ஜிப்ஸிகளின் மீதான நாசிகளின் இன அழிப்பு, அவர்களது துயரத்திலிருந்து பீறிட்ட நடனங்கள் வெளிப்படுத்திய வாழ்தலின் மீதான வேட்கை, அதிகாரத்திற்கு எதிராகத் தற்கொலையை ஒரு கலகமாக முன்னிறுத்தும் மனிதரின் ஆன்மீக உன்னதம், அபுகாரிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தும் மனித வெறுப்பு, உடலின் மீதான சித்திரவதையை இன்பமாகத் துயக்கும் தத்துவ மனம், பெண்ணுடலை விலக்கிய மதம், உடலின் வழி தன் ஆன்மாவை வெளியிட்ட கலைமனம், இந்தியச் சிறுபான்மையின மக்களின் கையறுநிலை, ஈராக் முதல் குன்டனாமோ சித்திரவதை முகாம் வரை பைசாச அரசொன்று அம்மக்களின் மீது சுமத்திய சித்திரவதை அமைப்பு என இக்கட்டுரைகள் அனைத்திலும் சித்திரவதைக்கு எதிரான மனிதரின் சீற்றமும் வாழ்தலுக்கான அவர்களது மனித வேட்கையும் தான் வெளிப்பட்டிருக்கிறது
கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran) தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். தமிழின் முக்கிய சினிமா விமர்சகராகவும் அரசியல் கோட்பாட்டாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தீவிரமாக இயங்கிவரும் இவரது எழுத்துக்கள் உலகெங்கும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் போராட்டங்களையும் கலை இலக்கியம் சார்ந்த அழகியல் பிரச்சினை களையும் தீவிரமாக விவாதிப்பவை.