நாம் கேள்விப்படும் எல்லா உண்மைக்குள்ளும் ஒரு புனையப்பட்ட கதை நூலிழையேனும் ஒட்டிக்கொண்டு இருக்கும். உண்மைக்கும் ஒரு அணிகலம் தேவை. அந்த அலங்காரம் தான் அதன்பால் நமது கவனத்தைக் கொண்டு செல்லும். புனையப்படும் கற்பனை கதைகளின் பின்னேயும் கண்டிப்பாக ஏதோ ஒரு உண்மை ஒளிந்து தான் இருக்கும். பார்த்த காட்சிகள், ரயில் ஸ்நேஹம் போலப் பாதியில் முடிந்த நட்பு , தண்டவாளமாய், விட்டு அகலாமல் உடன் ஓடும் உறவுகள், அன்றாடம் நாம் காணும் சக மனிதர்கள், நமக்கு ஏற்படும் அனுபவங்கள், சமூகத்தில் ஏற்படும் நல்லவையும், அல்லாதவையும், குழந்தைகள், விலங்குகள் என்று நம்மைச் சுற்றி இருக்கும் உலகின் தாக்கம், கற்பனையோடு இழைத்துத் தொடுத்த கதைகள் தான் உற்ற தோழி என்ற இந்தப் புத்தகம்.