டவர்.
- திருமண மறுப்பு, பழிவாங்கும் எண்ணம், மற்றும் மாற்றம் தேடும் பெண் என பல பரிமாணங்களில் சித்தரிக்கப்படுகிறார்.
- பின்னாளில் சிகண்டியாக மறுபிறவி எடுத்து, பீஷ்மரின் எதிரியாக மாறுகிறார்.

சிகண்டி (Sikandi)
- அம்பையின் மறுபிறவி, ஒரு பாலின மாற்றக் கதாபாத்திரம்.
- முதற்கனல்’ல், சிகண்டி ஒரு பழிவாங்கும் சக்தி, ஆனால் அதே நேரத்தில் தர்மத்தின் புதிய வரையறை.
- ஜெயமோகன் அவரை பாலின அடையாளம், சமூக மாற்றம், மற்றும் உணர்வுப் போராட்டம் ஆகியவற்றின் பிரதிநிதியாக சித்தரிக்கிறார்.

சாந்தனு (Shantanu)
- ஹஸ்தினாபுரத்தின் மன்னன், பீஷ்மரின் தந்தை.
- கங்கை, பின்னர் சத்யவதி ஆகிய இருவருடன் திருமணம் செய்து, அரசியல் மற்றும் குடும்ப சிக்கல்களில் சிக்கியவர்.
- அவரது ஆசைகள், தர்மக் குழப்பங்கள், மற்றும் அரசு மரபுகள் கதையின் பின்னணியாக செயல்படுகின்றன.

சத்யவதி (Satyavathi)
- மீனவர் மரபில் பிறந்தவள், பின்னர் அரசு மரபில் இணைந்தவள்.
- விசித்திரவீர்யன், வியாசர் ஆகியோரின் தாயாக, மகாபாரதத்தின் முக்கியக் கட்டங்களை உருவாக்குகிறாள்.
- முதற்கனல்’ல், சத்யவதி ஒரு மாற்றத்தின் தூதர், அரசியல் நுணுக்கம், மற்றும் தர்மத்தின் புதிய வரையறை.

விசித்திரவீர்யன் (Vichitraveeryan)
- சாந்தனுவின் இளைய மகன், சத்யவதியின் மகன்.
- அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவரை திருமணம் செய்தவர்.
- அவரது மரணம், வியாசரின் வருகை, மற்றும் பாண்டு, த்ருதராஷ்டர் பிறப்புகள் ஆகியவை கதையின் முக்கிய திருப்பங்கள்.

அம்பிகை மற்றும் அம்பாலிகை
- விசித்திரவீர்யனின் மனைவிகள்.
- வியாசரால் சந்தானம் பெறும் நிகழ்வுகள், மனித உணர்வுகள், பயம், மற்றும் தர்மக் குழப்பங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.

வியாசர் (Vyasar)
- மகாபாரதத்தின் ஆசிரியர், ஆனால் முதற்கனல்’ல் அவர் ஒரு உணர்வுப் பாத்திரம்.
- தர்மத்தின் உருவாக்கம், பழமையான ஞானம், மற்றும் மனித மரபுகளின் சிக்கல்கள் ஆகியவற்றை அவர் பிரதிநிதிக்கிறார்.

இந்த கதாபாத்திரங்கள் முதற்கனல்’ல் பழமையான உலகத்தின் சிதைவு, புதிய தர்மத்தின் பிறப்பு, மற்றும் மனித உணர்வுகளின் ஆழம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.

மொழி மற்றும் நடையில்
ஜெயமோகனின் தமிழ்:
- பாரம்பரியமிக்க, சுத்தமான தமிழ்.
- கவிதைபோல் ஓடும் உரை, ஒவ்வொரு வரியும் தத்துவ சிந்தனையை தூண்டுகிறது.
- மெதுவாக நகரும் கதை, ஆனால் ஒவ்வொரு பக்கமும் ஒரு உணர்வுப் பயணமாக இருக்கிறது.
Profile Image for Mayuran Senthurselvan.
22 reviews3 followers
April 24, 2025
தெரிந்த கதையை முற்றிலும் புது Point of View உடன் தருவதென்பது எளிதான காரியமல்ல. அதுவும் மகாபாரதம் போன்ற ஒரு இதிகாசத்தை. இந்த முதல்பாகம் ஆஸ்திகன் என்ற நாகமுனியிலிருந்து ஆரம்பித்தாலும் பீஷ்மரை சுற்றியே பின்னப்பட்டிருக்கின்றன. அதற்குள் எண்ணற்ற கிளைக்கதைகள். ஆரம்பத்தில் ஒரு நேர்கோட்டு கதைசொல்லலை குழப்பியிருந்தாலும் நிதானமான வாசிப்பு அக்கதைகள் முக்கியத்தை உணரச்செய்யும். இந்த புத்தகத்தை ஒவ்வொரு தனிநபர் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளின் கொந்தளிப்பே ஆகும்.

History Repeats Itself. But, Men Never Learn from It என்றொரு வாசகம் உண்டு. அதற்கமைய பீஷ்மர் என்பவர் தன்னை யயாதி என்பவரின் ஆடி விம்பமாக கருதுகிறார். பால்கிகர் என்னும் சாந்தனுவின் சகோதரன் பீஷ்மரை தன் ஆடி விம்பமாக கருதுகிறான். அதே போல், சிகண்டி பீஷ்மரின் நிழல் தான் நான் என உணர்கிறான். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்றால் ஒருவர் வாழ்வில் செய்ததையே தான் மற்றவரும் செய்கிறார். அதாவது இன்னொருவரின் ச��மையை தோளில் தூக்கி சுமக்கின்றனர். இதை இன்னொரு கண்ணோட்டத்தில் சொல்லப்போனால் ஒருவர் தனது உண்மையான முகத்தை நோக்கி பயணப்பட்டு தன்னை அறிந்து கொள்ளலே இந்த நாவல்.

இது இந்த நால்வருடனும் நின்றுவிடாமல், அம்பை, சத்தியவதி, விசித்திரவீரியன், வியாசர் என அனைத்து கதாபாத்திரங்கள் ஊடே உணர்ந்துகொள்ள கூடியதாக உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்ச்சி நிலையை தெளிவாக காட்டவே சில வேளைகளில் சில பகுதிகள் சீரான நேர்கோட்டு கதை சொல்லலை விட்டு விலகி நிற்கின்றன.

இந்த புத்தகத்தை மகாபாரதத்தின் / வெண்முரசின் ஒரு பகுதி என்று சொல்வதை விட இதை ஒரு தனி புத்தகமாகவே கருதலாம். பல்லாயிரம் கிளைக்கதைகளையும் கர்ணபரம்பரை கதைகளையும் உருவாக்கிய இந்த மகாபாரத்தை அதன் கிளைக்கதைகளுடனும் கர்ணபரம்பரை கதைகளுடனும் இணைத்து ஒரு புதிய கண்ணோட்டத்தில் தருவதென்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. மொத்தத்தில், ஆழமாகவும் பொறுமையுடனும் வாசிக்கவேண்டிய ஒரு நாவல் இது. நிச்சயமாக மீள்-வாசிப்பிலும் ஒரு புதிய அனுபவத்தை தரக்கூடிய நாவலாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Bhuvan.
254 reviews42 followers
March 8, 2024
#வெண்முரசு_குழுவாசிப்பு

இந்த குழுவாசிப்பில் இணைந்ததற்கு முதல் காரணம், ஒருவேளை இதை குழுவாக வாசிக்கவில்லை என்றால் இந்த பெரும் நாவலை வாழ்வில் வாசிக்கவே மாட்டேனோ என்ற பயன் தான்.

வெண்முரசு - குழந்தை பருவத்தில் மகாபாரத கதைகளை கேட்டதுண்டு அதன் பின் ஏனோ மகாபாரதத்தை வாசிக்கவில்லை முழு கதைகளையும் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் என்ற ஆசையில் வெண்முரசை ஆரம்பித்தேன்.

நான் கேட்ட அந்த கதைகள் போல் இவை ஆரம்பிக்கவில்லை. இவர் இந்த முழு கதையை வேறு ஒரு பரிமாணத்தில் சொல்கிறார்.

பாம்பிலிருந்து உலகம் தொடங்கியது என்று படித்த உடனே நான் வேறொரு உலகிற்கு தயாராகி விட்டேன்.

இதில் அனுகியிருக்கும் கதாபாத்திர முறையும் கிளை கதைகளும் வியப்பிற்குரியவை.

ஆனால் ஏனோ இதில் வரும் அத்தனை பெயர்களையும் என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே கேட்டிருந்த பெயர்கள் மட்டும் மனதில் ஒட்டிக் கொள்கிறது.

பத்து பெரும் நிகழ்வுகளாக இந்த முதற்கனல் எழுதப்பட்டிருக்கிறது.

பீஷ்மரின் மீது எவ்வளவு காதல் கொள்கிறோமோ அதே அளவு சிகண்டி மீதும் காதலில் விழ வைக்கிறார்.

பீஷ்மரின் பொறுமையும், அம்பையின் காதலும், விசித்திர வீரனின் வாழ்க்கை புரிதலும், சிகண்டியின் மன வலிமையும் ஆச்சரியம்.

சிகண்டி அன்னையின் கூற்றுக்கிணங்க பீஷ்மரை கொல்ல செல்லுதலும், அவரிடமே மாணவனாக கற்றுணர நிலைபடுவதும் கதையின் உச்சம்.

அடுத்த மழைப் பாடல்...
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Aswin Ramadas.
21 reviews1 follower
November 7, 2018
A detailed insight into story telling of Mahabharata from a different perspective.

Surely u ll get goosebumps in beeshmar's intro
39 reviews7 followers
April 19, 2014
There will be a day , when this work will be acknowledged as the 21st century gift of India to the world. I'm glad to have lived in the period of such a great writer .
This entire review has been hidden because of spoilers.
6 reviews1 follower
September 10, 2020
முதற்கனல்... ஒரு பெருங்காவியத்தின் முதற்கனல்... ஒரு பெருநிகழ்வின் முதற்கனல்.... ஒரு பெரும்படைப்பின் முதற்கனல்...

காலம் காலமாக இந்திய பண்பாட்டு மரபில் சொல்லப்பட்டு வரும் காவியம் மகாபாரதம்.. கதைமாந்தர்களின் உளவியலை சில புனைவுகளோடு கூடி சிறப்பாக கொணர்ந்து இருக்கும் படைப்பு... வெண்முரசு... அதன் முதல் புத்தகம் "முதற்கனல்"....

பொதுவெளியில் நவீன காலகட்டத்தில் சின்னத்திரையில் கண்டு களித்து மகாபாரதம் மேம்போக்கான கதை வடிவத்தை மட்டுமே நமக்கு அளித்து வந்தது. ஒரு பேரிலக்கியத்தை அணுக வேண்டிய முறையை நமக்கு இந்த படைப்பின் வாயிலாக ஆசிரியர் வேறு பரிணாமத்தை கண் முன் நிறுத்துகிறார்.. இப்படைப்பை வாசிக்கையில் இந்த வகை வாசிப்பும் சாத்தியம் தானோ என நம் மனதில் கேள்விகள் எழுகின்றன.


ஜெயமோகனின் வார்த்தை பிரயோகங்கள், சில சமயம் நம்மை ஒன்ற வைத்து, கதை நிகழும் இடத்திற்கே இட்டுச்செல்கின்றன. பெருமணல்பரப்பையும், அடர்கானகங்களையும், பேரிரைச்சல் கொண்டதாகவும் அதேசமயம் பெருஅமைதி கொண்டதாகவும் பிரவாகம் எடுக்கும் கங்கை, யமுனை நதிகள் என இயற்கை அன்னை அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் அந்தந்த இடங்களுக்கு செல்லும் போது உணரும் உணர்வினை எழுத்தின் வாயிலாகவே சாதிப்பதில், ஆசிரியர் உண்மையிலேயே எழுத்தை ஆளும் எழுத்தாளராக நிரூபணம் ஆகிறார்...

பல பயணங்கள், பலவகை வாசிப்புகள், பலகட்ட ஆராய்ச்சி என அனைத்தின் கூட்டுப்பலனாக இந்த படைப்பு வந்துள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெற்றுள்ள ஓவியங்களும் படைப்போடு நம்மை நெருங்க செய்வதில் அளப்பரிய பங்கு வகிக்கிறது.

பல தத்துவார்த்த உரையாடல்கள், சில புரிந்தும் பல புரியாமலும் உள்ளன. மறுவாசிப்பின் வழியே அவற்றை கண்டடைய வழிவகை உண்டு என கருதி அடுத்த தொகுப்பிற்கு செல்கிறேன். மறுவாசிப்பிற்காக எடுத்து வைக்கவில்லை, வெண்முரசு வாசிப்பு தொடர் நிகழ்வாக அமையும் என்ற நம்பிக்கை அடிமனதில் உள்ளது.

இந்த முதற்கனல் என் மனதில் வெண்முரசு எனும் பிரமாண்ட படைப்பை அணுக ஒரு முதற்கனலாய் அமைந்துள்ளது.
1 review
June 28, 2022
Wonderful version of Mahabharata from the view of Mr Jeyamohan with rich language. Have reread twice for better understanding. I love the way he wrote Shikandi character. The fire in her to revenge Pithamagan Bhishmar. I’m fan of his way of writing about women. Must read book for every Tamil readers. Just bought malaipaadal both kindle and hard copy. Going to start read for continuity.
Profile Image for Harish.
170 reviews11 followers
March 14, 2018
Hell hath no fury like a woman scorned.
Profile Image for Swami Nathan.
99 reviews2 followers
October 7, 2019
The density of Jayamohan's words takes some time to be digested, but once its done, its elixir
30 reviews1 follower
April 21, 2020
A great start to the great epic. Everyone should read. A pride to the Tamil language.
Profile Image for Ganesh Ramalingam.
Author 0 books8 followers
November 15, 2020
A treasure to preserve

This is a good effort by Tniru Jayamohan to bring in a simple language for our generation to learn all the event of Mahabharata has it happened.
Profile Image for Kannan Sv.
66 reviews32 followers
May 30, 2021
பெருங்கனவின் பயணம் இனிதே தொடங்கியது...
17 reviews1 follower
January 4, 2022
26 பாகங்கள், 26000 பக்கங்கள்!!!!

Magnum opus by jeyamohan.
1 review
Want to read
December 20, 2015
Its my dream... i wish to read this book for last one year
Profile Image for Ohmprakash Balaiah.
15 reviews4 followers
May 7, 2015
Hearing Mahabharatam in the most detailed and a very near to feel way..
Displaying 1 - 29 of 29 reviews

Join the discussion

Can't find what you're looking for?

Get help and learn more about the design.