நிரந்தர வேலை இல்லாமல் கிடைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் சூர்யா. பள்ளி படிப்பை முடித்துக் கொண்டு குடும்ப சூழ்நிலையால் வேலைக்குச் செல்லும் சரண்யா. எதிர்பாராமல் தன் தாய்மாமன் சூர்யாவை திருமணம் செய்யும் சரண்யா, திருமணமாகி சில மாதங்களிலேயே வீட்டை விட்டு செல்கிறாள்.தன் மனைவியை தேடிச்சென்ற சூர்யா அவளை வீட்டுக்கு அழைத்து வந்தானா..? நிரந்தர வேலை இல்லாமல் இருக்கும் சூர்யாவை சரி செய்தாலா சரண்யா..? இதற்கிடையில் அவர்களின் வாழ்க்கையில் வந்த பிரச்சனையை இருவரும் சமாளித்தார்களா..? சூர்யா சரண்யாவிற்கு விடியல் தந்தானா? இல்லை சரண்யா சூர்யாவிற்கு விடியல் தந்தாளா? என்பதை அறிந்து கொள்ள "உன்னாலே என் விடியல்" வாசியுங்கள்.
கதை அருமை.சூர்யா தன் மனைவி சரண்யாவிற்காக தன் ஊர் தொழில் எல்லாம் மாற்றிகொள்வது, அவர்களின் புரிதல் என்று கதை களம் நன்றாக உள்ளது. சரண்யாவின் தம்பி மணி அவர்களின் பாசம்,மற்றும் இதர நட்புகளின் தோழமை குறிப்பிட தக்கது.