Jump to ratings and reviews
Rate this book

வயது வந்தவர்களுக்கு மட்டும் [Vayathu Vanthavargalukku Mattum]

Rate this book

248 pages, Paperback

First published January 1, 2011

65 people are currently reading
1070 people want to read

About the author

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born in Idaiseval village in 1923. He dropped out of school in the seventh standard. He was appointed a professor of folklore at Pondicherry University in the 1980s. He held the title of Director of Folktales in the university's Documentation and Survey Centre. He was a member of the Communist Party of India and went to prison twice for his participation and support in the CPI organised peasant rebellions during 1947–51. In 1998-2002 he was a General council & Advisory board Member of Sahitya Akademi.

Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. The Magical Deer), which came out in 1958. It was an immediate success. Ki. Ra.'s stories are usually based in Karisal kaadu (scorched, drought stricken land around Kovilpatti ). He centres his stories around Karisal country's people, their lives, beliefs, struggles and folklore. The novels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequel Gopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are among his most acclaimed; he won the Sahitya Akademi award for the latter in 1991. Gopallapuram novels deals with the stories of people living in a South Indian village before the arrival of the British. It involves the migration of people escaping brutal kingdoms north of Tamil Nadu. As a folklorist, Ki. Ra. spent decades collecting folktales from the Karisal Kaadu and publishing them in popular magazines. In 2007, the Thanjavur based publishing house Annam compiled these folktales into a 944-page book, the Nattuppura Kadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he has published around 30 books. A selection of these were translated into English by Pritham K. Chakravarthy and published in 2009 as Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Ki. Ra. is well known for his candid treatment of sexual topics, and use of the spoken dialect of Tamil language for his stories (rather than its formal written form). In 2003, his short story Kidai was made into a Tamil film titled Oruthi. It was screened in the International Film Festival of India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
63 (37%)
4 stars
58 (34%)
3 stars
25 (14%)
2 stars
14 (8%)
1 star
9 (5%)
Displaying 1 - 16 of 16 reviews
Profile Image for Sugan.
144 reviews38 followers
December 11, 2020
Once upon a time, when I grew up in a village, there used to be this grandfather whom all the kids in the neighborhood used to visit in the evening. He was a storyteller. He used to narrate stories to all the kids. I enjoyed it a lot. But then I grew up and forgot all those stories. btw. they were not adult stories.

This book reminded me of those days. Its a collection of adult stories told like this to one another in a village. With globalization comes the problem of every kids these days listening to Amar Chitra Katha and Tom & Jerry but missing out on these local stories. Its a nice work from Ki. Ra to record such stories in writing.

These short stories leave a smile in your face once they are done.
Profile Image for Manikandan Jayakumar.
94 reviews19 followers
May 28, 2021
எல்லா கதைகளும் கீழ் இருந்து மேல் நோக்கிய கதைகளாவே இருக்கறத பாக்க முடியுது, பெரும்பாலான கதைகள் மன்னர்கள் அல்லது ஜமீன்தார்கள் பாத்தியதா இருக்கு இல்லனா பெண்களின் பாலியல் மனநிலையை பேசுது. மன்னனும் தளபதியும் இரண்டு புறமும் இருக்கும் போதே ஒரு பெண்ணாலே வேற ஒரு ஆண் கூட உறவு கொள்ள முடியும் அதே போல மன்னனே வந்தாலும் அவளுக்கு பிடிக்கலைனா ஒன்னும் பண்ண முடியாது. இதெல்லாம் வச்சி பாக்கும்போது இந்த கதைகள் பெரும்பாலும் ஆண் உலகத்தை சேர்ந்ததாவே தெரிது.
Profile Image for Muthu.
27 reviews2 followers
September 26, 2022
பாலியல் பற்றிய ஒரு வித ஒவ்வாமையை இந்த சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது . ஒரு ஆணோ பெண்ணோ தங்களுடைய காம உணர்வுகளை பொதுவெளியில் வெளிப்படுத்தினால் பலவிதமான சிக்கல்களை அனுபவிக்க வேண்டி இருக்கிறது . இந்த இடத்தை தான் கி.ரா கட்டு உடைக்கிறார் நம்ம கிராமிய நடைமுறையில் எவ்வாறு பலவித பாலியல் கதைகள் இருந்தது என்றும் பார்ப்பன தோற்றம் பிறகும் திருமணம் என்பது இயற்கைக்கு எதிரானது அதனுடைய தோற்றம் தான் பல பிரச்சனையை வித்திட்டது பெண்ணை உடமையாக்குதல் அதன் பிறகு சமூகத்தில் காமம் எவ்வளவு சிக்கலாக மாறிவிட்டது என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது . கி.ரா சொல்லும் வயது வந்தவர்கள் கணக்கு அடிப்படையில் இல்லை மனம் அடிப்படையில்
Profile Image for Prîñçê Deepu.
33 reviews16 followers
February 9, 2014
It is hard to write/compile such a book. It needs lots of guts. If slipped by few inches it will be a victim of vulgarity. Ki.Ra manages it well with his sense of humour. (just imagining how it would be if Charu has written it!)
Profile Image for Prasanth Sunderasan.
126 reviews1 follower
March 21, 2022
Shouldn't we read stories of all kind!? I can't say this one is enjoyable through and through. Love, revolutions, relationships, disgust and yes, sex! A must read for those who love tamil literature (and 18+).
Profile Image for Dwarakeshwaran Malathi Magesh.
52 reviews3 followers
March 18, 2021
Ha!

This book brought me back to my childhood days.

In my 9th Grade, we boys used to talk a lot about Sex, and the stories involving it. Most of them were funny and shameful. Anyhow, we enjoyed talking about it.

Mostly the stories involve King and Queen adult stories or misogynistic/politically incorrect stories. The short stories in this book gave me those nostalgias.

I have so much fun reading this.
Profile Image for Annamalai Arunachalam.
14 reviews
August 27, 2019
நாட்டார் வழக்கில் சொல்லப்படும் பாலியல் கதைகள் விரசமில்லாமல் தொகுத்து வழங்கபட்டுள்ளன...

நடைமுறையில் மறந்து போன சொற்கள், உபயோகப்படுத்த பட்டுள்ளன...

Profile Image for Unmaththan உன்மத்தன்.
Author 3 books18 followers
October 8, 2021
"கெட்டுப் போறவன் எப்படியும் கெட்டே போவான். சொல்லப்போனா கெட்டவார்த்தை கதைகளை நிறைய தெரிஞ்சு வச்சுகிட்டவன் அவ்வளவு சீக்கிரமா கெட்டுப் போயிறமாட்டான்" என முதல் கதையில் சொல்கிற தாத்தாவை முன்னிறுத்தி கி.ரா நம்மோடு பேச; இல்லை, கதை சொல்ல ஆரம்பிக்கிறார். 'பஞ்சு'வின் முன்னுரை இந்த புத்தகத்தை சரியான திசையில் அனுக தொடக்கத்திலேயே நம்மை தயார் செய்து விடுகிறது.

இந்த மாதிரி கதைகளை சொல்ல நண்பர்கள் இருந்தபடியே இருக்கிறார்கள். அவர்களை சுற்றி ஒரு கூட்டம் தன்னைப்போல் உண்டாகிவிடும். அப்படி நான் கேட்ட பல கதைகள் "ராணி"யை மையமாக கொண்டு நிகழும். அதன் பின்னால் இருக்கும் மனநிலையை இப்போது புரிந்துக் கொள்ள முடிகிறது. சொல்லப் போனால், பாலியல் கதைகளில் வருகிற பெரும்பாலான பெண்கள் தான் உண்மையில் உரிமையை பேசுவது போல் தெரிகிறது.

"ஆம்பள எப்படியும் நடப்பாம்ணா பொம்பளையும் எப்படியும் நடப்பா. ஆம்பள தெரியும்படி நடக்கான்; பொம்பள தெரியாதபடி நடந்துகிடுதா"‌, இப்படி கதையின் வழியே கி‌.ரா பல விஷயங்களை கடத்தி விடுகிறார். "சுரண்டல் என்கிற விடயம் பொருளாதாரத்துல இருப்பது போல பாலியிலும் உண்டு" "யாருக்கு எம்புட்டு வேணும்ன்னு அவங்கவங்க பாத்துக்குவாங்க; அந்த கவலை நமக்கெதுக்கு" என்பது போல பல விஷயங்களை கதைக்குள் வைத்து தருகிறார். திருமணம் என்ற அமைப்பும் உடைமை மனப்பான்மையும் எந்த அளவு பாலியலோடு தொடர்பு வைத்திருக்கிறது என இன்னும் ஆழமாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

பாலியல் கதையில மனுஷனோட கற்பனையும் காலமும் தெரியும் என்கிற கி.ரா, இந்த கதைகளை தொகுத்து, பக்குவமான எழுத்தில் கொண்டு வந்து கொடுக்கிறார். நம் நகர தாத்தாக்கள் சொல்லாததை, நம் நண்பர்கள் நகைத்தபடி சொல்லியதை, நமக்கு தெளியும்படி சுவாரசியமாக சொல்கிற கி.ரா, இந்த புத்தகத்தை இப்படி முடிக்கிறார்; "எப்படியோ; எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வந்தது மாதிரி இந்த ஒலகத்துக்குத் தெரிஞ்சது"
Author 2 books16 followers
June 15, 2024
சிறு வயதினர் படிக்க கூடாது , கி.ரா இப்படி எழுதலாமா என்றெல்லாம் ஓவர் பில்ட் அப் கொடுக்கப்பட்ட நாவல் . வயது வந்தவர்கள் மட்டும் படிக்க வேண்டிய கதைகள் இவை . காரணம் அவர்களால் தான் இந்த கதை தொகுப்பில் வரும் நகைச்சுவைகளையும் , குறியீடுகளையும் ரசிக்க முடியும் என்பதனால் என்கிற காரணத்தை தாண்டி பெரிதாக வேறு ஒன்றுமில்லை . ஒருவேளை புத்தகம் வெளிவந்த காலத்தில் சமூகம் பெரிதாக முன்னேறியில்லையோ என்னவோ . என்னை கேட்டால் இப்போதெல்லாம் இந்த நாவலை படிக்கும் இளவட்டங்கள் இந்த கதைகளை கண்சிமிட்டாமல் படித்து முடித்து தூக்கி வீசிவிடுவார்கள் . கதைகளை தொகுத்து வழங்கியது கி.ரா என்பதால் மிகவும் அருமையாக வந்திருக்கிறது , ஒரு கதை தொகுப்பை படிப்பது போல் அல்லாமல் நல்ல சுவாரசியமாகவே இருக்கிறது . நாட்டுப்புறத்தில் அரசல் புரசல்களாக , வாழ்க்கையை ஓட்ட திண்ணைகளில் உட்கார்ந்து அசைபோடப்பட்ட , சிறிது காம ரசம் சேர்க்கப்பட்ட கதைகள் . இந்த கதைகள் நன்றாக இருக்கிறது , இந்த கதைகள் எல்லாம் சுமார் என்று சொல்வதற்கில்லை . எல்லா கதைகளிலும் சிறிது காம ரசம் உற்றப்பட்டிருப்பதால் படிப்பவரின் ரசனைக்கேற்ப கதைகள் இருக்கிறது . சில கதைகள் நம் காதுகளை கடந்த மாதிரி தெரிந்தாலும் பெரும்பாலும் கதைகள் புதிதாகவே இருந்தது . கி.ரா எழுத்துக்களை இவ்வளவு வேகமாக படிக்க முடியாது அந்த ஆசை இருப்பவர்களும் , கி.ரா படைப்புகள் முழுவதையும் படிக்க வேண��டும் என்கிற வைராக்கியம் உள்ளவர்களும் இந்த கதையை படிக்கலாம் . படிக்காமல் விட்டால் பாதகமில்லை .
Profile Image for Khiya_view.
20 reviews2 followers
July 2, 2022
வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி. ராஜநாராயணன். இது நாட்டுப்புற பாலியல் கதைகளின் தொகுப்பு.

"It's not sex stories but sex education"

எனக்கு தெரிந்தவரையில் தமிழில் பாலியல் கதைகள் குறைவு. அவை வாய் வழி கதைகளாக இன்றளவிலும் உள்ளன. இந்த கதைகள் ஏன் தேவை என்பதற்கு இந்த புத்தகத்திலேயே விடை உண்டு. ஆண் , பெண் இருவரும் தன் உடல் மற்றும் தன் துணையின் உடல் மற்றும் அதன் தேவைகளை புரிந்துகொள்ளவே (அடிப்படையில்). இணையதளம் உள்ள இந்த காலகட்டத்திலேயே பாலியல் உறவு குறித்து தவறான புரிதல்கள் உள்ளன. ( மற்ற காரணங்களை கி .ரா வே விரிவாக கூறியுள்ளார்.)

அதிக வக்கிரம் இல்லாமல் பெரும்பான்மையான உங்களுக்கு சிரிப்பையே தூண்டும். பெண்களை கொச்சையாக சில கதைகள் சித்தரிப்பதை நாம் காணலாம் ஆனால் அது அவர்களின் தேவைகள் நிராகரிக்கப்பட்டதின் விளைவுகளே என்பதை புரிந்துக்கொள்ளவேண்டி உள்ளது. (ஆண்களின் பார்வையில் உருவான கதைகள்,சரி தவறு என்று நான் எதையும் எடை போடவில்லை).

"ஏந் தாத்தா கெட்ட  வார்த்தைகளை கேட்டால் பிள்ளைகள் கெட்டுப்போவார்களா"

"கெட்டுப் போறவன் எப்படியும் கெட்டே போவான். யாராலும் அதை நிறுத்த முடியாது. சொல்லப் போனா கெட்ட வார்த்தைக் கதைகளை நிறைய்யத் தெரிஞ்சி வச்சிக்கிட்டவன் அவ்வளவு சீக்கிரமாக் கெட்டுப் போயிரமாட்டான்"
             -கி . ரா

மொத்தம் 52 கதைகள் உள்ளடங்கிய புத்தகம்.
விலை -200
Profile Image for Soundar Phil.
129 reviews12 followers
October 19, 2022
பிரபலமான மூத்த எழுத்தாளர் கி.ரா அவர்கள் இப்புத்தகத்தின் கருவை கருத்தில் கொண்டு ஒரு பெரும் திரட்டு முயற்சியில் ஈடுபட்ட்டதின் மூலம் தமிழுக்கு இப்படைப்பு கிடைத்திருக்கிறது. தலைப்புக்கு ஏற்றார் போல் வயது வந்தவர்கள் மட்டுமே கேட்க வேண்டிய, கூடிய காரியங்கள் பேசப்பட்டுள்ளது.

பொதுவாக மக்களிடையே ஆங்காங்கு பரவலாக பேசப்பட்டும், பகிரப்பட்டும் வந்த பாலியல் சம்பந்தப்பட்ட, ஆபாசக் கற்பனைக் கதைகள் காலப்போக்கில் அழியக்கூடிய நிலை இருப்பதை இப்புத்தகத்தை படித்த பின் உணர முடியும்.

மன்னர் காலத்தில் தொடங்கி ஜமீன், நாட்டாமை, சாதாரண மக்கள், பறவைகள், விலங்குகள் என பல்வேறு கதைமாந்தர்கள் கொண்ட 50-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். உயிர்களுக்கு ஏற்படும் உடல் தேவையையும், அத்தேவையானது அதிகரிக்கும் போதும், உயிரற்று இருக்கும் போதும், கற்பனையில் திளைக்கும் போதும் யாரோ எங்கோ உருவாக்கிய இக்கதைகள் கொடுக்கும் சுவாரசியம். அது உச்சம்.

இப்புத்தகத்தின் அவசியத்தையோ, இதன் கருவை நியாயப்படுத்துவதையோ, சமூகத்தில் இதனால் நேரும் நன்மை, தீமைப் பற்றியோ நான் வாதிடும் அவசியம் இல்லை. இப்புத்தகத்தின் முன்னுரையில் அதற்கான எல்லா பதிலையும் கி.ரா தந்திருக்கிறார்.

பாலியல் கல்வியை நாம் அவசியம் என்போம் எனில் இக்கதைகள் அவற்றின் மூதாதையர்கள்.
Profile Image for Bavya Krishnan.
57 reviews2 followers
January 23, 2022
This is the first tamil adult book I have read.. but still there was no vulgarity.. at the end of every story there was a smile lingering.. hats off to ki ra for writing such a delicate topic without wavering or treading behind the line.. this is the most different book I have read.. if you are looking for a different style of book with a tad bit of adult stuff read this.. as suggested it is definitely for adults only
Profile Image for Vivek KuRa.
279 reviews51 followers
January 17, 2019
மற்றுமொரு கீ ரா வின் வாசிக்கவேண்டிய படைப்பு . கதைகளைவிட வட்டார வழக்கு பேச்சிலேயே கதைகளை சொன்ன விதம் என்னை கவர்ந்தது . எல்லா கீ ரா ரசிகர்களாலும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் .
Profile Image for The Balaji.
99 reviews2 followers
January 6, 2020
This book is a collection of adult folklores and the best part is obscenity hasn't been sprinkled in any of the tales.
Profile Image for Balaji M.
221 reviews15 followers
November 21, 2016
40-ற்க்கும் மேலான கிராமிய பா*யல் கதைகளை 250 பக்கங்களில் கொண்ட புத்தகம் இது. அதில் சில கதைகள் நாம் முன்பே கேட்டவையாகவும் இருக்கின்றன...அனைத்து கதைகளும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்றாலும் உண்மை கதை போல் சொல்கின்ற போக்கே, ஒரு வித சுவாரசியத்தை உண்டாக்குகிறது...!
கிராமத்தில் உள்ள குசும்பு பிடித்த பெரியவர்கள்(தாத்தா), அவ்வூர் சில்வ(வா)ண்டுகளுக்கு சொல்லும் விதமாக கதைகள் இடம்பெறுகின்றன. நிறைய கதைகள் இருந்தாலும், அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல.
இப்புத்தகத்தின் முதல் பதிப்பு நன்றாக விற்கப்படும் என எதிர்பார்த்து ஏமாந்ததாக ஆசிரியர் தன்னுரையில் கூறுகிறார்...அவ்வளவு ஒழுக்க சீளர்களா மக்கள் என...?

கற்பனையே என்றாலும்
இப்படியா ??
இப்படி கூடவா??
என்றெல்லாம் செல்கிறது இக்கதைகள்...Just like that என வாசிக்கலாம் "வயது வந்தவர்கள் மட்டும்" ...!

புத்தகத்தின் அணிந்துரையிலிருந்து ஒரு பகுதி ...
//
மனித விலங்கிற்கு மண்ணிலும் பெண்ணிலும் சாகும் வரை , திருப்தியே கிட்டுவதில்லை என்ற கருத்தாக்கத்தின் வெளிப்பாடுகள் இத்தொகுப்பில் உள்ள சில கதைகளின் மூலம் வெளிப்படுகிறது .

பிரெஞ்சு தத்துவஞானி டெஸ்காட்டஸ் இப்படி எழுதினார்.:
"நான் எனக்கென்று சொந்தமான சிலவற்றை,
வைத்து கொள்வதன் மூலமாகத்தான், உயிரோடு
இருப்பதாக உணர்கிறேன்"

இத்தகைய உடைமை உணர்வைத் தக்க வைத்து கொள்வதற்கான களத்தில் இறங்கி, வெற்றியை நிலைநாட்ட மனிதன் முயல்கிறான். இந்த முயற்சியில் ஆண்/பெண் பா*யல் உறவுதான் முதல் போர்க்களமாக அமைகிறது. எனவே பெண்தான் முதன் முதலில் அவனால் வெற்றி பெற்று அடையப்பட்ட முதல் உடைமைப் பொருளாக அமைகிறாள். இதாகாய கருத்தாக்கங்களின் அவள் போர்க்களத்தில் தூக்கிச் செல்லப்பட்டிருக்கிறாள்; பரிசு பொருளாக வழங்கப்பட்டிருக்கிறாள் ; ஏலமாக விடப்பட்டிருக்கிறாள்; அந்தப்புரத்தில் அடுக்கப்பட்டிருக்கிறாள்; அரசியலில் 'பேரம்' பேசப்பட்டிருக்கிறாள்; சூதுப்பொருளாக வைக்கப்ப்பட்டிருக்கிறாள் - இத்தகைய "உடைமை உணர்வு" எப்படியெல்லாம் ஆண்/பெண் உறவை அமைத்திருக்கிறது என்பதையும் இக்கதை தொகுப்பில் காண முடிகிறது....
//
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 16 of 16 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.