“அதி ப்ளீஸ்... போனை வச்சுடாதீங்க... நான் சொல்றதை கேளுங்க..” “கேட்க கூடிய சூழலை நீயே கெடுத்துக்கிட்டடி. நீயும் சை உன் பேச்சுக்களும் சரி எல்லாமே பொய் தான். ச்சீ என்கிட்டே இப்படி கெஞ்சிட்டு இருக்கியே உனக்கு வெட்கமா இல்லையா...?” என்று இன்னும் காய்ந்தான் அவளை. “உன்கிட்ட கெஞ்சுறதுல எனக்கு ஏன் வெட்கம். அதோட என் குழந்தைக்காக தானே கெஞ்சுறேன். இதுல என்னால மான அவமானம் எல்லாம் பார்க்க முடியாது அதி. என் குழந்தையை என்கிட்டயே குடுத்துட்டேன். ப்ளீஸ்... உன் கால்ல வேணாலும் விழறேன்” என்று மேலும் கெஞ்சியவளின் பேச்சை இடை வெட்டியவன், “அது என்னோட குழந்தை. உனக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை...