குழந்தைகளாகிய நாமும் இனியன், நிலாவுடன் இணைந்து காட்டிற்குப் பயணம் செல்வோம். இனியனும் நிலாவும் காட்டிலிருந்து கொண்டு வந்த பொக்கிஷத்தைக் காண்போம். இனியன், நிலா அவர்களது வீட்டில், அழகிய பூக்களைத் தரக்கூடிய பூச்செடியை வளர்க்கின்றனர். அவர்கள் வளர்க்கக்கூடிய செடியில் மலரக்கூடிய பூ ஒரு அதிசயப் பூவாகும். அந்த அதிசயப் பூ இனியன், நிலாவுடன் நம்மையும் பயணம் கூட்டிச்செல்லும். இனியன் மற்றும் நிலாவின் பாட்டி, தாத்தா கூறும் நல்ல கதைகள் கேட்டு மகிழலாம்.
குமரன் மாலதியுடன் இணைந்து நாமும் மந்திரக்குச்சியுடன் டப்… டப்… டபக், டப்… டப்… டபக், டப்… டப்… டபக் என விளையாடலாம். குமரனுக்கு கிடைத்த மந்திரக்குச்சி என்னென்ன செய்கிறது என்று கண்டு மகிழலாம்.