Jump to ratings and reviews
Rate this book

நீரதிகாரம்

Rate this book
வரலாற்றில் இடம்பெற்று, வரலாறாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இடங்கள் பல உள்ளன. ஆனால் அந்த இடங்களெல்லாம் வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடம், இரண்டு நூற்றாண்டுகளாக நீண்ட வரலாற்றைத் தாங்கிக்கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆமாம். அதுதான் முல்லைப் பெரியாறு அணை. பென்னிகுக் எனும் பெரும் மனிதம் கொண்ட மாமனிதனின் விடா முயற்சியாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பாலும் உருவான முல்லைப் பெரியாறு அணை கட்டுமானம், சாதாரணமாக நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல என்பதை எழுத்தாளர் அ.வெண்ணிலா தன் விறுவிறு எழுத்தால் விவரித்து ஆனந்த விகடனில் 122 வாரங்கள் எழுதினார். ஒரு தொடர் இவ்வளவு நீண்ட நாள் எழுதப்பட்டதிலிருந்தே, அந்தத் தொடருக்கு வாசகர்களின் வரவேற்பு எப்படியிருந்தது என்பது புலனாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் சென்னை மாகாணத்துக்கும் இடையே அணை கட்டுமான ஒப்பந்தம் ஏற்படும் முன்பே, இருந்த சிக்கல்கள், நிபந்தனைகளில் ஆரம்பித்து, அணை கட்டுமானம் முடிப்பது வரை மிக விரிவாகவும் அழகாகவும் விவரித்து பெரும் வரலாற்றுப் புதினமாகத் தந்திருக்கிறார் எழுத்தாளர் அ.வெண்ணிலா. 150 ஆண்டுகளுக்கு முன் மிக உயர்ந்த மலைமேல் கட்டப்படும் அணைக்கு கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமங்கள், காலரா நோய் பரவி தொழிலாளர் பலரைப் பலிவாங்கிய துயரம், காட்டு மிருகங்களின் அச்சுறுத்தல், இயற்கை இடர்ப்பாடுகள் என பல இன்னல்களுக்கிடையே நடைபெற்ற பெரியாறு அணையின் கட்டுமானப் பணி எத்துணை சவால் நிறைந்தது என்பதை வாசகர்களின் கண் முன்னே நிறுத்துகிறது இந்த நீரதிகாரம். ‘முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் பென்னிகுக்' என அந்த அணை பற்றி சில வார்த்தைகளிலேயே அறியப்பட்டிருந்தது. ஆனால், அணை கட்டுமுன் இருந்த சிக்கல்களையும் அணை கட்டு மானத்தின்போது நடந்த துயரங்களையும், பெரும் முயற்சிகளையும் சொல்லிக்கொண்டு பெரும் வரலாறாகப் பாய்ந்து செல்கிறது இந்த நீரதிகாரம்!

1500 pages, Hardcover

Published January 1, 2024

5 people are currently reading
17 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (42%)
4 stars
1 (14%)
3 stars
3 (42%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Santhosh Guru.
181 reviews52 followers
October 6, 2025
Finishing Neerathigaram honestly feels like a personal milestone.

It’s a 2,000-page monster that took me almost two months to finish! I first picked it up after watching an interview with the author, and something about the story of Colonel John Pennycuick—the British engineer who built the Mullai Periyar dam—just hooked me. Shuffling between the audiobook, ebook in my daily commutes, I somehow made it to the end.

What surprised me was how addictive it was. The book has that old-school Tamil serial-in-magazines vibe—every chapter ends with a mini-cliffhanger. But more than the storytelling, it’s the perspective that hit me. We usually hear the one-sided story of the British Raj being all bad, but this novel dives into the grey zones. It shows people, both British and Indian, genuinely trying to do good amid chaos—especially during the Madurai famine and the early Swadeshi days.

I actually got curious about Pennycuick after a random stop at his memorial during a Madurai trip. I didn’t know much back then, but now I get why people still celebrate him, even calling a local festival Pennycuick Pongal. If you love historical fiction that’s rich, patient, and deeply rooted in Tamil Nadu’s past, Neerathigaram is worth every page. It’s not a short read, but it’s a rewarding one.
Profile Image for Gobinath.
34 reviews8 followers
September 23, 2024
தமிழ் புதினங்களில் மிகமுக்கியமான நாவல்.

வரலாற்றுப் புதினமென்றாலே ஓரிரண்டு தரவுகளைக் கொண்டு 1000, 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை கொள்ளைகளை "வீரம்" என்றும் அதை முன்னின்று செய்தவனை நாயகனாகவும் நிறுவ முயல்பவைகளாகவே இருக்கும். ஆனால் இது முழுக்க முழுக்க தரவுகளை அடிப்படையாக வைத்து, மனிதர்களுக்கு காலத்திற்கும் பயன்தரும் ஒரு உன்னத செயலை சொல்லிச் செல்கிறது.

குறிப்பாக வழக்கம்போல ஆங்கிலேயர்களை கொள்ளைக்காரர்களாகவும் கொடியவர்களாகவும் சித்தரிக்காமல், தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற ஆங்கில அரசும் நிர்வாகிகளும் எடுத்த முயற்சிகளை வெளிப்படையாக சொன்னது நன்று. வீண் நாட்டுப் பற்று என்ற பெயரில் வரலாற்றை திரிக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் இதுபோன்ற புத்தகங்கள் நிறைய வரவேண்டும்.

புத்தகத்தின் பெரிய குறை எழுத்துநடை. அணை கட்டுமானத்தை சுற்றி நடக்கும் கதையை தவிர மற்ற நிகழ்வுகளும் மனிதர்களும் கொஞ்சம்கூட ஒட்டவில்லை. அதேபோல் பல கிளைக்கதைகள் பக்கத்தை நிரப்புவதற்காக எழுதப்பட்டிருக்கிறது. அவைகளை கழித்துவிட்டு அணையின் கட்டுமானப் பணிகளை இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கலாம்.

ஆங்கில நாவல்கள் போல வரைபடங்களும் புகைப்படங்களும் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசியில் இணைப்பாக, நாவல்களின் முக்கிய மனிதர்கள் அதன்பிறகு என்னவானார்கள் என்று குறிப்பிட்டிருந்தால் ஒரு முழுமை அடைந்திருக்கும்.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.