"ஆதலினால்" - எஸ்.ராமகிருஷ்ணன்.
குங்குமம் வார இதழில் வெளி வந்த 25 கட்டுரைகளின் தொகுப்பு.
நாம் நமது அன்றாட வாழ்வில்,
சந்திக்கும் மனிதர்கள், கடக்கும் சம்பவங்கள்/அஃறிணைகள்.,
அதேவேளையில், எந்த நிலையிலும், எந்த கோணத்திலும், நமது பார்வையில் பட்டாலும், மனதில் உள்வாங்கப்படாமல் தவற விட்ட தருணங்கள்,
இப்படி பல விஷயங்களை கூர்ந்து கவனித்து, அதனை எண்ணற்ற முறை யோசித்து, அதன் பொருட்டு மென்மேலும் கேள்விகளை எழுப்பி, அதற்குறிய மதிப்பும் மரியாதையும் செய்தோமா, என வாசிப்பவரை சுயபரிசோதனைக்கு உள்ளாக்கும் கட்டுரைகள்.
கட்டுரைகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்..
பொருள் பொதிந்து எழுதப்பட்டிருப்பதால், ஒருமுறை படித்த பின், அதன் படிதான் நாம் இருக்கிறோமா? என சீர்தூக்கிப்பார்க்க, மீண்டும் ஒருமுறை படிக்க தூண்டும்படி உள்ளது.
அதில் சில கட்டுரைகள், பின்வரும் இவைகள்/இவர்களை பற்றி:
எறும்பு
மகப்பேறு மருத்துவர்
உணவு சமைப்பவர்
கூர்க்கா
கல் கடவுள்
ஆசிரியர்
பொதுநல வக்கீல்
முடிதிருத்துபவர்
உடல் ஊனமுற்றவர்
கல்லறை, நினைவில் வாழ்பவர்
கார்ட்டூன் மனிதர்கள்
நடிகச் சிறுமி
அழியும் நூலகம்
மரங்களை தேடி பராமரிப்பவர்
பறவைகளை கவனிப்பவர்
இப்படி மேலும் சில கட்டுரைகளை கொண்டுள்ளது.
புத்தகத்தின் பெயருக்கேற்ப ஒவ்வொரு கட்டுரையின் முடிவின் கடைசி பத்தியில்,
"ஆதலினால்" எனத் தொடங்கி, கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயத்தில், தனது நிலைப்பாட்டை நமக்கு தெரிவிக்கிறார், #எஸ்_ராமகிருஷ்ணன்.
நாம் விரும்பும் எழுத்தாளர்களில் ஒருவராக இவர் இருக்க காரணம், அவரின் ஆழ்ந்த, ஆனால் மெல்லிய எழுத்துக் கோர்வை.
ஒரு மென் சிறகால் வருடி அல்லது அந்த மென் சிறகாகவே நம்மை இலகுவாக
உணரச் செய்து, சுயபரிசோதனைக்கு உட்படுத்தும், மந்திர எழுத்தை படைக்கும் ஒரு தேசாந்திரி, #எஸ்_ராமகிருஷ்ணன்.
அதனை இந்த புத்தகத்தின் மூலமும் நாம் உணர்கிறோம். இந்நூலை படிப்பதற்கு நமது வலுவான பரிந்துரைகள். _/\_