பேச்சு வராமல் தடுமாறியவள் கண்கள் கலங்கி போனது. அவளையே கூர்மையாக பார்த்தபடியே, கெண்டை கால்கள் தெரியும் அளவிற்கு உயர்த்தி செருகி இருந்த நைட்டியை இடையில் இருந்து உறுவி விட்டான்.அது அவளது பாதங்களை மறைத்து கொண்டதும், அவன் கழுத்தில் கிடந்த மப்ளரை எடுத்து அவள் மார்பை சுற்றி மாலையாக போட்டு விட்டவன், இனி இப்படி அறைகுறையா நிக்கறதை பார்த்தேன், மொத்தமா உரிச்ச கோழி மாதிரி ஆக்கிடுவேன் ஜாக்கிரதை... என விரல் நீட்டி எச்சரித்தான்.அங்கிருந்த பலரும் இவர்களை பார்த்து நிற்க, இவள் கண்கள் அவர்களை பார்த்து கலங்கி போனது. திரும்பி பாராமலே இங்க என்ன படமா காட்டறாங்க அவ அவ வேலையை பார்த்துட்டு போங்கடி... என உறுமினான். அடுத்த நொடி அந்த தெருவே வெறிச்சோடி போனது.