மர்மதேசம் தொலைக்காட்சித் தொடருக்கென்றே பிரத்தியேகமாக சிந்தித்த நாவல் இது. மர்மங்களின் மீடி திறந்து அல்லது தோலை உரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் உள்ள சுவாரஸ்யம் வேறெதிலும் இல்லை. இந்த விட்டுவிடு கருப்பாவும் அந்த ரகமே.. நான்றிய கருப்பசாமிகளும்,ஜயனார்களும் இல்லை என்றால் நிச்சயம் கிராமங்களில் நிம்மதி என்பதே பலருக்கு இல்லாது போய் விடும்.
புத்தகம் : விட்டு விடு கருப்பா எழுத்தாளர் : இந்திரா செளந்தராஜன் பதிப்பகம் : திருமகள் நிலையம் பக்கங்கள் : 384 நூலங்காடி : Bookwards @bookwards_
🔆இன்று இருக்கும் / வரும் சின்னத்திரை தொடர்களை பார்க்கும் போது , நாம் (90’s kids) எவ்வளவு பாக்கியசாலிகள் என்று புரிகிறது . புத்தகங்களை தழுவி எடுக்கப்படும் படங்கள் / தொடர்கள் வெகு சில , மட்டும் தான் வெற்றி பெறும் .
🔆அதில் ஒன்று , மர்மதேசம் . சாதாரணமாக எங்கேயாவது ஒரு குதிரையைப் பார்த்தால் , கூட மர்மதேசம் தான் நினைவு வரும் . கடந்த வருடம் , கும்பகோணம் கோவிலுக்கு சென்றிருந்த போது, ஒரு கோயிலில் பாழடைந்த மண்டபத்தை பார்த்த போது கூட மர்மதேசம் நினைவு தான் வந்தது .
🔆கிராமங்கள் எந்த மாதிரி இருந்தாலும் சிறுதெய்வ வழிபாடு என்பது முதன்மையானது . உதாரணமாக கன்னித் தெய்வங்கள் , தாய் தெய்வங்கள் , கருப்பசாமி , மாடசாமி , முத்தையா , சுடலை மான் …. மாதிரி .
🔆தோட்டகார மங்கலம் என்று கிராமத்தில் , ஊரே கட்டுப்படும் கருப்பசாமி கோவில் . கிராமத்தில் உள்ள பெரிய குடும்பம் ஆனைமுடியார் அவர்களது . எந்தவொரு குடும்ப முடிவும் , கருப்பின் உத்தரவு படிதான் நடக்கும் .
🔆எந்த தவறு நடந்தாலும் தட்டிக் கேட்கும் கருப்பு மற்றும் கருப்பின் வெள்ளைக் குதிரை …. இதை நம்பாத ரீனா மற்றும் இன்ஸ்பெக்டர். கருப்பு உண்மையான சக்தியா அல்லது அசாமியா என்பது தான் - விட்டு விடு கருப்பா.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
Surprised to know how the story concludes differently in the book and its series adaptation 'Vidathu Karuppu'. The book is a treat for readers. For those who watched the series it will be a revisit also a task to observe the difference from book to screen.
"வெள்ளிமணி கட்டி ஒரு விளக்கேத்தி வெச்சு முல்லைப் பூ போட்டு முன்னால் முழங்காலிட்டு உள்ளம் உருக உன் முன்னால் விழுந்தாக்கா வெள்ளம் போல பாஞ்சு வருவியே கருப்பா வந்தாக்கா கருகுமே எங்க துன்பம் நெருப்பா! "
- கோடங்கிப் பாட்டு
விட்டு விடு கருப்பா இந்திரா சௌந்தர்ராஜன்
சிறு வயதில் தொலைக்காட்சியில் பயந்து பயந்து பார்த்த மர்ம தேசம் தொடரின் " விடாது கருப்பு " அதிகம் ஞாபகம் இல்லை என்றாலும் வாலில் தீப்பற்றி கொண்டு ஓடி வரும் வெள்ளை குதிரை, கூடவே பீதியை கிளப்பி பின்னணி இசை, ஓங்கி அரிவாள் வீசும் ஒரு உருவம், சுருட்டு பிடித்து கரகர குரலில் பேசும் கிழவி, சேத்தன், திவ்யதர்ஷினி ஆகியோர் மட்டும் இன்றும் நினைவில் உள்ளார்கள்.
அந்த கதைக்காக சிறு மாறுதல்களோடு எழுதப்பட்ட புத்தகம். கருப்பன், காத்தவராயன் என காவல் தெய்வங்களின் ஆட்சி இல்லாத கிராமங்கள் இருக்காது . அப்படி ஒரு கிராமம் தான் கருப்பனை மனமார தொழும் தோட்டக்காரமங்கலம்.
தப்பு செஞ்சா கருப்பு தண்டிக்கும்,மனசார வேண்டிக்கிட்டா நல்லது செய்யும் என அதீத நம்பிக்கை கொண்ட மக்களின் நம்பிக்கையை அசைத்து பார்க்கும் சம்பவத்தில் தொடங்குகிறது கதை. எனினும் கருப்பு தூரத்து நிழலாகவும், வெள்ளை குதிரையாகவும், வீச்சரிவாளாகவும் அரசாட்சி செய்து மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி தர்மபரிபாலணம் செய்து வருகிறது.
ஆனால் அதை எதிர்த்து கேள்வி கேட்கும் மனிதர்களையும், ஒரு குடும்பத்தினரையும் அதிகம் தண்டித்ததாய் தோன்றும் சூழ்நிலையில் நிஜமாகவே கருப்பு, சாமியா இல்லை ஆசாமிகளின் கண்துடைப்பா என்ற எண்ணம் உருவாகிறது.
நம்மை போலவே கதையிலும் இந்த கேள்விக்கு பதில் தேடி, நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடைய போராட்டம் நிகழ்ந்து, சில எதிர் பார்த்த, பல எதிர்பாராத திருப்பங்களோடு விறுவிறுப்பாக பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு முடிகிறது கதை.
அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு இயல்பாய் உயிரூட்டி இருக்கின்றன. இயற்கையின் அழகும்,நிகழ்வுகளின் வர்ணனைகளும் ஆசிரியரின் வார்த்தைகளில் கண்முன் விரிகிறது.எதார்த்தமான பேச்சு வழக்கில் எழுதப்பட்டிருப்பது எளிமையாக வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் வரும் கோடாங்கிப்பாட்டு அதில் நிகழப்போகும் சம்பவங்களை சூசகமாக முதலிலே கூறிவிடுவது அழகு.
மறந்துவிட்ட விடாது கருப்பு தொடரை மீண்டும் காண வேண்டும் என்று தோன்றுகிறது.
ஓர் நல்ல நூலைப் படித்த சந்தோஷம் பல நாட்களுக்குப் பின் இந்நூலால் கிடைத்தது.
விட்டு விடு கருப்பா - இந்திரா சௌந்தரராஜன் Must Read:- 5/5
மர்மம், தைரியம், கடவுள் நம்பிக்கை, என எல்லாவற்றையும் ஒரே நூலில் படித்த திருப்தி. மக்களின் கடவுள் நம்பிக்கை என்றுமே இன்றியமையாத ஒன்று என்றும், நம்பிக்கை மூடநம்பிக்கையாக மாறும்போது ஏற்படும் சிக்கல்களையும் நிரூபித்த நூல். நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது. அது கடவுளா இல்லையா என்று தெரியாது. ஆனால் உள்ளது என்பது மட்டும் உண்மை. "KARMA" போல!
கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம். ரசித்து வாசித்த கதை. அனைவரும் தவறாமல் வாசித்துப் பாருங்கள்.
பொதுவாக நான் கோவிலுக்குச் சென்று வழிபட மாட்டேன்! நாத்திகவாதியா என்று கேட்கிறீர்களா! பாதி ஆம்! பாதி இல்லை! சில வருடங்களாக எனக்காகக் கடவுளிடம் வேண்டுவதை நிறுத்திக் கொண்டேன்! மற்றவர்களுக்காக வேண்டுவது உண்டு! கோவிலுக்குப் போய் தான் வேண்டுவது என்றெல்லாம் இல்லை என்னிடத்தில்!
ஆனால் பல வருடங்கள் கழித்து என்னைக் கருப்பசாமி கோவிலுக்குப் போகத் தூண்டியது இப்புத்தகம். வேண்டுவதற்காகவா என்று கேட்டால் விடை தெரியவில்லை. புத்தகத்தைப் படித்து முடித்ததும் முதலில் தோன்றியது என்பதால் குறிப்பிடுகிறேன். பொதுவாகவே மன்னிக்கும் கடவுள்களைவிட தண்டிக்கும் கடவுள் என்று சொல்லப்படும் கடவுள்களைப் பிடிக்கும். என் தாத்தா கூட கருப்பனைப் பார்த்தேன் என்று பல முறை கூறியுள்ளார். ஏதோ ஒரு விஷயம் இல்லாமல் சிலர் கூறமாட்டார்கள் இல்லையா?! கடவுள் இருக்கா? இல்லையா!? என்ற வாதத்தை கொண்டு வர வேண்டாம்! ஓர் விஷயம் இல்லாமல் எதுவும் தோன்றிவிடாது! ஆனால் பார்க்காத விஷயத்தின் மேல் வைக்கும் நம்பிக்கையை உங்கள் மீது வையுங்கள் என்று மட்டும் கூறுவேன்!
வெளிச்சம் - இருள்; நல்லது - கெட்டது; என இன்றும் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உண்டுதான். எனவே எப்போதும் நடுவுநிலையில் இருப்பதே நன்று இல்லையா.
நம்பிக்கை வையுங்கள். ஆனால் அது மூடநம்பிக்கையாக மாறாமல் வைத்துக் கொள்ளுங்கள்.
மர்ம தேசம் என்ற தொலைக்காட்சி தொடராகவும் இது இன்றும் YOUTUBE - ல் உள்ளது. விருப்பப்பட்டால் பாருங்கள்.
Gripping story that is narrated in very interesting way. When going with so many flashbacks it's needed for the author to not make the readers lose interest. He has maintained that. There are couple of places which need explanation at the end, but can accept the flaws.
விடாது கருப்பு என்ற ஒரு பிரபலமான தொலைக்காட்சி தொடர் இந்திரா சௌந்தர்ராஜனின் 1997ல் எழுதிய விட்டுவிடு கருப்பா என்னும் இந்த நாவலை தழுவி தான் எடுக்கப்பட்டது.
மதுரை அருகில் தோட்டக்கார மங்கலம் என்னும் ஒரு குக்கிராமத்தில் நடக்கும் ஒரு கதை. மனிதர்கள் செய்யும் தவறை நீதி அரசனாய் முன்னின்று பயத்தையும் கட்டுப்பாட்டையும் விதித்து ஊரை வழிநடத்தும் கருப்பு என்ற கருப்புசாமியை மையமாய் வைத்தே கதை.
கருப்பு ஊரில் சில நியா தர்மங்கள் நிலைநாட்டிநாலும் , கருப்பு சாமி என்ற ஒரு அடையாலத்தின் பெயரில் பல மூடநம்பிக்கைகளும் முட்டாள்தனமான செயல்களும் தோட்டக்காரமங்களத்து மக்களை விட்டுவைக்கவில்லை ..
யார் இந்த கருப்பு ? கருப்பு என்ற ஒன்று உள்ளதா ? அறிவியல் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் இந்த ஊரில் நடக்கும் மர்மமான மற்றும் அதிசய நிகழ்வுகள் எப்படி நடக்கின்றன் ? இதனை யார் பின் நின்று நடத்துகிறார்கள் என்று ஆராய்ந்து உண்மையை கண்டுபிடிக்க ரீனா என்ற ஒரு கதாபாத்திரம் கதை முழுக்க வாசகர்களை அவளின் கேள்வி மூலமும் செயலின் மூலமும் ஒரு அதிசயம்போல நெருப்புபோல தோன்றுகிறாள். கதைகளிலும் காவியத்திலும் நாம் கேட்கும் பெண் அல்ல இவள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவள்.
கொஞ்சம் கூட சலிக்காத அடுத்து என்ன என்ன என்று வாசகர்களை கதை தொடக்கம் முதல் முடிவு வரை விருவிருப்பாய் வைத்திருக்கும் ஆசிரியரின் எழுத்துநடையையும் அவர் வடிவமைத்த கதாபாத்திரங்கள் , ஒரு நிகழ்வை வெளிப்படுத்தும் விதமும் அதற்க்கு அவர் அளிக்கும் விவரமும் மெச்சாமல் இருக்கமுடியாது.
அதிலும் அந்த பேச்சி கிழவியின் கதாபாத்திரமும் அவள் கம்பிரமும் சொல்லவே தேவையில்லை. தொடர் பார்த்தவர்களும் சரி புத்தகம் வாசித்தவர்களும் சரி அவளை யாராலும் எளிதில் மறக்க முடியாது. அவள் நினைவுக்கூட நடுக்கத்தை ஏற்படுத்தும் அப்படிபட்டவள் அந்த பேச்சி .
காலம் காலமாய் மதத்தின் பெயரால் பல மூடநம்பிக்கையான செயல்கள் நம் மண்ணில் நடந்துக் கொண்டிருக்கிறது. இதற்க்கு காரணம் அறியாமை. அறியாமை எதனால் வருகிறது கல்வி அறிவு இல்லாததனாலும் , ஏன், எதற்க்கு என்று கேள்வி கேட்காமல் கண்முடித்தனமான நம்பிக்கையினாலும். இந்த அறியாமையால் பல தவறுகள் ஏமாத்து வேளைகள் நடைபெறுகிறது. யாரே சொன்னாற்கள் ஏவறோ எழுதி வைத்து போனாற்கள் என்ற அசட்டுதனமான நம்பிக்கையால் பல போலித்தனங்கள் சமூகத்தில் நடப்பதை நாம் கண்கூட தினம்தினம் பார்க்கிறோம் அந்தப் போலித்தனங்களை அறிவியலின் அடிப்படையில் கேள்வி எழுப்பினால் இங்க யாரும் கல்லாகட்டமுடியாது..2023ல் இவ்வளவு அறிவியல் வளர்ச்சியிலும் கடவுளின் பேரிலும் மதத்தின் பெயரிலும் நடக்கும் முட்டாள்தனத்தை நாம் பார்க்கிறோம் .அனால் இந்த நாவல் வெளிவந்தது 1997ல் அப்போது இருக்கும் சூழ்நிலையில் இதுபோல ஒரு படைப்பை ஆசிரியர் எழுதியிருப்பது அவரின் காலங்கள் கடந்த சிந்தனையை, முற்போக்குத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
தொலைக்காட்சி தொடரில் வரும் நிகழ்வு மற்றும் முடிவும் புத்தகத்தில் வரும் முடிவும் மற்ற பல நிகழ்வுகளும் அதன் காரணங்களும் சிறிது மாற்றப்பட்டிருக்கும். ஆகையால் புத்தகம் வாசிக்காதவர்கள் என்றாவது ஒருநாள் காலம் இருப்பின் வாசித்துவிடுங்கள். தொலைக்காட்சி தொடரை பார்க்காதவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த Nail Biting Thriller story . don't miss it .
தோட்டகாரமங்களம் ஒரு அழகான கட்டுப்பாடுடைய கிராமம். காவல் தெய்வமாகிய ‘கருப்பு’ தான் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்திற்கும் பொறுப்பு என்று நம்பும் மக்கள் அங்கு வாழ்பவர்கள். ஒரே சமயம் நடக்கும் திருட்டு மற்றும் கொலையில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. கதையின் நாயகி ரீனா தன் தோழியுடன் தோட்டகாரமங்களம் வருகிறாள். அனைத்து மர்மங்களுக்கும் காரணம் சாமி என்று அனைவரும் ஒப்புக்கொள்ள, இல்லை, அது ஒரு ஆசாமியின் வேலை என்று கூறுகிறாள் ரீனா. இறுதியில் வென்றது தெய்வநம்பிக்கையா அல்லது பகுத்தறிவா என்பது தான் மீதிக்கதை.
விருவிருப்பான, சோர்வடைய செய்யாத கதைக்களம். ‘அடுத்தது என்ன’ என்ற பரபரப்பான மனநிலையிலையே நம்மை இறுதி பக்கம் வரை வைத்திருப்பார் எழுத்தாளர். காசுத் தோப்பு வீட்டில் சென்று நொட்டம்விடுவது என்னை மிரள வைத்த அத்தியாயம். இந்த கதையில் பேராசைக் கொண்ட பேச்சி, முற்போக்கு சிந்தனை உடைய ரீனா என திடமான பெண் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளார் ஆசிரியர். வழி தவறிய சிறுவனை வீடு சேர்க்கிறது, காயம் பட்ட வாலிபனுக்கு மருந்திடுகிறது கருப்பசாமி. நாம் அனைவரும் தவறுகளைத் தட்டி கேட்க இப்படி ஒரு தெய்வம் இருக்க வேண்டும் என்று கருதுவோம். ஆனால் அந்த கருப்பன், ராசாத்தி கற்பழிக்கப்படும் பொழுதும், அவள் தற்கொலை செய்தபோதும் ஏன் அதை தடுக்க வரவில்லை என்ற ஒரு வருத்தம் மட்டும் தான்.
இந்திரா சௌந்தர்ராஜனின் புத்தகங்களில் இதுதான் நான் வாசித்த முதல் கதை. மிகவும் அருமையான படைப்பு. திகில் கதைகளை விரும்புபவரா நீங்கள?!? இந்த புத்தகம் உங்களுக்காக!
சிறு வயதில் பார்த்த விடாது கருப்பு தொடரின் மூலம் தான் இப்புத்தகம் என்ற முன்னறிவுடன் படித்ததாலோ என்னவோ, எதிர்பார்த்த சிறப்பில்லாமல் மிக மிகச் சாதாரணமாக முடிந்தது. இப்புத்தகத்தை விட விடாது கருப்பு தொடர் பார்ப்பது சிறந்தது. இது போன்ற ஒரு மிக சாதாரணமான இலக்கில்லாமல் பயணிக்கும் ஒரு கதையை தமிழின் சிறந்த தொலைக்காட்சித் தொடராக மாற்றியது ஒரு மாபெரும் சாதனை.
Queer little village, a dash of whodunit, a sprinkle of horror and suspense, the delicious thrill of not having a clue where the plot is heading and loving every flip of the page as you race toward the shocking finale சாமியா இல்ல ஆசாமியா 🙃🙂
"Nothing ever becomes real till it is experienced"
It’s no surprise that this murder mystery has also flourished on the screen 🤗🤗
This is one of the best thrillers I have read in the recent times. Right from a vivid portrayal of the rustic, fictitious village of Thottakaramangalam (near Madurai) to its (few iconoclasts and rationalists, obviously as well as a majority of its gullible) populace, the author has done a fantastic job in not wasting an iota of anything. It’s a gripping page-turner. Rural Tamil Nadu, its beliefs, its notion of karma and dharma are brought to the fore in this novel. I loved the characterization as well as the dialect, narrative prose, and prosody of the கோடாங்கிப்பாடல்கள் (that starts at every chapter). I haven’t seen the televised serial of this novel in மர்மதேசம் (விடாது கருப்பு), which I know was one of the best that TV had to offer in the late 1990s.
The only negative has to do with this edition of the book I had. Not only did it have quite a few typos, but, the typeset was sub par. Not a big deal, but, if given a choice go for the modern versions and stay away from this version.
வெள்ளை குதிரை மேல் கருப்ப சாமி வலம் வருவதும், அது போல மாளிகையில் பாட்டியின் பேய்யை பார்ப்பதும் என மிக அருமையாக திகிலூட்டுகிறார் இந்திரா. அவர் இந்த புத்தகத்தின் மூலமாக அவநம்பிக்கைகைளை ஒரு பக்கம் ஏளனம் செய்திருந்தாலும், மறுபக்கம் கடவுள் நம்பிக்கையை நிலை நாட்டியிருக்கிறார். இந்த கதையினுடைய கிளைமாக்ஸ் அதுக்கு மிக நல்ல ஒரு எடுத்துக்காட்டு. அதேபோல் ஒரு கிராமத்தின் பசுமையையும் அதன் உயிராக்கத்தையும் மிக அருமையாக நம் கண் முன்னால் கொண்டு வருகிறார் இந்திரா.
மொத்தத்தில் நம்பிக்கை-அவநம்பிக்கை என்கின்ற இரு துருவங்களை ஒன்றாக கொண்டு வந்து நம்மை யோசிக்கவும் ரசிக்கவும் வைத்திருக்கிறார் இந்திரா சௌந்தரராஜன்.
I might have rated this book with five stars had I not watched the series Vidathu Karuppu. The book was a downer compared to the series and I couldn’t help comparing them both although they both have different plots with some similarities.
My one and only best serial MARMADESAM VIDATHU KARUPPU this novel is very intresting thanku so much INDRA SOUNDAR RAJAN sir U are My best novel creator.