மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடியே இருக்கும் புல்வெளியான யாதவ நாடு. காந்தாரியும் குந்தியும் இரு முனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்திரிக்கிறது. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள். அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைத்தான் பின்னர் மைந்தர் சமர்க்களத்தில் நிகழ்த்தினர் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதியாக மாறி பெருகிச் செல்லும் மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும் அழகிய கவித்துவம் வழியாகவும் காட்டுகிறது மழைப்பாடல். பாரதத்தின் நிலம், சமூகங்கள், வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெரும் நாவல் இது.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
புத்தகம் : வெண்முரசு - மழைப்பாடல் ஆசிரியர் : ஜெயமோகன் ஓவியங்கள் : ஷண்முகவேல் வாசித்தது: venmurasu.in அச்சுப் பதிப்பு பக்கங்கள்:1013
முதற்கனலின் வெம்மை தணிந்து, மழையில் நனைந்து இதயம் குளிர்கிறது இரண்டாம் பாகத்தில்!!
இத்தனை பக்கங்களா (1013) என்று வாசிக்கத் தொடங்கும் போது தோன்றி, அதற்குள் முடிந்துவிட்டதா என்று வாசித்து முடித்தத்தபின் தோன்றியது!! அத்தனை விறுவிறுப்பாக கதை நகர்கிறது.
பொதுவாக புத்தக தலைப்பின் பெயரின் காரணம் கதையில் வருவதை வாசிக்கும் போது ஒரு நெகிழ்வு வரும். "சூழ்ந்திருந்த அனைத்துப் பனிமலைப்பரப்புகளும் 'வெண்முரசுகளாக' மாறி அதிர்ந்து ஓய்ந்தன" என்று வாசித்த போது அதே நெகிழ்வு.
நமக்கு நன்கு தெரிந்த மகாபாரதக் கதையையே இத்தனை சுவாரசியமாக வாசிக்க வைத்த ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் எழுத்துநடை, மொழி வளம், கதைக்குள் நம்மை கட்டுண்டு கிடக்க வைக்கும் திறன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவை.
அம்பையில் அணையா நெருப்பின் வஞ்சம் சுடர்விட்டு முதல் பாகம் எரிய, இரண்டாம் பாகத்தின் கதை இரண்டாம் தலைமுறைக்கு நகர்கிறது.
மழைப்பாடல் என்று கதையின் பெயர் இருப்பதாலோ என்னவோ கதை நெடுக மழையும் பொழிகிறது அனைத்து முக்கிய தருணங்களிலும்.
முதற்கனலில் நாகங்களின் உவமைகள் அதிகம் தோன்ற, மழைப்பாடலில் யானையின் உவமைகள் நிறைய இருப்பதாக தோன்றியது.
நாம் கேட்ட கதைகளில் நல்லவர்கள் தீயவர்கள் என்று மனம் ஏற்கனவே வகுத்து வைத்துவிட்ட கதாப்பாத்திரங்களின் மறுபக்கம் வாசிக்கும் போது, நன்மை தீமையை உருவாக்குவது சந்தர்ப்பங்களும்,அவர்கள் அனுபவங்கள் மட்டுமே என்று உணர முடிகிறது.
காசி நாட்டு இளவரசிகள் அம்பிகை அம்பாலிகைக்கும், சூதப் பெண் சிவைக்கும் வியாசர் மூலமாக அறப்புதல்வர்களாக திருதிராஷ்டன், பாண்டு, விதுரன் பிறக்கிறார்கள் . நான் அறிந்த கதைக்கு நுழையப்போகும் ஆர்வம் வாசிப்பை வேகம் கொள்ளச் செய்தது.அவர்கள் வளர, அவர்கள் வாழ்க்கை ஒருபுறம் நிகழ, மறுபுறம் காந்தாரி, குந்தியின் வாழ்க்கைக் கதை விரிகிறது.
காந்தாரத்தின் சுடுமணல் பாலைகள் ஆசிரியரின் வார்த்தைகளில் கோடையின் வெம்மையாக தகிக்கிறது. நாம் அறிந்த வெறுக்கும் நயவஞ்சகன் சகுனியை, நாம் அறியாத ஒரு திறன் வாய்ந்த மதியூகியாக வாசிக்க முடிந்தது.காந்தாரத்தில் பிறந்ததனால் இளவரசிகள் 11 பேரையும் காந்தாரிகள் என்று பிறந்த ஊரைக் கொண்டு அழைக்கப்படுகிறார்கள் என்பது வசுமதியை மட்டுமே காந்தாரி என்று நினைத்திருந்த எனக்கு, அழகான நான் அறிந்திராத தகவலாக தோன்றியது.
பிருதை என்ற யாதவ குலச் சிறுமியை, குந்திபோஜன் மன்னன் மகள் கொடையாக பெற்றதனாலே குந்தியானாள். அமைதியான, தன் குழந்தைகளுக்காக மட்டும் வாழ்பவள் என்று அறிந்த அவளை ஒரு தலைசிறந்த அரசியல் மதியூகியாக ஜெ.மோவின் வார்த்தைகளில் காணமுடிந்தது.
திருமணங்கள் என்பவை அரசியல் காரணங்களுக்காக, நாட்டின் பாதுகாப்புக்காக மட்டுமே. திருதிராஷ்டன் காந்தாரிகள் திருமணம், பாண்டு குந்தி சுயம்வரம் என எல்லாம் நடந்து பின் அரியணை பிரச்சனையும் தொடங்குகிறது.
பிருதைக்கு திருமணத்துக்கு முன் பிறந்த மைந்தன். நல்ல நிமித்தங்கள் கொண்டு வனத்தில் பிறக்கும் பாண்டவர்கள்,தீயநிமித்தங்கள் கொண்டு அஸ்தினாபுரியில் பிறக்கும் கௌரவர்கள் என பாரதப்போர் நிகழ்விடத்தை நிறைக்கும் அனைவரின் பிறப்பும், பாண்டு மாத்திரி மரணமும், அரசியர் வனம் புகுதலுடன் நிறைவு பெறுகிறது புத்தகம்.
மழை வழிந்தோடி இறுதியில் கடலில் சேரும். மழைப்பாடலைத் தொடர்ந்து வண்ணக்கடல் இருப்பது அதனால் தானோ?
This entire review has been hidden because of spoilers.
நீங்கள் பாரதத்தின் பரம ரசிகன் எனில் இதை தவறவிடாதீர்கள். பாண்டுவின் மரணம் மற்றும் சத்யவதி, அம்பிகை, அம்பாலிகையின் வனம் புகுவதோடு முடிகிறது இந்த இரண்டாம் பாகம். குந்தி என்ற மகத்தான ஒரு பாத்திரப்படைப்பு. காலைப் பனிப்புகை போல மோகன் அதன் மூலம் நறுவிசாக சொல்லும் கோடான கோடி விஷயங்கள். பாரதத்தின் மகத்தான பெண் பாத்திரங்களில் சத்யவதியும் குந்தியும் மிக மிக முக்கியமானவர்கள். வாசிக்க வாசிக்க வசீகர வசந்தம்
A very long book of ~1400 pages. So much about Birth and Death. Totally dominated by woman characters. Kanthari, Kunthi, Sivai, Madhri, etc. live long after the book is completed. The book speaks so much about motivations, social rules, urge to win kingdoms, Brahminism, life of kings (kshatriyans) vs life of simple peasants (yadhavars), etc. in so much of detail.
Sakuni, Dhirudhirashtran, Paandu, Vidhuran, will live in my thoughts but not as much as the women characters.
For most authors, writing this one book alone would be a life time achievement. What made JeMo to complete this, and move on to the full Mahabharatham in full, is a mystery. He is such a gifted author, whose capability and output is beyond human comprehension. It may take a long for me to come out of this book and these characters.
May write a detailed Tamil blogpost on this later. For now, this small review is in English, so as to motivate some voracious readers in my list, who can understand but cannot read Tamil, to pick this if available as an audio book.
மழைப்பாடல் என்பது மகாபாரதத்தின் உணர்வுப் பின்னணியை உருவாக்கும் நாவல். இது காந்தாரம் என்ற பாலைவனத்தின் புயல்களால் அலைக்கழிக்கப்படும் நிலம் மற்றும் யாதவ நாடு என்ற மழைபெய்யும் புல்வெளி ஆகிய இரண்டு பாரம்பரிய உலகங்களை எதிரெதிராக சித்தரிக்கிறது. இரு பெண்கள்—காந்தாரி மற்றும் குந்தி—இந்த உலகங்களின் முனைகளாக நிற்கிறார்கள். அவர்கள் அரசியல், குடும்ப, மற்றும் உணர்வுப் போராட்டங்களின் வழியாக மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைக்கிறார்கள்.
முக்கியமான கதாபாத்திரங்கள் காந்தாரி - த்ருதராஷ்டரின் மனைவி, காந்தார நாட்டின் இளவரசி. - பார்வையற்ற கணவருடன் வாழும், தன்னலமற்ற, ஆனால் உணர்வுப் போராட்டம் கொண்ட பெண். - மழைப்பாடல்’ல், காந்தாரி ஒரு பழமையான மரபின் சின்னம், ஆனால் அதே நேரத்தில் தர்மத்தின் புதிய வரையறை.
குந்தி - பாண்டுவின் மனைவி, யாதவ மரபின் பெண். - தன்னுடைய ஆசைகள், தர்மக் குழப்பங்கள், மற்றும் தனிப்பட்ட முடிவுகள் மூலம் மகாபாரதத்தின் முக்கிய திருப்பங்களை உருவாக்குகிறாள்.
அம்பிகை, அம்பாலிகை, சத்யவதி - பழைய தலைமுறை பெண்கள், அவர்கள் அரசியல் மற்றும் குடும்ப மரபுகளின் பின்னணியில் நிற்கிறார்கள். - ஜெயமோகன் அவர்களை அன்னையர் உணர்ச்சிகளின் போராளிகள் என சித்தரிக்கிறார்.
பாண்டு பீஷ்மரால் திருமணம் செய்யப்பட்டவர். பிள்ளைகள் பிறக்க முடியாத மனச்சோர்வுடன் போராடுகிறார். பாண்டவர்களின் பிறப்புக்கு வழிகாட்டி.
மாத்ரி பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன், சகதேவன் ஆகியோரின் தாயார். பாண்டு மரணத்திற்கு பின் தன்னலமற்ற முடிவெடுக்கிறார்.
த்ருதராஷ்டர் கண்குருடான அரசன். மகனின் மீது பாசம், ஆனால் அதர்மத்தை எதிர்க்க முடியாதவர். அரச மரபின் சிதைவுக்கான சாட்சி.
விதுரர் த்ருதராஷ்டரின் சகோதரன். தர்மத்தின் குரலாக செயல்படுகிறார். உண்மையை பேசும் தைரியம் கொண்டவர்.
தர்மன் (யுதிஷ்டிரன்) தர்மத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர். பாண்டவர்களின் தலைவராக செயல���படுகிறார். சோதனைகளுக்கு நேரில் செல்வவர்.
பீமன் உடல் வலிமை மிகுந்தவர். சகோதர பாசம் மற்றும் கோபம் இடையே சமநிலையை தேடுகிறார். அதர்மத்திற்கு எதிரான சக்தி.
துரியோதனன் த்ருதராஷ்டரின் மகன். மழைப்பாடல்’ல் அவரது பிறப்பு ஒரு மாயமான, அதிசயமான நிகழ்வாக சித்தரிக்கப்படுகிறது. பிறப்பிலிருந்தே அதர்மத்தின் சாய்வுடன் உருவாகிறார்.
இலக்கிய மற்றும் தத்துவ அடுக்குகள் - மழை என்பது இங்கு ஒரு உணர்வுப் பிரதிபலிப்பு—தூய்மை, மாற்றம், மற்றும் புதிதாக பிறக்கும் தர்மம். - பாலைவனமும் புல்வெளியும்—இரண்டும் உணர்வுகளின் நிலங்கள். - பெண்கள் இங்கு சமர்க்களத்தின் முன்னோடி வீரர்கள்—அவர்கள் உணர்வுகளில் போராடுகிறார்கள், பின்னர் அந்த போரின் எதிரொலி தான் மைந்தர்களின் யுத்தமாக மாறுகிறது.
மொழி மற்றும் நடையில் - ஜெயமோகனின் எழுத்து கவிதைபோல் ஓடும், நுணுக்கமான, மற்றும் தத்துவ சிந்தனைகளை தூண்டும். - பழமையான தமிழ், சமூக மாற்றங்களை பிரதிபலிக்கும் உரை. - ஒவ்வொரு பக்கமும் ஒரு உணர்வுப் பயணமாக இருக்கிறது.
பாண்டுவின் இறுதி: - பாண்டு, தன்னுடைய பழைய தவறுகளுக்கான மனவெறுப்பில் ஆழமாக சிக்கியிருப்பவர். - மாத்ரியுடன் ஒரு உணர்வுப் பிணைப்பு கொண்ட நிலையில், அவளிடம் பாசம் மற்றும் ஆசை கலந்த ஒரு நெருக்கமான தருணத்தில், தவத்தின் விதிகளை மீறுகிறார். - இதன் விளைவாக, தன்னுடைய தவத்தின் பலனாக உடல் விட்டு உயிர் பிரிகிறான். - மாத்ரி, பாண்டுவின் மரணத்துக்குப் பின் தன்னலமற்ற முடிவெடுத்து, தன்னையும் தீயில் அர்ப்பணிக்கிறாள்.
செல்வமாக நிலமாக அரச குல மக்களாக தன்னை விரித்து கொள்ளுதலின் பொருட்டே ஒரு அரசு நிலைக்க முடியும். தன்னை விரித்து கொள்வதில்லையே அதன் ஆன்மாவும் அடங்கி இருக்கிறது. அஸ்தினா புரியும் இதற்கு விதிவிலக்கல்ல.
சத்தியவதியும் பீஷ்மரும் திருமணங்களால் தான் அரசு காக்கப்படுகிறது என்பதை முடிவெடுத்து திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவிர்க்கும் மணப்பெண்கள் தேடுகிறார்கள்.
திருதராஷ்டிரனுக்கு பெண் கேட்டு பீஷ்மர் செல்வதும் அங்கு காந்தாரத்தின் அறிமுகமும் சகுனியின் அறிமுகமும் நிகழ்கிறது. நாம் மனதில் கற்பனை செய்து வைத்துள்ள சகுனி போல் இவர் இல்லை.
திருதராஷ்டிரனை மணந்து கொள்ளும் காந்தாரி தன் கண்களையும் கட்டிக் கொள்வது உச்சம்.
குந்தியை சுயம்வரத்தில் பாண்டு வென்றெடுப்பது சிறப்பு. குந்தி தான் எப்போதும் பாண்டுவிற்கு அன்னைஸ்தானத்தில் இருப்பதால் இன்னொரு பொண்ணை மணமுடித்தாக வேண்டும் என்று முடிவெடுப்பது ஆச்சரியம்.
திருதராஷ்டிரனுக்கு மன்னனாவதில் வரும் சிக்கல்களும்,பாண்டு அரியணை ஏறி வனம் புகுதலும், பஞ்சபாண்டவர்களின் பிறப்பும், கௌரவர்களின் பிறப்பும், இந்த அத்தியாயத்தில் முழுமை அடைகிறது.
போன்ற அத்தியாயத்தில் பீஷ்மர் போல இதில் குந்தியின் கதாபாத்திரம் கையாளப்பட்டிருக்கிறது.