“என்னடி… யாரும் அரசியல்வாதி, நம்ம ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்காங்களா என்ன?” என்று டியூட்டி மாறி வந்த மருத்துவமனை ஊழியர், தன் தோழியிடம் கேட்க. “அரசியல்வாதி இல்லடி… அரசியவாதியோட பொண்டாட்டி.” “அப்படியா, யாரு?” “நம்ம அரசனூர் தலைவர் சக்திவேல் பாண்டியன் இருக்காரு இல்ல… அவரோட வைஃப்.” “ஓ! அவரா, பாத்திருக்கேன் பாத்திருக்கேன். ஏய் அப்பா! சினிமா ஹீரோ தோத்துப் போவாங்க. என்ன உயரம்? அதுக்கு தகுந்த ஒடம்பு, வெள்ள வேட்டி சட்டை, கையில் தங்க காப்புனு.. கழுத்துல புலிபல் செயின்னு.. ஆளு பாக்கவே அத்தன கம்பீரமா, ஆள அசத்துற மாதிரி இருப்பாங்க. சின்ன வயசுக்காரர் தான். நான் கல்யாணம் பண்ணும்போது நீங்க எல்லாம் எங்கடா இருந்தீங்கனு, அவங்கள பாத்தப்ப எனக்குள்ள அப்பட