"ஆத்வி.. கொஞ்சம் வேகமா நடடா, சீக்கிரம் போனா தான் நம்ம ரெண்டு பெரும் இங்கிருந்து தப்பிக்க முடியும் விஷயம் தெரிஞ்சு ஆளுங்க இந்நேரம் தேட ஆரம்பிச்சு இருப்பாங்க உன்ன பத்திரமா அழச்சிட்டு என் உயிர் போனாலும் பரவாயில்லை நீ இங்கிருந்து தப்பிச்சு போயிடனும்" என்று மூச்சுக்காற்று அனல் பறக்க ஆத்மிகா கையை பிடித்துக் கொண்டு எப்படியாவது இங்கிருந்து தப்பித்து விட வேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தாள்
அபிலாஷா..
அவள் சொல்வதைக் கேட்ட ஆத்மி எதுவும் பதில் சொல்லாமல் கண்களில் இருந்து கண்ணீரோடு பிறகு தானே சமாதானம் செய்து கொண்டு..
"அக்கா உதவி பண்ணவங்களுக்கு உபத்ரம் பண்ண கூடாதுன்னு சொல்லுவாங்க என்னோட பாவப்பட்ட பிறவி நான் இப்படித்தான் இருக்கணும்னு