“அடுத்த வாரமே அமெரிக்கா போகணும். புது ப்ராஜக்ட் வந்திருக்கு தாரா!” “எப்ப திரும்பி வருவீங்க?” “இது பதினெட்டு மாச ப்ராஜக்ட் தாரா!” “ஒண்ணரை வருஷமா?” “ஆமாம்! இதை முடிச்சுட்டுத் திரும்பி வந்தா, வாய்ப்புகள் அதிகம். எதிர்காலம் பளிச்சுன்னு இருக்கும் தாரா!” “இதை நான் எதிர்பார்க்கலை மகேஷ்!” “உனக்கு இதுல சந்தோஷம் இல்லையா தாரா?” அவள் பேசவில்லை. “ஏன்மா?” “ரெண்டு பேரும் விரும்பறதை வீட்ல இன்னும் தெரிவிக்கல” “நான் திரும்பி வந்தபிறகு சொல்லிக்கலாம். உடனடியா கல்யாணத்தையும் நடத்திடலாம். என்ன சொல்ற?” “அது கஷ்டம் மகேஷ் எனக்கு நாள் தள்ளிப் போகுது. இன்னிக்கு முப்பத்தி எட்டு நாளாச்சு. டிசம்பர் 20ம் தேதி ரெண்டு பேரும் பட்ட அவசரம் இப்ப வேற மாதிரி வந்திரு