நேர்மையும் தைரியமும் கொண்ட காவல்துறை அதிகாரியான நாயகன் ஈஸ்வர். சமுதாயத்தை சீரழித்திடும் போதை பொருள் வழக்கை விசாரித்திட ஷில்லாங் கில் இருந்து மாறுதல் ஆகி வருகிறான். வந்த இடத்தில் வேலையோடு காதலும் சேர, ஊடலும் கூடலும் என செல்லும் போதே காதலியின் பின்னே இருக்கும் பிரச்சனையையும் அறிகிறான். அதை அறிந்து பிரச்சனைக்கு தீர்வை கொடுத்தானா?, அதோடு போதை விவகாரத்தில்
கயவர்களின் மிரட்டலும் மோதலும் என அவன் தனது பணியை வெற்றிகரமாக முடித்தானா என்பதை கதையை வாசித்து தெரிந்திடலாம் நட்பூக்களே.