புத்தகம் : நீர் மற்றும் கோழி
ஆசிரியர் : பவா செல்லத்துரை
பக்கங்கள் :25
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
நான் வாசிக்கும் பவா செல்லத்துரை அவர்களின் முதல் படைப்பு. இரு சிறுகதைகளும் மிக யதார்த்தமான மனித இயல்புகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை.
நீர்:
ஒரு கிணறு தோண்டப்படுவதை மையப்படுத்திய கதை. அதைத் தோண்டும் பொழுது நடக்கும் நிகழ்வு. ஏமாற்ற முற்படுபவர்களுக்கு மத்தியில் தனக்கு உதவியவர்களும் நேர்மையாய் இருக்க முற்படும் ஒரு பெண்ணின் நற்குணத்தோடு கதை முடிகிறது.
கோழி:
கொக்கரித்த எதிர் வீட்டு கோழி குழம்பாக மாறுவதை நயமாக எழுதி இருக்கிறார் ஆசிரியர்.
இரண்டு கதைகளும் மிக எதார்த்தமான கதைக்களமும் , நம் மத்தியில் நடமாடும் எளிமையான மனிதர்களையும், அவர்கள் உணர்வுகளையும், செயல்பாடுகளையும் கதைமாந்தர்களாகக் கொண்டு நம் பக்கத்து வீட்டில் நிகழ் பெற்ற ஒரு கதையை கேட்டது போல் அவ்வளவு அழகாக நடைமுறை வாழ்க்கையை பற்றி எழுதப்பட்டு இருக்கின்றன.