வரன் பார்த்து வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாமாவையும் அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டாள் காவேரி. மாமா வீட்டுக்கு விட்டல் வந்தான். அவனுக்கு அப்பா வழி, அம்மா வழி எல்லா சொந்தங்களும் பிடிக்கும். யாரையும் புண்படுத்த மாட்டான். “ஸாரி மாமா! காவேரி ஓவரா பேசிட்டா!” “விட்ரா! மனசு வலிக்குது!” “அத்தை நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க!” “இல்லைடா விட்டல்! சொந்தம் எப்படீடா விட்டுப்போகும்? உங்கப்பாவும் போன நேரத்துல உங்கம்மாவை விட்டுத்தர முடியுமா? ஆனாலும் காவேரி இப்படி பேசக்கூடாது!” “தம்பி! யசோதா அவளை அடக்கணும்! வளர்ப்பு சரியில்லை!” “மாமா! அம்மா பாவம்! அவங்களைச் சொல்லாதீங்க!” “நான் உங்கம்மாவை தப்பா பேசலைடா! ஆனாலும் மூத்த பொண்ணு! இத்தனை கோபமும், ஆத்திரம