ச.துரை (பிறப்பு: டிசம்பர் 15, 1991) தமிழ்க்கவிஞர், சிறுகதையாசிரியர். தொடர்ந்து கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார்.
ச.துரை அப்துல் ரகுமானின் கவிதைகள் வழியாக இலக்கிய அறிமுகம் அடைந்ததாகக் குறிப்பிடுகிறார். முதல் கவிதை 2013-ல் பாஸோ இதழில் வெளியானது. இதன் தொடர்ச்சியாக கல்குதிரை, உன்னதம், ஆனந்த விகடன், நடுகல், காற்றுவெளி போன்ற சிற்றிதழ்கள் மற்றும் வணிக இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். பின்னர் இணைய இதழ்களான கனலி, ஓலைச்சுவடி, அகழ், அரூ ஆகியவற்றில் தொடர்ச்சியாக கவிதைகளும் சிறுகதைகளும் எழுதி வருகிறார்.தனது இலக்கிய படைப்புகளில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் தனது ஆதர்சங்களாகவும் ஆத்மநாம், ஞானக்கூத்தன், தேவதச்சன், பிரமிள், அப்துல் ரகுமான், ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
ச.துரையின் முதல் கவிதை தொகுப்பு 'மத்தி’ சால்ட் பதிப்பகம் வெளியீடாக 2019-ல் வெளியானது. 2022-ல் சங்காயம் என்னும் கவிதைத் தொகுதி எதிர் வெளியீடாக பிரசுரமாகியது.
விருது 2019-ம் ஆண்டில் இளம்கவிஞர்களுக்கு வழங்கப்படும் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுக்கு மத்தி தொகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு விருதளிக்கப்பட்டது.