இன்றைய வாசகர் பலருக்கும் அறிமுகமாகி இருக்க வாய்ப்பில்லாத வாழ்க்கையைப் பேசுகிறார் ஏக்நாத். இது அவரது எழுத்தின் சிறப்பு, வசீகரம். ஏக்நாத் சொல்லும் சம்பவங்கள், கதைகள் நவப்பட்டுப் போன இளைய வாசகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடும். இந்திய கிராமங்களின் வாழ்க்கையை நகர்மயமானவர் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல் அது. எதைப் பற்றியும் கவலையற்றதாக, பொருட் படுத்தாததாகத் தன்னியல்பில் இருப்பது ஏக்நாத்தின் எழுத்து. அவர் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே சிறியதோர் அகராதி தொகுக்கலாம்.-நாஞ்சில் நாடன்
ஏக்நாத் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், பாடலாசிரியர், நாவலாசிரியர். இளம் வயதிலேயே எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், கவிதை, சிறுகதைகளை எழுதி வந்தார். சென்னையில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் இவர், திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.