இரண்டாம் உலகப் போரின்போது பிரிவினைக்குள்ளான ஜெர்மனியின் கிழக்கு பேர்ளினில் இறங்கி மேற்கு பேர்ளின் வழியாகப் பல்வேறு தேசங்களுக்கும் புலம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வு குறித்த பிரதி இது. ஐரோப்பியப் பெருநகரமொன்றிலிருந்து ஆரம்பிக்கும் நாவல் இலங்கை இனக்கலவரம், போர் ஆகியவற்றின் இணைகோடாகப் பயணித்து நீண்ட அகதி வாழ்வையும் அதன் மூல காரணங்களையும் விவாதிக்கிறது. அக, புறச் சிடுக்குகளுக்குள்ளால் அகதிகளின் அந்தர வாழ்வைக் கவனப்படுத்துகிறது. பிளவுபட்ட ஜெர்மனியின் சிக்கலான நில அமைப்பையும் ‘போட்ஸ்டம்’ உடன்படிக்கையின் விளைவுகளையும் குறித்து வரலாற்றுத் தகவல்கள், கதாபாத்திரங்களின் உரையாடல்கள், வர்ணனைகள் மூலம் அகதிகளின் துயரமான வாழ்வைப் பேசுகிறது.