எதிர்பாராமல் அது நடந்து முடிந்துவிட்டது. அந்தக் குடும்பத்தில் யாருமே அதை எதிர்பார்க்கவில்லை! துரை நன்றாகத்தான் இருந்தான். நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக எந்த நேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு மாரடைப்பு வரும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா? முதல் நாள் இரவு வரை நன்றாகத்தான் இருந்தான். வழக்கம் போல மூன்று சப்பாத்தி என சாப்பிட்டு, பால் குடித்தான். பத்து மணி வரை டிவி பார்த்தான். பிறகு வந்து படுத்தான். உடனே வழக்கம் போல உறங்கியும் போனான்! காலை நாலரைக்கு சந்திரிகா எழுந்து வீட்டு வேலைகளைத் தொடங்கி விட்டாள். துரைக்கு ஏழு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டாக வேண்டும்! ஏழரைக்கு பேக்டரியில் 'பன்ச்' செய்தாக வேண்டும்! அஞ்சர