நடுநிலைப் பள்ளி ஒன்றில் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் இருந்த தமது தாயின் கைப் பிடித்துக் கொண்டு நாற்றம் எது மணம் எது என்று அறியாத ஐந்து வயதில் நேரடியாகப் பார்த்த தாயின் வாழ்க்கையின் காயம் எங்கோ மனத்தில் இருந்தது. தொழிற்கூடங்களில் துப்புரவு செய்த ஒரு தொழிலாளியின் கண்ணீர் ததும்பும் கனத்த முகம் இன்னும் கண்ணில் நிற்கிறது… சாக்கடையோரம் மூக்கைப் பொத்தி குமட்டலில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடத் தெரியும் மனிதர்களுக்கு அசுத்தத்தை அள்ளுகிறவன் சாதியில் குறைந்தவன் என தள்ளி வைக்கவும் தெரிகிறது என்று தமது முன்னுரையில் சாடும் மலர்வதி ஈக்களிலும் புழுக்களிலும் நாற்றத்திலும் உழைத்து வாழ்வாதாரம் தேடும் மனிதர்களுடன் ஒரு நிமிட நேரமாவது சென்று அமரும் மனித நேய உணர்வு சமூகத்தில் பிறக்கட்டும் என்ற வேகத்தில் தாம் எழுதிய கதை தான் தூப்புக்காரி என்று மனம் விட்டுச் சொல்வதில் எல்லாம் அடங்கிவிடுகிறது.
மலர்வதி (பிறப்பு: 1979) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர். அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதுபவர். இளம் எழுத்தாளர்களுக்கான யுவபுரஸ்கார் சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்.
மலர்வதியின் இயற்பெயர் மேரி ஃப்ளோரா. 1979 ல் கன்யாகுமரி மாவட்டம் வெள்ளிகோடு என்னும் ஊரில் ஜி. எலியாஸ்- ரோணிக்கம் இணையருக்கு பிறந்தார். வெள்ளிகோடு ஆர்.சி. நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். முளகுமூடு குழந்தை இயேசு உயர் நிலையில் பள்ளிநிறைவை முடித்து தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டப்படிப்பு முடித்தார்.
மலர்வதி கிறிஸ்தவ பக்திநூல்களையே முதலில் எழுதத்தொடங்கினார். முதல் இலக்கியப் படைப்பு 2008 ஆம் ஆண்டு வெளியான காத்திருந்த கருப்பாயி என்னும் நாவல். தூப்புகாரி என்னும் நாவலுக்கு 2012 கேந்த்ரிய சாகித்ய அக்காதமியின் இளம்படைப்பாளிகளுக்கான யுவபுரஸ்கார் விருது கிடைத்தது.
கனகம் மருத்துவமனையில் தூப்புக்காரி (துப்புரவு தொழிலாளி)யாக வேலை செய்பவள் தன் மகள் பூவரசியை நல்ல ஒரு மாப்பிளைக்கு மனம் முடிக்கும் ஆசை ஆனா அதே துப்புறவு தொழில் செய்யும் மாரி பூவரிசியை தனக்கு மனமுடிக்க ஆசை என கனகத்திடம் பெண் கேட்கிறார். பூவரசி கார் டிரைவர் மனோவை காதலிக்கிறார். இந்த முக்கோண காதலில் யார் யாருடன் சேர்ந்து வாழ்ந்தனர் யார் வீழ்ந்தனர் என்பதே இந்த தூப்புக்காரி. துப்புரவு தொழிலாளியும் மனிதனே அவனை கண்டால் மூக்கைப் பொத்தும் பொது சமூகத்தை வரிக்கு வரி வசைபாடுகிறது தூப்புக்காரி. -கலைச்செல்வன் செல்வராஜ்.
ஒரு பெண்ணின் காதலும், காமமும், ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் பதிவுசெய்வதையே கலாச்சார சீர்கேடு என்று கருதும் இச் சமூகத்தில், சமூகத்தால் இழிவு நிலையில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணின் உணர்வுகளை, அவளுக்கு ஏற்படும் வலிகளையும் அவமானங்களையும் மிகவும் அழுத்தமாகவும், தெளிவாகவும் "தூப்புக்காரி" என்ற இந்த நூலில் எழுத்தாளர் பதிவு செய்துள்ளார்.
தூப்புக்காரி என்பது மனித கழிவுகளை அகற்றும் தொழிலில் ஈடுபடுகிறவர்களை (பொதுவாக துப்புரவு தொழிலில் ஈடுபடுபவர்களை) குறைத்து/இழிவாக "தூப்புக்காரி" அல்லது "தூப்புக்காரன்" என்று கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படும் பேச்சுவழக்கு சொல்.
மருத்துவமனையில் துப்புரவு வேலை செய்யும் கனகத்தின் வழியாகவும், அவளின் மகள் பூவரசின் வழியாகவும், பிற கதாபாத்திரங்களின் வழியாகவும், துப்புரவு தொழிலில் இருப்பவர்களின் வாழ்க்கை வலிகளையும், பொருளாதார மற்றும் சாதி காரணங்களால் இந்த தொழிலாளர்களின் குடும்பம் அந்தத் தொழிலை விட்டு வெளியே வருவது எவ்வளவு கடினம் என்பது எதார்த்தமாக விளக்கப்படுகிறது.
எல்லோரும் நம்மைப் போன்ற மனிதர்களே. ஆனால் அவர்கள் செய்யும் தொழில், அவர்களிடம் உள்ள பொருளாதார நிலைமை, முக்கியமாக சாதி என்பதைக் காரணமாக வைத்து, அவர்களுக்கு இங்கு மரியாதையும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
இந்த நாவல் வலிகளும் வேதனைகளும் நிறைந்திருந்தாலும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் அன்போடும் கனிவோடும் பழக வேண்டும் என்பதையும், நம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சீரமைக்கவே நாம் முயற்சிக்க வேண்டும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த நாவலை சிறப்பாக எழுதிய எழுத்தாளர் மலர்வதிற்கு அன்பும் பாராட்டுகளும்.
Thooppukaari is a raw and unsettling novel that forces the reader to confront lives usually rendered invisible. The book offers a stark reflection on poverty and caste, suggesting that extreme poverty flattens social hierarchies and leaves little room for inherited privilege. While the graphic descriptions of sanitation work and filth can be deeply uncomfortable, they are integral to the book’s honesty and impact.
one of the best books that leave your heart heavy. The social concern mentioned here will burden one's mind. Social hierarcy designs almost all human things. castesim in our country descends with one's life's journey and lasts even after death. Some people, especially the poor are often taken as prey or obliged to become prey in the hands of the preferred ones in the society. It is a must need for everyone to understand and practice equality at its very basic level to leverage the social status of all set of community. what saddens, the most ...apart from the book.. is that not realising the fact that human strength and power are nothing compared to the Universe in where we live and we are not even strong enough to tackle the lowest of the lowest changes happening around us.
Reminds me of writer Thagazhi Sivasankara Pillai's "Thotiyin Magan" (translated by Su.Ra)... And also, almost equals to the level of impact "Thotiyin Magan" makes among its readers..
On the account of this book, Malarvathi looks promising in Tamil Literature!!!
Portrays a raw picture of people who live at a very low place in the society and does the job of cleaning the Human waste at hospitals and public places...
“தூப்புக்காரிகளின் துன்பமும், வலியும், வேதனையும், அவமானத்தையும், இழப்பையும் போக்க தன் மகள் இதே கழிவுகளுக்கிடையில்தான் வளரனும்; இதுதான் உண்மையான வாழ்க்கை அனுபவம்; இதிலிருந்துதான் அவள் உயர்ந்து வரணும்; அதுதான் உண்மையான சாதனை; அப்போதுதான் அவளால் மாற்றத்தை உண்டாக்க முடியும்” என்னும் கூற்று பூவரசி, கனகம் போன்றவர்களின் துயரமிகு வாழ்க்கையின் ஆழத்தையும் அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்ற அடங்காத வேட்கையையும், ஏக்கத்தையும் காட்டுவதாகவே நான் உணர்கிறேன். இங்கு தாய் பாசம் என்பது மறைந்து ஒரு பெண்ணின் பேராற்றலும், போராடும் குணமுமே என் கண்முன் வந்து சென்றது. மாரி சுத்தபடுத்தும் தொழிலாளி மட்டுமல்லாமல் எனக்கு இந்த நாவலில் பிடித்த முக்கிய கதாபாத்திரம். இது சாதிக்கொடுமை,பெண்ணடிமை,ஆணாதிக்கம்,அதிகாரம் படைத்தோரின் அநாகரிகமான வார்த்தைகள், சுத்தப்படுத்தி தூய்மையாக்கும் துப்புரவு தொழிலாளிகளை இச்சமூகம் பார்க்கும் நிலை ஆகியவற்றை சமுதாய அக்கறையோடு புதுமைப்பெண்ணாக வலம் வரும் நாவலாசிரியர் மலர்வதி அவர்கள் எழுதியுள்ளார்
மிகவும் அருமையான நாவல். உலகிலே மிக சிறந்த தொழில் துப்பரவு தொழில் தான் என்பதை எனக்கு இந்த கனகமும் மாரியும் புரிய வைத்து விட்டார்கள். துப்பரவு தொழிலர்களும் மனிதர்கள் தான் என்பதை மிக சிறப்பாக புரிய வாய்த்த நாவல் ஆசிரியர் மலர்வதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . கீழ்வருவன புத்தகத்திலிருந்து. வெறும் அழுகைத் தவிர ஒண்ணுமே இல்லன்னு நினச்சேன். ஆனா ஒன் மனசு அழகு மாரி . அழுக்குத் துணியப் போட்டு , அழுக்குல நின்னாலும் நீதான் அழகான மனுஷன். ஆடம்பர துணி உடுத்தியிட்டு வெளியில் பெரிய ஆளுகளை போல காட்டிக்கிற பலருக்குள் ஒரு அழுக்கான மனசு கிடக்கு. ஒரு சின்ன மணம்கூட ஒனட்டண்டு வராம நாரிபோனாலும் , நீதான் ஆணு . நீதான் சௌந்தரியம் உள்ள மனுஷன் .
மனதை உலுக்கும் எழுத்து. எளிய மனிதர்களைக் கொண்டு சமூக அவலங்களை முகத்தில் அறையும் எழுத்து. இந்நிலை மாறவேண்டும் என படிப்பவர்களை யோசிக்க வைக்கும் எழுத்து. வெகு நாளைக்கு பிறகு படித்த நல்லதொரு இலக்கிய படைப்பு!