Jump to ratings and reviews
Rate this book

தமிழக அரசியல் வரலாறு

Rate this book
இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது.

எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, மாநில அரசுகளின் ஈழக் கொள்கை, ராஜீவ் படுகொலை என்று தமிழகத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட ஈழப் போராட்டப் பக்கங்கள் சிறப்புக் கவனம் பெறுகின்றன.

காவிரி நீர்ப்பங்கீடு, இட ஒதுக்கீடு போன்ற தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னைகளை அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்கும் இந்தப் புத்தகம், அண்டை மாநில உறவுகளையும், மத்திய மாநில உறவுகளில் நிலவும் அரசியல் விளையாட்டுகளையும் படம்பிடிக்கிறது.

இன்றைய தமிழக அரசியலின் புதிய சக்திகளாக உருவெடுத்திருக்கும் பாமக, மதிமுக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகள் உருவான பின்னணியைப் பதிவுசெய்திருப்பதோடு, தமிழகத்தில் நிலவும் சாதி மற்றும் வாக்கு அரசியலின் பரிணாம வளர்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது இந்தப் புத்தகம்.

2000-ம் ஆண்டு நிகழ்வுகளோடு நிறைவு பெறும் இந்நூலின் களம் நம் காலகட்டத்துக்கு மிகவும் நெருக்கமானது. ஆர். முத்துக்குமார் இந்தப் புத்தகத்தில் அளித்திருக்கும் விரிவான வரலாற்றுப் பின்னணியில் இன்றைய அரசியலைப் பொருத்திப் பார்க்கும்போது பல புதிய அர்த்தங்கள் காணக்கிடைக்கின்றன.

தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியான?ஆடு.. புலி.. அரசியல் தொடரின் நூல் வடிவம்.

432 pages, Paperback

First published January 1, 2013

26 people are currently reading
89 people want to read

About the author

பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
24 (31%)
4 stars
34 (44%)
3 stars
11 (14%)
2 stars
4 (5%)
1 star
3 (3%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Umesh Kesavan.
451 reviews178 followers
July 15, 2014
Unlike the first volume ,this book hastily chronicles events from 1977 to 2000 without any proper ideological framework. (But this is also reflective of the kind of personality-based politics practised in Tamilnadu.)May be useful for those who read for exams but not exactly worthy for true students of history.
Profile Image for Elayaraja Subramanian.
130 reviews8 followers
July 25, 2021
80-களுக்கு பிறகான அரசியல் களத்தின் பெரும்பகுதியை ஈழப் பிரச்சனையும், இந்தி எதிர்ப்புமே ஆக்ரமித்திருக்கின்றன. அதே போன்று, 5 வருட ஆட்சிக்காலத்தை மாநில அரசு கடப்பது என்பது பெரிய சவாலாகவே இருந்திருக்கிறது என்பதை புத்தகம் வாசித்த பிறகே தெரிந்து கொண்டேன். 1996 தேர்தலுக்கு பிறகே நிலையான, ஐந்து வருட ஆட்சி தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்றொரு வாசகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தமிழக அரசியல் களத்தில் தேர்தல் காலத்தில் ஏற்பட்டிருக்கும் கூட்டணிகளை வாசிக்கும் போது நிஜமாகவே தலை சுற்றுகிறது. வேறு வேறு சித்தாந்தங்கள், முற்றிலும் எதிர் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அல்லது துறந்துவிட்டு கூட்டணி வளையத்துக்குள் ஒன்று கூடியிருக்கிறார்கள்.

கூட்டணி தாவலில் வைகோ என்கிற வை. கோபால்சாமி பெரும் சாதனையே நிகழ்த்திருக்கிறார். சந்தர்ப்பவாத அரசியல் என்கிற வார்த்தையை நினைவுபடுத்துபவராகவே வைகோ தோன்றுகிறார். தனிப்பெரும் கட்சியாக மதிமுக வராது என்பதை உணர்ந்து கொண்டதும் திமுக, அதிமுக என்று அணி மாறுவதில் தயக்கமேதுமில்லாமல் செயல்பட்டிருக்கிறார்.

முழுக்க திமுக எதிர்ப்பில் தோன்றிய அதிமுக 13 வருட காலம் ஆட்சியை தக்க வைத்திருந்தது எம்ஜியார் எனும் நடிகர் எந்த அளவிற்கு மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார் என்பதை தான் காட்டுகிறது. அதே நேரத்தில் அண்ணாவிடம் படித்த அரசியல் பாடம் நடிகர் என்பதை தாண்டி சிறந்த அரசியல்வாதியாகவும் தன்னை தேற்றிக் கொண்டிருக்கிறார். ஈழ விவகாரத்திலும், விடுதலை புலிகள் மீதும் மிகுந்த கரிசனம் கொண்டிருந்திருக்கிறார். சிறிது காலம் அவரது குடும்பம் இலங்கையில் வசித்தது காரணமாக இருந்திருக்கலாம்.

இந்தி திணிப்பு போராட்டம், குலக்கல்வி எதிர்ப்பு என பல போராட்டங்களால் தன்னை மக்கள் மத்தியில் நிலைநிறுத்திக் கொண்ட திமுகவை காட்டிலும் அதிமுகவை தான் மக்கள் அதிக காலம் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். அதுவும் அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்தது அதிமுகவுக்கு மட்டுமே நிகழ்ந்திருக்கிறது (அண்ணா மறைவுக்குப் பிறகான தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்ததை தவிர்த்து). எம்ஜியார் என்ற ஒற்றை மனிதர் தான் அதிமுக இத்தனை கால செல்வாக்கு பெற காரணமா? ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்று வந்த பின்பும் கூட அவரது பிம்பம் மக்களிடையே மாறாதது ஆச்சர்யம் தான்.

எமர்ஜென்சி, இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு போன்றவை தமிழக அரசியல் களத்தையும் சூடாகவே வைத்திருக்கிறது.

தமிழக அரசியலை முழுதாக தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இரண்டு பாகங்களையும் வாசித்துப் பாருங்கள்.
Profile Image for Santhosh Kumar CT.
64 reviews1 follower
August 20, 2025
Tamilaga Arasiyal Varalaru is a two-part series adapted from the author’s newspaper columns. Considering the medium, the author wisely employs simple language and brevity, focusing only on the key causes behind major political events—often presented in clear lists. The narrative captures inspiring moments, such as the formation of new parties by leaders after breaking away from their own. In the end, the book effectively portrays Tamil Nadu politics as a field where “all is fair in love and war.”

The strong education policies of Kamarajar paved the foundation for Tamil Nadu’s present industrial strength, setting the stage for the state’s long-term development. Following him, Anna emerged as a leader whose powerful oratory and mastery of simple, evocative language reshaped political communication—skills later borrowed and adapted by many others. The stability of the DMK after Anna, contrasted with the decline of the Congress, stands out as a defining theme. M.G.R. then entered as a rare actor-politician with genuine administrative knowledge, something his peers in Tamil cinema often sought but never truly matched. Finally, the entry and eventual downfall of Jayalalithaa illustrate a hard truth—that gaining power may be easier than retaining it, especially with weak networks and isolation. Through all these shifts, Tamil Nadu remained consistent in resisting Hindi imposition while demanding stronger federal governance, distinguishing itself as one of the few states to uphold such a stance so firmly.
Profile Image for Sandilyan.
1 review1 follower
November 3, 2015
TN Arasiyal varalaru. A must read for all political enthusiasts.!
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.