திவாகர் யோசனையுடன் காரில் அமர்ந்திருந்தான். “டிரைவர் கொஞ்சம் வேகமாகப் போங்க...” “பதட்டப்படாதீங்க தம்பி... அப்பா நல்லாதான் இருக்காரு. ஹார்ட் அட்டாக்தான். ஆரம்பத்தில் பார்த்தாச்சு. கவலைப்படாதீங்க...” என்றான், நீண்ட நாட்களாக அவர்கள் வீட்டில் டிரைவராக இருக்கும் கோபி. கொடைக்கானலில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வருகிறான் திவாகர். பள்ளிப்படிப்பு முடியப் போகிறது. அப்பா பெரிய தொழிலதிபர். கிரானைட் பேக்டரி வைத்திருக்கிறார். திவாகரும், திவ்யாவும் அவருடைய வாரிசுகள். அம்மா சிவகாமி நான்கு வருடத்திற்கு முன் ஸ்ட்ரோக் வந்து படுக்கையிலும் வீல் சேரிலுமாக பொழுதைக் கழிக்கிறாள். 24 மணி நேரமும் அவளுக்கு உதவிக்கு ஆள் தேவைப்பட்டது. வீட்டு நிர்வாகம் மேனேஜரிடம்.