1). ஜரேவ்ஷான் டாக்டர் (The doctor from Zarevshan) - Nora Adamyan 2). காதல் - Boris Polevoi 3). தெக்ரீனேயின் விமான யாத்திரை - Yuri Rytkheu 4). மதம் மாறியவன் - Andrejs Upīts 5). கொடி - Valentin Kataev 6). சந்திப்பு - Georgi Gulia 7). சர்காய் - ஒரு கவிதை - Derenik Demirchyan 8). சூரிய காந்தி - Oles Honchar
'சோவியத் இனமொழிச் சிறுகதைகள்' என்னும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கதைகளை எழுதியவர்கள், அதிக பிரபலமல்லாதவர்கள். ஆனபோதிலும், இவர்களது படைப்புகள் புகழ் மிக்க ரஷ்ய எழுத்தாளர்களது படைப்புகளோடு போட்டிபோடத் தகுந்தவை.
இத்தகு இனமொழிச் சிறுகதையாளர்களின் படைப்புகள் வழியே புதுவகை நில அமைப்புகள், கூட்டுப் பண்ணைகள், சமுதாயத் தேவைகளை நிறைவேற்ற மக்கள் குழுவாக இணைந்து செயல்படுதல் என புதிய உலகம் காணக்கிடைக்கிறது.
உலகப்போர் நடந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட இக்கதைகள் யதார்த்தத்தை அழகியலுடன் சொல்லும் விதத்தில் தேசப்பற்று, காதல், தனிமைத் துயர், சாகசம் என நவீனத்துவத்தின் ஒரு சூழலை ருஷ்ய நிலத்திலிருந்து காட்டுகின்றன.