நாக்பூரின் நாக வம்சத்தை சேர்ந்தவள் ரத்தி. அரண்மனை குடும்பத்தை சேர்ந்த கணேசன், ரத்தியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு ஆறு வயதில் ஒரு அழகான பெண் குழந்தை தியா. தியாவோ ஒரு நோயாளி. அவள் அடிக்கடி இரத்த வாந்தி எடுப்பவள். தியாவிற்கு ஏன் இந்த கொடுமை என்ற பரிதவிப்பில் ரத்தியும் கணேசனும் ஒருபுறம். மறுபுறம் ரத்தியையும் தியாவையும் அழித்தே தீர வேண்டும் என்று குலசேகர ராஜா நினைக்க காரணம் என்ன? தன் மருமகனான கணேசனை தன் வழிக்குக் கொண்டு வந்து தன் மகள் மஞ்சுவை திருமணம் செய்து வைக்க இவர் செய்த சூழ்ச்சிகள் என்ன? இந்த சூழ்ச்சியில் சில அமானுஷ்யங்களும் சேர்வதால், ரத்தி, தியா மற்றும் கணேசனின் வாழ்க்கை நிலைகுலைகிறது. இந்த சூழ்ச்சியில் இருந்து இவர்கள்
புத்தகம்: அரண்மனை குடும்பம் எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் பதிப்பகம்: திருமகள் நிலையம் பக்கங்கள்: 656
💥 இந்த புத்தகம் இரு வேறு தளங்களில் பயணிக்கிறது. ஒரு புறம் நாகேந்திர நல்லூர் என்னும் கிராமம். மறு புறம் இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு.
💥 நாகேந்திர நல்லூரில் உள்ள சிவன் கோயிலில், கிரகணத்தின் போது பாம்பு லிங்கத்திற்கு அர்ச்சனை செய்கிறது. இதை காண்பதற்காக அசோகமித்திரன் அந்த ஊருக்கு வந்தார். அங்கே அவருக்கு என்ன நடந்தது என்பது ஒரு கதை.
💥 சேலத்தில் மிகவும் வசதியான குடும்பம் கணேசனின் குடும்பம். ரத்தி என்னும் வட இந்திய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். அந்தஸ்து, கௌரவம் என்று கணேசனின் குடும்பம் ரத்தியை ஏற்றுக் கொள்ளவில்லை. அவளை கொலை செய்ய கூட திட்டம் மேற்கொள்ளப்பட்டது . அவர்களின் குடும்பத்திற்கு இறுதியாக என்ன ஆனது என்பதே அரண்மனை குடும்பம்.
💥 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - ஏழாவது புத்தகம் இது.
💥 இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
The master of the supernatural aka "amaanushyam" [in Tamil] does it again ! ! !
All the key elements he generally adds in his novels are there - an upper middle class / rich household, humans who understand & blend with the "supernatural", a gang of antagonists etc.,. He understand well how to enact his screenplay to keep each chapter thrilling and filled with suspenses; you just can't put the book down! I loved how evil the entire aranmanai family is - their thought processes are so coherent as a group and they have no remorse. It is excellent screen writing to see how it also becomes contagious in the family that each one picks up evil thoughts from the other and keeps getting better at it - Ex: Kulasekaran's wife Sundaravalli starts off as very naive and becomes an idea powerhouse towards the last few chapters.
To me the only let down factor was the climax when Ganesan acts as "know-all" and it was a risky plot if Rathi was indeed pushed into the well. I was expecting that his mental faculties were genuinely impacted by the medication and a divine intervention will set it right. The other aspect was the parallel thread with the Ashokamithran and Ganapaadigal - may be it's me but I couldn't get the "story line" connect between the two stories.