பழநிமலை முருகனை நவபாஷாணங்கள் கொண்டு செய்வதற்காக போகர் எந்தெந்த மலைகளுக்கு சென்றார்? நவபாஷாணங்கள் கிடைத்ததா? இல்லையா? என்பதை 'அன்று' பகுதியிலும், கதையின் நாயகியான பாரதியிடம் இருக்கும் பெட்டியில் என்ன இருந்தது? அதை அவள் யாரிடம் ஒப்படைத்தாள்? எதற்காக ஒப்படைத்தாள்? என்பதை 'இன்று' பகுதியிலும், சில சுவாரஸ்யமான திடுக்கிடும் தகவல்களையும் வாசித்து தெரிந்து கொள்வோம்...!
அசைவம் சாப்பிடுபவர்களால் புலன்களை எளிதாக அடக்க இயலாது, பாவங்களை எளிதாக செய்வார்கள். தாவரங்களை உண்பது மிகக் குறைந்த தீமைச்செயல், இதற்கான பரிகாரமே விருட்சங்களை வளர்ப்பதும், வணங்குவதுமா? இது என்னடா புது உருட்டு?
கழுதைகளுக்கு திருமணம் செய்தால் எப்படி மழை பெய்யும்? பட்டணம் நம்பிக்கை இழக்கச் செய்து சந்தேகப்பட சொல்லித்தருகிறது என்று இன்னொரு உருட்டு.
பழநி முருகர் சிலை நவ பாஷாணங்களால் செய்யப்பட்ட ஒரே சிலை. ஆனால் இவரோ முதலில் சிவலிங்கம் தான் செய்யப்பட்டது என்கிறார். எல்லாவற்றிலும் முதலுக்கு தானே மரியாதை என்பதால் இப்படி ஒரு கதை சொல்லி பழநி முருகர் சிலையின் பெருமையை மழுங்கச் செய்வதாகவே தோன்றுகிறது.
Overall good work done by the author although the end is predictable. Story is about how the great Lord Muruga temple came into existence in Palani hills.