"தென்பாண்டி தேரழகா"
தலைவன் - ஐய பாண்டியன்
தலைவி - பவதி
இருவருக்குள்ளும் இருக்கும் அழுத்தமான காதலை தான் இந்த "தென்பாண்டி தேரழகா" கதையில் சொல்லி இருக்கிறேன்.
கதையிலிருந்து சின்ன டீசர்...
அடுப்படியில் கணவனுக்கு பிடித்த உணவுகளை செய்துக் கொண்டு இருந்தவளின் காதில்,
“வதி துண்டை காணோம்” என்று சுல்லேன்று ஒரு குரல் கேட்க, அடித்து பிடித்துக் கொண்டு வந்தாள் அறைக்கு.
“அலமாரியில தாங்க வச்சேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தவள் பரபரவென்று கணவனின் துண்டை தேட, அவளின் காதோரம் சூடான மூச்சுக் காற்று பட்டது. அதில் திகைத்துப் போனவள் பின்னால் திரும்பி பார்க்க ஐயன் தான் அவளை நெருங்கி நின்றிருந்தான். கூடவே வெற்று உடம்பில் துண்டை தொங்க போட்டு இருந்தவன&#